இடுகைகள்

பிப்ரவரி 21, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 05

ஆதவனின் உடல் நிலை ... நாளுக்கு நாள் மோசமடைந்தே.... வருகிறது அந்த சிறுவயதில் .... இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட .... மருந்து ஊசி போடப்பட்டு ... உடலே வெந்து போய்விட்டது .....!!! மறு புறத்தில் ஆதவனின் .... தங்கை உயிருடன் போராடுகிறாள் .... இருவருக்கும் மரண போராட்டம் .... யாரோ ஒருவர் இறந்து ஒருவர் ... பிழைக்கவேண்டும் வேண்டும் ... ஒரு சோதிடரும் சொன்னாராம்.....  சோதிடம் சரியோ தவறோ தெரியாது  ஆதவனின் தங்கை இறந்து விட்டாள்.... ஆதவன் உயிருக்கு போராடுகிறான் ...!!! வைத்திய சாலையின் பிரதான .... வைத்தியர் ஆதவனின் அப்பாவிடம் ... சாமி என்னால் இனிஒன்றும் செய்ய .... முடியாது உன் மகனை முடிந்தால் ... நகரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு ... மன ஆறுதலுக்கு கொண்டு போ .... என்று சொன்ன சமயம் ..... சாமியார் அழுத்த படி ஆதவனை ... தூக்கி கொண்டு மருந்து எடுக்கும் ... இடத்துக்கு கடைசி பயணத்தை .... மேற்கொண்டார் .....!!! அங்கே .........???????????????? ^^^ தொடரும் இவன் போராட்டம்  ^^^ வாருங்கள் இவனின் வாழ்கையை  கேட்போம் .... ^^^ நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்  வசனக்கவிதை 05 ^^^ கவிப்புயல் இனியவன்

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 04

ஆதவனுக்கு  இரண்டு அண்ணன் இரண்டு அக்கா ஒரு ... தங்கை .......!!! எல்லோருக்கும் சின்ன ... வயது படிக்கும் வயது ..... கூலிக்கு போக முடியாத ..... சின்ன வயது என்றாலும் .... அருகில் உள்ள காட்டுக்கு .... சென்று சுண்டம் கத்தரி .... பறித்து சந்தையில் விற்று .... அதில் வரும் காசில் அரிசி .... அன்றைய வயிற்றை ... நிரப்பும் ....!!! ஆதவனின்  நோய் நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது - தந்தை சாமி ... ஆதவனுடன் போராடும் சக்தியை.... இழந்து போராடுகிறார் .....!!! அதிர்ச்சி தகவல் ஒன்றை .... சாமியிடம் சொன்னார் டாக்டர் .....!!! ^^^ தொடரும் இவன் போராட்டம்  ^^^ வாருங்கள் இவனின் வாழ்கையை  கேட்போம் .... ^^^ நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 04 வசனக்கவிதை 04 ^^^ கவிப்புயல் இனியவன்

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 03

ஆதவனின் தந்தை சாமி ... தினக்கூலி அன்று உழைத்தால் ... அன்று உணவு என்ற வாழ்கை ... இதுதான் தொழில் என்று இல்லை .... எந்த வேலை கிடைக்குமோ .... அந்த தொழிலை செய்வார் ....!!! ஆதவனுக்கு அடுத்த ஒரு ... தங்கை அவளுக்கும் இவனுக்கும் .... இரண்டு வயது வேறுபாடுதான் .... தங்கைக்கு திடீரென பெரும் .... நோய் - கடவுளின் சோதனை ... ஆதவனும் நோய்வாய் பட்டான் ....!!! இருவரையும் ஒரே வைத்தியசாலை .. ஆதவன் தந்தை வைத்தியசாலை ... மேல்மாடியில் ஆதவனையும் .... கீழ் மாடியில் ஆதவனின் தாய் ... தங்கையையும் வைத்திருகிறார்கள் ...!!! உழைப்புகள் இரண்டும் முடங்கின ... வீட்டில் அடுப்படியில் பூனை ... நிம்மதியாய் தூங்கியது ....!!! ^^^ தொடரும் இவன் போராட்டம்  ^^^ வாருங்கள்  இவனின் வாழ்கையை  கேட்போம் .... ^^^ நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 03 வசனக்கவிதை  ^^^ கவிப்புயல் இனியவன்

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 02

தந்தை தாய் உட்பட .... குடும்ப உறுப்பினர் பத்து .... ஆதவன் நடுப்பிள்ளை ஐந்து.... பிறந்த நாளில் இருந்து .... ஒருவாரம் வரை கடும் மழை .... அருகில் இருந்த ஆறு உடைக்கும் ... ஆபத்தான நிலையில் .... ஆற்றுக்கு அருகே ஆதவன் .... குடிசை வீடு .......!!! ஆதவன் தந்தை சாமி .... சாமி ஆறு உடைக்கபோகுது .... சீக்கிரம் வீட்டுக்குள் இருந்து .... வெளியே வா என்ற அயலவர் ..... அவசர குரல் கேட்க - ஆதவனை .... ஒரு துணியால் சுற்றிய படி .... வெளியே சாமி குடும்பம் .... வந்த போது சில நிமிடத்தில்.... அந்த மண் குடிசை இடித்து .... விழுந்தது ......!!! ^^^ தொடரும் இவன் போராட்டம்  ^^^ வாருங்கள்  இவனின் வாழ்கையை  கேட்போம் .... ^^^ நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 02 ^^^ கவிப்புயல் இனியவன்

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்

வறுமை  எல்லோருக்கும் பொதுமை ..... உலகில் சதித்தவனும் .... சாதிக்க போகிறவனுக்கும் .... மூலதனம் - வறுமை ....!!! இவனுக்கோ .... பிறப்பிடமே - வறுமை - என்றால் .... கொஞ்சம் கேட்கவும் சகிக்கவும் .... உங்களுக்கு கடினமாய் தான் .... இருக்கப்போகிறது .....!!! யார் இவன் ...? அடிப்படை வசதிகள் குறைந்த .... அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ... தன்மானத்துடன் காத்திருந்து .... கிடைத்தால் சாப்பிட்டு .... கிடைக்கா விட்டால் ஈரதுணியை .... வயிற்றில் கட்டி வாழ்ந்த .... கௌரவம் மிக்க வறுமை குடும்ப .... நாயகன் - " ஆதவன் ".......!!! இவனது  வாழ்கை தற்காலத்துக்கு .... எந்தளவுக்கு பொருந்தும் ... ஏற்கும் என்று தெரியாது .... ஆனால் இவனின் வாழ்கை .... இவனுக்கு முழு உண்மை .....!!! ^^^ வாருங்கள்  இவனின் வாழ்கையை  கேட்போம் .... ^^^ நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்  ^^^ கவிப்புயல் இனியவன் 

கனவாய் கலைந்த காதல் 10

பூவழகன் ..... என்னடா வினோத் ஒருநாளும் .... எந்த உதவியும் கேட்காத -நீ என்னிடம் உதவிஎன்கிறாய்.... எதை கேட்டாலும் நான் செய்வேன் .... தயங்காமல் கேள் என்றான் பூவழகன் ....!!! மச்சி அதடா மச்சி அது ..... என்று தயங்கியபடி சொன்னான் ... பூவரசன் அதிர்ந்து போனான் ....!!! எனக்கு பூவழகியை பிடிசிருக்கடா ... அவளிட்ட நீதான் இதை எடுத்து .... சொல்லி அவளை சம்மதிக்க .... வைக்கணும் அவள் உன்னோடு .... அப்பப்போ பேசுறாள் - நீ சொன்னால் ... அவளும் ஏற்றுக்கொள்வாள் .... என்றான் " வினோத் ".....!!! பூவழகனால் ஒன்றும் பேச முடியல்ல ..... பூவழகனுக்கு பூவழகியில்காதல்..... பூவழகிக்கு இருக்கிறதா ...? அவள் யாரையும் காதலிக்கிறாளா ..? எதுவுமே தெரியாத போது ..... வினோத்துக்கு எனக்கும் அவள் .... மீது காதல் என்று எப்படி சொல்வது ...? யோசிக்காதையடா வினோத் .... நிச்சயம் நான் இதைபற்றி .... சந்தர்ப்பம் வரும் போது ... கதைக்கிறேன் ஜோசிக்காதே..... ஆறுதல் சொல்லி அனுப்பினான் ... வினோத்தை .......!!! தவணை விடுமுறை நாள் .... ஒருமாத கால விடுமுறை .... இப்போதெலாம்  உள்ளதுபோல் ... கைபேசி எதுவும் இல

கனவாய் கலைந்த காதல் 09

பூவழகன் வகுப்பறையில் .... அவன்தான் வகுப்பு தலைவன் ..... பூவழகி வகுப்பறையில் .... அவள் தான் வகுப்பு தலைவி .... வகுப்பறை போட்டிகள் .... வழமைபோல் இவர்களுக்கும் ... அடிக்கடி சண்டை ஏற்படும் ....!!! காலாண்டு பரீட்சை வந்தது ..... ஒவ்வொருவரும் தமது ஹீரோ ... தன்மையை காட்டவேண்டும் .... பரீட்சை புள்ளியே இதன் கருவி .... பதட்டத்தோடு மண்டபத்தில் .... பூவழகன் இருந்தான்...... ஏதோ உதவி கேட்பதுபோல் .... அருகில் வந்தாள் பூவழகி .....!!! நிச்சயம் பூவழகா நீதான் .... முதல் மாணவனாய் வருவாய் .... அங்கும் இங்கும் பார்த்துவிட்டு ... யாரும் பார்க்காத போது மெல்ல ... கையில் கிள்ளிவிட்டு போனாள் ....! அந்த உற்சாகம்சொன்னதுபோல் .... பூவழகன் முதல் மாணவனானான் .... பூவழகி அவள் வகுப்பில் முதல் நிலை ....!!! தவணை விடுமுறை நாள் வந்தது ..... அன்று பூவழகன் எதிர் பாராத ஒரு .... நிகழ்வு நடந்தது ...... பூவழகன் சகவகுப்பு நெருங்கிய .... நண்பன் " வினோத் " பூவழகா .... எனக்கு ஒரு உதவி செய்யணும் .... உன்னால் மட்டும்தான் இது .... முடியும் என்று கூறிய படி .... மௌனமானான் பூவழகனின்.... பதிலுக்காய் .......?????????? ^^^ தொடர்ந்து

கனவாய் கலைந்த காதல் 08

பூவழகி  சொன்ன இரு வார்த்தைகள் ..... மௌனம் எனக்கு பிடிசிருக்கு.... பெயரும் பிடித்திருக்கு ..... இதைவிட என்ன வேணும் ...? அப்போ அவளுக்கு என் மீது .... காதல் ஏற்படுகிறதா ...? பூவழகனின் மனதில் ஆயிரம் ... கேள்விகள் .....????????? என்  காதாலை  பூவழகி ஏற்பாளா ...? என்னை விட அழகி, பணக்காரி .... படிப்பும் அறிவும் கூட அதிகம் .... ஒன்றை மட்டும் பூவழகி புரிந்து ... கொள்வாள் ஒருநாள் அவளைவிட ... என் காதல் பலமடங்கு உயர்வு .... தனக்குள்ளே பேசிகொண்டான்.... பூவழகன் .....!!! வகுப்பறையில் .... மாணவர் தொகை அதிகரித்தது .... வகுப்பறை இரண்டாகியது .... பூவழகனும் பூவழகியும் வேறு.... இரு வகுப்பாக மாறியது ..... பூவழகனின் கனவுக் காதலை  வகுப்பு சுவர் பிரித்து விட்டது ....!!! இப்போதெலாம் .... பூவழகன் பூவழகியை..... பாடசாலை ஆரம்ப நேரம் .... பாடசாலை இடைவேளை நேரம் .... பாடசாலை முடியும் நேரம் .... இடை இடையே இரு வகுப்பை ... சேர்த்து எடுக்கும் போது மட்டுமே .... கண்ணால் பார்ப்பான் மனத்தால் ... காதலிப்பான் ......!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல் 08 வசனக்கவித

கனவாய் கலைந்த காதல் 07

அடுத்த நாள் பாடசாலைக்கு .... பூவழகன் சற்று நேரத்துடன் .... வந்துவிட்டான் - அதிர்ச்சி .... அவளும் வந்துவிட்டாள் .....!!! பூவழகனுக்கு அருகில் தயங்கி ..... தயங்கி வந்தாள் - எல்லோரும் .... என்னோடு பேசினார்கள் ... நீங்க மட்டும் ஏன் பேசல்ல ....? பூவழகன் .... எனக்கு அதிகம் பேசுவது .... பிடிக்காது... பேசவில்லை ..... எனக்கும் அதிகம் பேசுவது .... பிடிக்காது - அதனால் .... உங்களை எனக்கு பிடிச்சிருக்கு .... பூவழகன் அதிர்ந்து போனான் ...!!! " உங்களை எனக்கு பிடிசிருக்கு " சொன்ன வார்த்தை உடலில் ... மின்சாரம் பாய்ந்தது போல் ... உறைந்து போனான் பூவழகன் ....!!! உங்க பெயர் என்ன ....? பூவழகன் கேட்டான் ... உங்க பெயரென்னா....? அவள் கேட்டாள் .... என் பெயர் பூவழகன் ...!!! அப்போ என் பெயர் ... எதுவாகவும் இருந்துட்டு  போகட்டும் -நீங்க  பூவழகி என்று கூப்பிடுங்கள் ... என்று சொன்ன அந்த நேரம் ... அவளது தோழி அவளை .... அழைத்து சென்றுவிடாள் ....!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல் 07 வசனக்கவிதை....!!! ^^^ கவிப்புயல் இனியவன்