இடுகைகள்

மார்ச் 16, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உண்மையின் மறுபக்கம் பார்க்கிறேன் - 03

உண்மை அநாதையானது ....!!! .......................உண்மையின் மறுபக்கம் பார்க்கிறேன் - 03 ^^^ குற்றவாளி கூண்டில் ..... குற்றம் சாட்டப்பட்டு ஒருவன் ..... கூண்டில் நிற்கிறான் .... சட்டவாதிகள் குற்றத்தின் மேல் .... குற்றம் சாட்டி குற்றமற்றவனை ..... குற்றவாளியாக்க முயற்சித்தனர் ....!!! பார்வையாளராக இருந்த .... உண்மைக்கு கோபம் வரவே ..... சட்டென்று எழுந்து - இவை ... அனைத்தும் பொய் . எனக்கு .... எல்லா உண்மையும் தெரியும் .... என்று உரத்த குரலில் சொன்னது .....!!! அதிர்ச்சியடைந்த நீதிபதி .... மன்றத்தின் அமைதியை கெடுதீர் ... குற்றம் சுமத்தி -உண்மையை ... மன்றத்திலிருந்து வெளியேற்றினார் ....!!! உண்மை .... வேலையில்லாமல் அலைந்தது .... பட்டதாரியாகவும் இருந்தது ...... சிறு வேலையென்றாலும் கிடைக்டும்.... தோட்ட முதலாளியிடம் வேலை கேட்டது .... என்ன படிதிருகிறாய் நீ ....? பட்டதாரி என்றது -உண்மை .... உனக்கு வேலை கிடையாது போ .... எதற்கு என்று வினாவியது உண்மை ...? இங்கே  படிக்காதவர்களே வேலை செய்கிறார்கள் .... நீ அவர்களையும் கெடுத்துவிடுவாய் ...... தொழிற்சங்கம் அமைப்பாய் -போராடுவாய்.... சம்பளம் கூட்டி கேட்பாய் ....

உண்மையின் மறு பக்கம் பார்க்கிறேன் 02

அறிவின் மறு பக்கம் சிக்கலானது ....!!! உண்மையின் மறு பக்கம் பார்கிறேன்-02 ----------------- உண்மையிடம்     கேட்டேன்  ஒரு கேள்வி ...? அறிவு எது ..? ஞானம் எது ..? உண்மை சொன்னது ..... அறிவுக்கும் ஞானத்துக்கும் ... எப்போதும் முரண் தொடர்தான் ..... அறிவு வளர வளர .... அறிவை தேட தேட ..... ஞானம் காணாமல் பொய் விடும் .... அறிவு தான் அத்தனை மன .... குழப்பத்துக்கும் காரணம் .....!!! அறிவுக்குள் நீங்கள் .... மூழ்கும் போதெலாம் ஆசை .... அதிகரித்துகொண்டே போகும் .... துன்பத்தையும் கோபத்தையும் ... துயரத்தையும் பெருக்கிக்கொண்டே .... செல்லும் .....!!! அறிவை பெருக்க பெருக்க .... உலக பற்றுதல் கூடிகொண்டே .... போகும் அறிவிலிருந்து தூர .... விலகும் காலம் எப்போது .... உன்னில் ஆரம்பிக்கிறதோ .... அப்போதுதான் நீ ஞானத்தில் .... அக்கறை செலுத்துவாய் .....!!! அறிவினால் எப்போதும் நீ ... ஒன்றை பற்றிப்பிடிப்பாய் .... அந்த பற்று உன்னை கொஞ்சம் ... கொஞ்சமாய் விழுங்கிகொண்டே ... இருக்கும் மீள் முடியாவிட்டால் .... கடும் துன்பத்துக்குள் விழுந்து ... விடுகிறாய் .......!!! அறிவு நிறைந்தால் தான் .... பெருமை என்று நினைப்பவர்கள் ....

உண்மையின் மறு பக்கம் பார்க்கிறேன்

உண்மையிடம்     கேட்டேன்  ஒரு கேள்வி ...? நல்லது எது கெட்டது எது ...? உண்மை சொன்னது ..... வீட்டுக்குள்ளே  செல்லும் போது செருப்பை .... கழற்றி வைக்கிறோம் .... செருப்பு ஒதுக்கப்படுகிறது .... கொழுத்தும் வெய்யிலில் .... பதைத்து துடிக்கும் போது .... செருப்பு சொர்கமாகிறது ....!!! நறுமணம் வீசும் போது ... மனம் சுவைக்கிறது ... துர்நாற்றம் வீசும்போது ... மனம் சுழிக்கிறது ...... காற்றே இல்லாத அறைக்குள் ..... அடைக்கப்பட்டு அடுத்து மூச்சு .... விட்டால் உயிர்பிழைக்கும் ... நிலையில் துர்நாற்ற காற்று .... சொர்க்கமாக மாறுகிறது ....!!! நாக்கு வறண்டு உடல் சோர்ந்து .... ஒரு துளி தண்ணீருக்கு மனம் ... ஏங்கி கொண்டிருக்கும்போது .... தெருவோர குட்டை தண்ணீர் ... அமிர்தமாகிறது ......!!! இப்போது சொல் .... நல்லது எது கெட்டது எது ...? உங்கள் தேவைக்கு அதிகமாக .... கிடைக்கும்போது தான் நீங்கள் .... நல்லது கெட்டது என்று .... பாகுபடுத்துகிறீர்கள் ....!!! தேவைக்கு குறைவாக இருக்கும் ... காலத்தில் எதுவுமே கெட்டதில்லை... உண்மை  மறுபக்கத்தை சொன்னது ...!!!