இடுகைகள்

மார்ச் 1, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னவனே என் கள்வனே 08

ஆகாய எரிகல்...... கண்ணில் விழுந்தால்..... அடுத்த நாள் அதே நேரம்.... வரைக்கும் கண்ணில்..... இருந்து வலிதருமாம்.....!!! ஆகாய எரிகல்லாய்..... வந்துவிடு என்னவனே...... அப்போதாவது கண்ணுக்குள்..... இருந்துகொண்டிருப்பாயே.....!!! பாறையில் இருந்து கூழாங்கல்..... உடைப்பதுபோல் உன் கல் நெஞ்சு..... இதயத்தை உடைக்கிறேன்......!!! ^^^ என்னவனே என் கள்வனே 08 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

தோல்வியை ரசி வெற்றியை ருசி

முயற்சி மனிதனின்..... மூலவேர் -அதை....... விருட்ஷமாக்குவது........ பயிற்சி.......................!!! பயிற்சி போதாதெனின்...... தோல்வியென்னும்............ கிளை தோன்றும்.................. முயற்சி  தோற்பதில்லை.......!!! வெற்றியின் போது........ ஓரக்கண்ணில் வருவது........ ஆனந்த கண்ணீரல்ல.......... தோல்வி தந்த வெள்ளை நிற....... இரத்தம்...................!!! & தோல்வியை ரசி வெற்றியை ருசி கவிப்புயல் இனியவன்

ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 02

நட்புக்கு வசந்த காலம்...... மழைக்காலம் தானே...... வேண்டுமென்றே நனைவதும்...... சேற்றுக்குள் உருளுவதும்...... வீட்டுக்கு வந்து அடிவாங்குவதும்..... மழைகாலம் வசந்த காலந்தானே.....!!! வடிந்தோடும் வெள்ளதில்....... பாய்ந்தோடும் காகித கப்பல்...... அப்போதுதான் படித்த குறிப்பு...... சற்றும் தாமதிக்காமல்....... கிழித்து விடும் காகித கப்பல்....... அடுத்த நாள் இருவருக்கும்..... கிழிந்த கால்சட்டைமேல்..... விழும் செமபூசை..........................!!! வாற்பேத்தையை மீன் குஞ்சென..... ஓடியோடி பிடித்து வீட்டுக்கு..... கொண்டுவருவதும் வந்த கையோடு...... அம்மா பறித்தெறிவதும்.......... கடுப்போடு கத்தி பிரழுவதும்...... இன்றுவரை நினைவில் இருக்கும்.... வசந்த காலம்...............................!!! & ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 02 கவிப்புயல் இனியவன்

ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு

படம்
ஆறுவயதில் அயல் வீட்டில் - நீ பாதிவயிறு உன் வீட்டில் நிரம்பும்.... பாதி வயிறு என் வீட்டில் நிரம்பும்...... பாதி தூக்கம் உன் வீட்டில் - நான் மீதி தூக்கம் என் வீட்டில் - நீ .........!!! அப்பப்போ சண்டை....... தடியெடுத்து அடிகும் மனதைரியம்..... எனக்கும் இல்லை உனக்கும் இல்லை..... ஒரு பிடி மண்ணால் சண்டையோடும்.... மாவீரர் நாம்...........................!!! சற்று நேரம் கூட ஆகாது......... வீட்டில் கிடைத்த இனிப்போடு....... ஓடிவருவேன் உன் வீட்டுக்கு.......... பாதி கடித்த இனிப்பை....... உன்னிடம் தர பறந்து போகும்..... சண்டையின் பகை...................... நட்பென்பது எப்போதும் இனிமை.....!!! & ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு கவிப்புயல் இனியவன்