இடுகைகள்

ஏப்ரல் 5, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு நிமிட உலகம் 06

ஆறாம் அறிவு  இதுதானா ...? --- ஆறறிவை பெற்ற மனிதன் .... ஆடையால் மானத்தை காக்கிறான் .... ஆடையே போடாத மிருகத்திடம் .... ஆறறிவு மனிதனிடம் இல்லாத .... அற்புத பண்பு இருக்கிறதே -அவை ... கற்பழிப்பில் ஈடுபடுவதில்லை ....!!! மேலாடையாய் தம் தோலை .... மறைத்து மானத்தை காக்கும் .... மிருகங்களின் தோலை மனிதன் .... மேலாடையாய் போடுகிறான் .... இருந்துமென்னபயன்...? மேலான சிந்தனைகள் இல்லையே .... பகுத்தறிவு என்ற ஆறாம் அறிவை ... மனிதனுக்கு பறித்துண்ணத்தான் ... கொடுத்தானோ ....? ^^^ ஒரு நிமிட உலகம் ...............வாழ்வியல் கவிதை **ஆறாம் அறிவு இதுதானா ...? ** + கவி நாட்டியரசர் கே இனியவன் 

ஒரு நிமிட உலகம் 05

ஆடையே மனித குணம் -- விதம் விதமாய் ஆடைகள் .... வண்ண வண்ண நிறங்கள் .... காலத்துக்கேற்ற நாகரீகங்கள் .... ஆடைகள் வண்ணங்களை .... மட்டும் தோற்றுவிப்பதில்லை .... மனித எண்ணங்களையும் .... தோற்றுவிக்கும் ...... "ஆடைகள் உடலை மட்டும் " மறைப்பதில்லை -பிறர் மனதையும் மறைக்க வேண்டும் ....!!! ஆடை பாதி ஆள் பாதி ... என்றாகள் எம் முன்னோடிகள் .... அத்தனை உண்மை பார்த்தீர்களா ..? ஆடை அலங்காரம் ஒருவனின் .... எண்ணத்தை வெளிப்பதும் ... என்பதையே அப்படி சொன்னார்கள் ....!!! ஆடை ஆயுளை கூட்டவேண்டும் .... அறிவை அதிகரிக்க வேண்டும் .... அன்பை பெருக்க வேண்டும் .... கலாச்சாரத்தை வளர்க்கவேண்டும் .... ஒழுக்கத்தை பேணவேண்டும் ....!!! ^^^ ஒரு நிமிட உலகம் ...............வாழ்வியல் கவிதை **ஆடையே மனித குணம் ** + கவிப்புயல் இனியவன் 

கடல் வழிக்கால்வாய் 04

-------------------------------- கடல் வழிக்கால்வாய்  -------------------------------- .........ஒரு மரணம் மறு ஜனனம்  ....... ^^^^^^^^^^^^^^^^^ மழைத்துளி மரணமே .... பயிரின் ஜனனம் .... பயிரின் மரணமே .... வாழ்க்கை ஜனனம் ....!!! பூவின் மரணமே .... காயின் ஜனனம் .... காயின் மரணமே .... கனியின் ஜனனம் ....!!! சூரியனின் மரணமே .... சந்திரனின் ஜனனம் .... சந்திரனின் மரணமே .... பகலின் ஜனனம் ....!!! பழமையின் மரணமே .... நவீனத்தின் ஜனனம் .... நவீனத்தின் மரணமே .... உலக அழிவின் ஜனனம் ....!!! அறியாமையின் மரணமே ..... அகந்தையின் ஜனனம் ... அகந்தையின் மரணமே ..... ஞானத்தின் ஜனனம் .....!!! & கடல் வழிக்கால்வாய்  ஆன்மீக கவிதை  கவிப்புயல் இனியவன்

கடல் வழிக்கால்வாய் 03

கடல் வழிக்கால்வாய்  -------------------------------- .........சிலுவை சுமக்கும் மனிதன்....... ^^^^^^^^^^^^^^^^^ மனிதனின் எல்லா செயல்களும் .... சிலுவையாக மாறுகின்றன .... எல்லா விளைவுகளும் ஆணியாக.... அறையப்படுகின்றன....!!! குடும்பம் என்னும் உறவை .... சிலுவையாய் சுமக்கிறான் .... அன்பு என்னும் ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! கல்வி, பதவி, என்னும் .... சிலுவையை சுமக்கிறான் ..... அதிகாரம் என்னும் ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! உழைப்பு, வருமானம் எனும் ... சிலுவையாய் சுமக்கிறான் .... விரத்தி நோய் என்னும் ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! போட்டி வெற்றி என்னும் .... சிலுவையாய் சுமக்கிறான் .... பகைமை ,பொறாமை ,ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! அத்தனை சுமைகளையும் .... சுமக்கும் மனிதனுக்கு .... விடுதலை ஒன்றே விடுதலை .... ஓடும் புளியம்பழம் போல் .... வாழ்வதே விடுதலை .....!!! & கடல் வழிக்கால்வாய்  ஆன்மீக கவிதை  கவிப்புயல் இனியவன்

ஒரு நிமிட உலகம் 04

தப்புக்கணக்கு  ----- தூரத்தில் இருப்பதிலும் .... மறை பொருளாய் இருப்பதிலும் .... எப்பவுமே மனித மனத்துக்கு ..... ஒரு இச்சையுண்டு....!!! எனக்கு அது விதிவிலக்கல்ல .... நிலாமீது ஒரு காதல் .... விண்மீன்கள் மீது மோகம் .... இரண்டையும் ரசிப்பதற்கு .... கனவு விமானத்தில் ... விண் மண்டலம் சென்றேன் .....!!! நிலவருகே சென்றேன் .... வா என்று அழைகவில்லை ..... அவள் மென்மை அழகில் .... மயங்கினேன் என்னை .... மறந்து கவிதை எழுதினேன் .....!!! மெல்ல சொன்னது நிலா .... அதிகம் என்னில் காதல் .... கொள்ளாதே - எனக்கும் ... இருட்டு உண்டு என்னுள் ... இருளும் உண்டு .......!!! நிலா அருகில் துடித்து .... நடித்துகொண்டிருந்த .... விண் மீன்கள் கண்களை ... சிமிட்டி சிமிட்டி என்னை .... அழைத்துக்கொண்டிருந்தன ..... அருகில் சென்றேன் ..... தள்ளி போய்விடு என்று ... கத்தியது .....!!! திகைத்து நின்றேன் .... நீதானே என்னை கண்ணால்... சிமிட்டி சிமிட்டி வா வா ... என்றாய் இப்போ திட்டுகிறாயே ....? போடா மூடனே .... என் குணவியல்பு அதுவே .... நீ தப்பாக நினைத்தது -என்  தப்பில்லையே ...??? மனித மனம் இப்படித்தான் ... அருகில் உள்ள அழகை ரசிக்காது ...

ஒரு நிமிட உலகம் 03

பிறப்பும் இறப்பும் சமன் --- இறந்த பிணத்தை ..... இறக்கப்போகும் பிணங்கள் .... ஒன்றுகூடி ஓலமிட்டன .....!!! இறந்த பிணம் ...!!! கோபத்தில் பேசத்தொடங்கியது ...... இறக்கபோகிறவர்களே.... வாருங்கள் இறக்கபோவதற்காக....? பிறப்பு இனிமையானது .... இறப்பு கொடுமையானது .... என்ற எண்ணத்தில் ஒலமிடாதீர் .... பிறப்பு இயற்கை தந்த பரிசு .... இறப்பு இயற்கை தந்த கொடை..... புரிந்து கொண்டவனே ஞானி ....!!! எல்லா உயிரும் ஒருநொடி .... தொடக்கம் எல்லா உயிரின் .... அடக்கமும் ஒரு நொடி தான் ..... அந்த ஒருநிமிடத்தில் தான் .... உலகமே இயங்குகிறது ......!!! ^^^ ஒரு நிமிட உலகம்  ...............வாழ்வியல் கவிதை  ** பிறப்பும் இறப்பும் சமன் ** + கவிப்புயல் இனியவன்