இடுகைகள்

ஏப்ரல் 15, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 05

உன்னை..... ஓவியமாய் வரைய..... துரிகையை எடுக்கிறேன்.... வெட்கப்படுகிறது.... இளமை அழகைபார்த்து....! நீ கருவறையில் இருக்கும்.... தெய்வம்- திரைசேலையால்.... மறைக்கப்பட்டுருக்கிறாய்..... தரிசனத்துக்காக...... காத்திருக்கிறேன்............! நீ ஆடையை உலத்த..... கொடியில் போட்டிருப்பது.... உன் ஆடைகள் அல்ல..... மேனியின் மெல்லிய தோல்....! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 05 

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 04

காதல் ..... ஒரு ஆள் கொல்லி விஷம்..... தலைக்கு ஏறினால்...... இறங்காது................! நீ..... மொட்டு அருகில் வந்தால்.... பூக்களாய் மலர்கிறது...... காய்கள் அருகே வந்தால்...... கனிகளாய் மாறுகிறது..... அழகின் மந்திரவாதி நீ.....! பிறர் வெளிச்சுவாசம்..... மற்றவர்களுக்கு நஞ்சு..... உன் வெளிச்சுவாசம்..... எனக்கு அமிர்தம்......! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 04

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 03

உன்னை  எப்போது பார்தேனோ...... அப்போதே என் இதய..... நரம்புகள் அறுந்து விட்டது.....! முள் மேல் விழுந்த.... சேலையாய் கிழிகிறேன்.... நீயோ கண்ணடியின்..... விம்பம் போல் வலிக்காமல்..... பார்த்தும் பார்க்காதது போல்..... விலகி செல்கிறாய்.........! நீ  நடந்து வரும் பாதையில்.... மிதிபட்ட புல் எல்லாம்..... பூக்களாய் மலர்கிறது..........! & கவிப்புயல் இனியவன்  ஏனடி காதலால் கொல்லுகிறாய் 03