இடுகைகள்

கவிப்புயல் இனியவன் தொடர் கவிதைகள்

அகராதியில் காதல் செய்கிறேன் 02

ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ... ஆ ராதனைக்குரிய அழகியவள் .... ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் .... ஆ யிரம் ஜென்மங்கள் அவளே.... ஆ ருயிர் காதலியவள் ......! ஆ ருயிரே என்று அழைத்துப்பார் .... ஆ சை வார்த்தைகளை தவிர்த்துப்பார் ... ஆ ணழகன் நீ என ஏற்றுகொள்வாள் .... ஆ னந்தமாய் காதலோடு வாழ்ந்திடு ....! ^^^ அகராதியில் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன்

அகராதியில் காதல் செய்கிறேன்

அ கிலத்தில் உனக்கான .... அ ன்புக்காதலி பிறந்து விட்டாள்... அ வள்  எப்போது கிடைப்பாள்....? அ வதிப்படாதே அவஸ்தை படாதே .... அ வதார புருஷர் போல் தோன்றுவாள் ...! அ வளிடம் இதயத்தை கொடு .... அ வளையே இதயமாக்கு ..... அ வளிடம் நீ சரணடை .... அ வள் தான் உன் உயிரென இரு அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....! ^^^ அகராதியில் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன்

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 07

நீ கலங்கரை விளக்கு.... நான் தத்தளிக்கும்.... கப்பலின் மாலுமி...... கரைசேர உதவிசெய்.....! உன் புன்னகையால்..... சமாதியானவன்....... சிரிப் பூக்களால்..... அர்ச்சனை செய்துவிடு......! ஒரு நொடியில் என்ன செய்துவிடலாம்......... என்று கேட்கிறார்கள் உயிரே.... இதயத்தை திருடிவிடலாம்...... என்று சொல்லிவிடு கன்னே....! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 07

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 06

நீ ஊஞ்சல் ஆடுகிறாய்..... என் இதயம் மேலும் கீழுமாய்.... ஆடுகிறது...... ஊஞ்சல் கயிற்றை.......... கவனமாய் பிடி........ நீ விழுந்தால்- நான்.... உடைந்து விடுவேன்...........! கண்ணில் இருந்து..... காந்த சக்தி வருவது...... உன்னிடமிருந்து தான்.....! பட்டு ...... புடவையோடுவரவில்லை....... பட்டாம் பூச்சிபுடவையோடு...... வந்திருக்கிறாய்..........! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 06

வாழ்க்கையில் உதவியவை .....!!!

வாழ்க்கையில் உதவியவை .....!!! ----- ஏழையாக வாழ்ந்திருக்கிறேன்...... கோழையாக வாழவில்லை..... தந்தையின் உபதேசம் அது.......! மன்னித்து பழகியிருக்கிறேன்..... மண்டியிட்டு வாழவில்லை...... தாயின் வளர்ப்பு அது.............! திட்டு வாங்கியிருக்கிறென்........ முட்டாளாக வாழவில்லை...... அண்ணனின் உபதேசம் அது.....! தலை குனிந்து வாழ்ந்திருகிறேன்..... தலை குனியும்படி வாழவில்லை...... உற்றர் உறவினர்களின் தூண்டுதல்......! தலை நிமிர்ந்து வாழ்கிறேன்..... தலை கனத்தோடு வாழவில்லை.... இறைவனின் அருள் கிருபை அது.....! ^ தொடர் கவிதை தொகுப்பு கவிப்புயல் இனியவன் என் இதயம் பேசுகிறது 02

என் இதயம் பேசுகிறது

என் இதயம் பேசுகிறது 01 ---------------------------------- வாழ்வியல் சிறக்க ..... வாழ்க்கை சிறக்க வேண்டும்.....! வார்த்தை சிறக்க...... வரிகள் சிறக்க வேண்டும்.......! வாழ்த்துக்கள் சிறக்க..... வாய்மை சிறக்க வேண்டும்......! வாழ்க வளமுடன் என வாழ்த்தி...... வாழ்வோம் வையம் போற்ற.....! ^ தொடர் கவிதை தொகுப்பு கவிப்புயல் இனியவன் என் இதயம் பேசுகிறது

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 05

உன்னை..... ஓவியமாய் வரைய..... துரிகையை எடுக்கிறேன்.... வெட்கப்படுகிறது.... இளமை அழகைபார்த்து....! நீ கருவறையில் இருக்கும்.... தெய்வம்- திரைசேலையால்.... மறைக்கப்பட்டுருக்கிறாய்..... தரிசனத்துக்காக...... காத்திருக்கிறேன்............! நீ ஆடையை உலத்த..... கொடியில் போட்டிருப்பது.... உன் ஆடைகள் அல்ல..... மேனியின் மெல்லிய தோல்....! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 05 

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 04

காதல் ..... ஒரு ஆள் கொல்லி விஷம்..... தலைக்கு ஏறினால்...... இறங்காது................! நீ..... மொட்டு அருகில் வந்தால்.... பூக்களாய் மலர்கிறது...... காய்கள் அருகே வந்தால்...... கனிகளாய் மாறுகிறது..... அழகின் மந்திரவாதி நீ.....! பிறர் வெளிச்சுவாசம்..... மற்றவர்களுக்கு நஞ்சு..... உன் வெளிச்சுவாசம்..... எனக்கு அமிர்தம்......! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 04

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 03

உன்னை  எப்போது பார்தேனோ...... அப்போதே என் இதய..... நரம்புகள் அறுந்து விட்டது.....! முள் மேல் விழுந்த.... சேலையாய் கிழிகிறேன்.... நீயோ கண்ணடியின்..... விம்பம் போல் வலிக்காமல்..... பார்த்தும் பார்க்காதது போல்..... விலகி செல்கிறாய்.........! நீ  நடந்து வரும் பாதையில்.... மிதிபட்ட புல் எல்லாம்..... பூக்களாய் மலர்கிறது..........! & கவிப்புயல் இனியவன்  ஏனடி காதலால் கொல்லுகிறாய் 03

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 02

இரண்டு சிகரங்கள்..... அருகருகே இருப்பது..... பொருந்துவதமற்றது..... பொருந்துகிறது....... உன் இமை அழகில்..... மட்டும் தானே அன்பே....! இப்போதுதான் புரிந்தது...... உதட்டை ஏன் இதழ்...... என்கிறார்கள்........? நீ பேசும் போது........ ரோஜாவின் ஒவ்வொரு..... இதழ்களும் விரிவதுபோல்....! நீ அசைந்து அசைந்து வருகிறாய் ..... இசைந்து இசைந்து வருகிறது...... கவிதை........... உன் ஒரு சொல் உனக்கு...... நீர் துளி எனக்கு கவிதையின்..... சமுத்திரம்...................! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 02

ஏனடி காதலால் கொல்லுகிறாய்

உன்......... கதவில்லாதா ...... உறங்கும் அறைபோல் ...... என் இதய அறைக்குள் .... நீ .................................! உன் .......... கூந்தல் காற்றில் ஆடும் ...... கண பொழுதெல்லாம் ....... இதயம் படும் வேதனையை ....... எப்போது அறிவாயோ ......? உன்னை நினைத்து ....... எழுதும் கவிதையை ....... காதல் தெரியாதவர்கள் ....... காதல் பித்தன் என்பார்கள் ...... உனக்கு புரிந்தால் போதும் ..... நான் உன்  காதல் சித்தன் .......! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 

நண்பா கடந்த காலத்தை

நண்பா கடந்த காலத்தை ----------------------------------------- வாடா நண்பா கடந்த காலத்தை நகைச்சுவையுடன் பேசுவோம் ...!!! சின்ன வயதில் சிறு பொந்தில் கிளிதேடி கட்டெறும்பிடம் கடிவாங்கியத்தை போசுவோம் வாடா ...!!! கள்ள மாங்காய் பிடுங்க போய் -தோட்டக்காரன் வந்தவுடன் தலைதெறிக்க நான் ஓட -மரத்தில் நின்று அழுததை.... பேசுவோம் வாடா ...!!! கிட்டி புள் விளையாடுகையில் பாட்டியின் தலையில் பட திட்டிய வார்த்தைகளை இன்று பேசிப்பார்ப்போம் வாடா நண்பா வாடா ....!!! ஓடி விளையாடுகையில் உன் காற்சட்டை உன்னை அறியாது கழண்டுவிழ வெட்கத்தோடு காற்சட்டையை விட்டு கண்ணை பொத்தினாயே வாடா நண்பா நகைசுவையாக பேசுவோம் வாடா ....!!! & கவிப்புயல் இனியவன்

நண்பா கடந்த காலத்தை

நண்பா கடந்த காலத்தை வாடா நண்பா கடந்த காலத்தை நகைச்சுவையுடன் பேசுவோம் ...!!! சின்ன வயதில் சிறு பொந்தில் கிளிதேடி கட்டெறும்பிடம் கடிவாங்கியத்தை போசுவோம் வாடா  ...!!! கள்ள மாங்காய் பிடுங்க போய் -தோட்டக்காரன் வந்தவுடன் தலைதெறிக்க நான் ஓட -மரத்தில் நின்று அழுததை.... பேசுவோம் வாடா  ...!!! கிட்டி புள் விளையாடுகையில் பாட்டியின் தலையில் பட திட்டிய வார்த்தைகளை இன்று பேசிப்பார்ப்போம் வாடா நண்பா வாடா ....!!! ஓடி விளையாடுகையில் உன் காற்சட்டை உன்னை அறியாது கழண்டுவிழ வெட்கத்தோடு காற்சட்டையை விட்டு கண்ணை பொத்தினாயே வாடா நண்பா நகைசுவையாக பேசுவோம் வாடா ....!!!   கவிப்புயல் இனியவன்

மறுபடியும் மகனாய் பிறக்க வேண்டும்

மறுபடியும் மகனாய் பிறக்க வேண்டும் --------------------------------------------------------- அம்மா. உன்னை நினைக்கும் போது எனக்குள் எல்லா நரம்பும் இரத்தத்தை கடத்தவில்லை - உன் உருவத்தையே இரத்தமாய் கடத்துகிறது ....!!! பிள்ளை பருவத்தில் செல்ல காயம் வந்தால் கூட விளையாட்டுக் காயங்கலாக எடுக்காமல் -உன் கண்ணுக்கு திரியை வைத்து விடிய விடிய விளக்காய் எரிவாயே தாயே ....!!! சிறு வயதில் எல்லோருக்கும் பசியதிகம் -பள்ளி விட்டு வந்து படாத பாடு படுத்திவிடுவேன் உன் காலை உணவை எனக்காக வைத்திடுந்து நீ பட்டினீயிருப்பாய் தாயே ......!!! என் புத்தகச் சுமை உன் வலது தோலில் சுமப்பாய் ... செருப்பில்லாத பாதங்களேடு.... இடுப்பில் என்னைசுமந்திருக்கிறாய். வீடு வந்தவுடம் களைத்து விட்டாய் மகனே என்று -உன் களைப்பை பொருட்படுத்தாத அதிசயப்பிறப்பு தாயே .....!!! அ - வரிசையில் சொற்கள் சொல்லடா அம்மா என்பேன் -உலகிலேயே அப்படி சொன்ன முதல் பிள்ளை என்பது போல் இனிமேல் யாரும் சொல்ல மாட்டார்கள

என்னவனே என் கள்வனே 10

என் இதய வீட்டுக்கு...... எப்போது குடிவர போகிறாய்....? எண்ணத்தால் தினமும் கோலம்.... வண்ண வண்ணமாய் போடுகிறேன்..... தினமும் என் ஏக்க மூச்சு..... அழித்து கொண்டே போகிறது......!!! கோலங்கள் மாறுகின்றன...... உன் கோலம் ஏன் மாறவில்லை........ இறைவா இவன் காணும்...... கனவை நிஜமாக்கி என்னை...... காதலிக்க வைத்துவிடு............!!! ^^^ என்னவனே என் கள்வனே 10 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்