தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்11- 15

ண்ணில் காந்த சக்தியுடன் ....டமையை மூச்சாய் கொண்டு....
திரவன் முக மலர்வுடன் ஆசியுடன் ...
ண்ணியத்துடன் பணிகளை தொடர்வோம் ....!!!
ட்டளை செய்துவிட்டு நீ மட்டும் ....
டப்பாட்டில் இருந்து விலக்கிவிடாதே .....
ண்டதே காட்சி கொண்டதே கோலமாகிவிடதே ....
ண்ணால் கண்டதும் கேட்டதும் பொய் .....!!!

ரும்புபோல் பேச்சில் இனிமையும் .......
திரவன் போல் மனதில் ஒளிமையும் .........
ற்பூரம் போல்சிந்தனையில் விரைவும் .......
ல்வியும் உடையவனே மாமனிதன் .......!!!

ம்பீரம் என்பது உடல் அல்ல ,செயல் .....
ண்ணியம் என்பது பேச்சல்ல ,நடத்தை ....
ருணை என்பது உதவியல்ல ,அன்பு ......
டவுள் இருப்பது வெளியே இல்லை ,உள்ளே ......!!!

----
காற்றை போல் பலமாய் இரு ....
காற்றை போல் மறைமுகமாய் இரு ....
காற்றை அசுத்தபடுத்தாதே .....
காற்று போனால் பேச்சு போகிடும் ....!!!

காடுகளை அழிக்காதீர் ....
காடு மிருகங்களின் வீடு ......
காடுகளை போணுவோம் .....
காடு சமூகத்தில் பொதுச்சொத்து .......!!

காக்கை போல் ஒன்று கூடி வாழ்வோம் ....
காக்கை போல் கற்புடன் வாழ்வோம் ....
காக்கைக்கு கண்மணி ஒன்று பார்வை தெளிவு ......
காக்கை போல் சூழலை பாதுகாப்போம் ........!!!

காதல் என்பது இருபால் கவர்சியல்ல .....
காதல் எல்லாவற்றிலும் அன்பு செலுத்துவது ....
காதல் செய்யுங்கள் இயற்கைமீது ....
காதலோடு காலமெல்லாம் வாழ்ந்திடுவோம் ....!!!
+

இயற்கை மேல் அன்பு செலுத்துவோம் 
இயற்கை கவிதை 


----
கிழக்கில் இருந்து ஆதவன் ....
கிழந்தெழும்பும் போதே ....
கிழம்பிவிடு... போராடு ....
கிழக்கின் ஆதவன் நீதான் ....!!!

கிரகதோசத்தை காரணம் காட்டி ....
கிடைக்க பெறும் வாய்பை இழக்காதே ...
கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்து .....
கிரகபதி என்றும் நீதான் .....!!!

கிரகித்தல் திறனை வளர்த்துக்கொள் .....
கிராமமாக அறிவை  பெற்றுக்கொள் ....
கிலியை முற்றாக அறுத்து எறி ......
கிருபாகரனின் கிருபை கிடைக்கும் ....!!!

கிறுக்கன் என்று பெயர் எடுக்காதே ....
கிரக சித்திரம் நிம்மதியை கெடுக்கும் .....
கிரக பெயர்ச்சி வானில் ஏற்படும் நிகழ்வு ......
கிரகப்பெயர்ச்சியை சாட்டி வாழாதே ....!!!


-----
கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!

கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!

கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!

கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும் .....!!!


-----

குப்பையில் போட்டாலும் ....
குண்டுமணி மங்காது .....
குடிசையில் வாழ்ந்தாலும் ....
குடிகள் போற்றும்படி வாழ்.....!!!

குடி குடியை கெடுக்கும் ....
குணம் கெட்டாலும் குடி கெடும் .....
குப்பை கூடினாலும் குடி கெடும் ....
குருவோடு பகைக்கின் குடி கெடும் ....!!!

கும்பிடு பெற்றோரை கும்பிடு .....
குரல் கொடு அநீதிக்கு குரல் கொடு ....
குறிப்பெடு படிப்பில் குறிப்பெடு.....
குறள் வழிவாழ் குறிக்கோளோடு வாழ் ....!!!

குற்றம் செய்யாதே தலை குனியாதே ....
குன்னம் (அவமானம்) படாதே அவதி படாதே ....
குறிக்கோள் ஒன்றில்லாமல் வாழ்ந்து பழகாதே ....
குருவின் துணையிலாமல் வித்தை பழகாதே.....!!!


----

கூடு துறந்து போனால் .....
கூச்சலிட்டு பயனில்லை ....
கூட்டுறவு வாழ்கை முறையில் ....
கூச்சலிடல் தவிர்க்க முடியாது ....!!!

கூடா ஒழுக்கம் வாழ்க்கைக்கு கேடு .....
கூட்டு குடும்பம் வாழ்கைக்கு பலம் .....
கூடி பேசுதல் சச்சரவை கொண்டுவரும் .....
கூடி பேசினால் மனக்குழப்பம் தீரும் .....!!!

கூத்தாடி பிழைப்பது குற்றமில்லை .....
கூத்தாடியே ஊர் சுற்றுவது கேவலம் .....
கூத்து தமிழனின் பாரம்பரியம் .....
கூட்டத்தோடு கூத்தை ஆதரிப்போம் ....!!!

கூக்குரல் கூட்டத்தில் எழுந்தே தீரும் .....
கூனல் முதுமையில் வந்தே தீரும் .....
கூந்தல் என்றால் உதிர்ந்தே தீரும் .....
கூட்டம் என்றால் குழப்பம் இருந்தே தீரும் .....!!!


----

கெடுதி கொண்ட உணவுகள் வேண்டாம் ....
கெடுதி கொண்ட உணர்வுகள் வேண்டாம் ....
கெடுதி என தெரிந்த செயல்கள் வேண்டாம் ....
கெடுதி கொண்ட எண்ணங்கள் வேண்டாம் ....
கெடுதிக்கு கெடு வைக்காமல் வாழ்ந்திடுவோம் .....!!!

கெட்ட உணர்வால் கெட்டார் கோவலன் ....
கெட்ட எண்ணத்தால் கெட்டனர் கௌரவர் .....
கெட்ட செய்யலால் கெட்டார் ராவணன் ....
கெட்ட நடத்தையால் கெட்டுப்போகாதே .....
கெட்டவன் என்றபெயர் சடுதியில் நீங்காது ....!!!

கெச்சைக்கு தேர் கொடுத்தான் பாரி ....
கெட்டியாய் வள்ளல் பெயர் பெற்றான் பாரி ....
கெம்பி செய்யும் செயல்களால் கெட்டவர் அதிகம் ......
கெக்கலித்து சிரிக்கவைக்கும் செயல்வேண்டாம் ....
கெடியுடன் கெழி கொண்ட வாழ்க்கை வாழ்வோம் ....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,