இடுகைகள்

மே, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு வழிப்போக்கனின் கவிதை

தெருவோரத்தில் உச்சி வெய்யிலில் ..... வாய்க்கு வந்தததை உளறியபடி ...... சென்ற வழிப்போக்கன் ஓரத்தில் .... இருந்த "அரசடிப்பிள்ளையாரை".... வாயில் வந்ததையேல்லாம் ..... தொகுத்து கவிதையாக்கினான் .....!!! & பார்க்கும் இடமெல்லாம் ..... இருக்கும் தெருவெல்லாம் ...... ஆற்றங்கரையெல்லாம்  ....... வீற்றிருக்கும் பிள்ளையாரே ...... என்போன்ற வழிப்போக்கனுக்கு ..... பக்தியை அள்ளிவழங்க உம்மை .... விட்டால் யார் உள்ளனரோ .....? மிருகம் பாதி மனிதன் பாதி .... கலந்திருக்கும் கடவுள் நீர் ....... அதனால் தானோ எல்லா .... உயிரினங்களும் உம்மில் ...... இத்தனை அன்போ .....? உம் வயிறும் நிரம்ம போவதில்லை ..... என் போன்ற வழிப்போக்கனின் ..... வயிறும் நிரம்ம போவத்தில்லை ..... பணம் படைத்தவன் வயிறும் .... மனமும் நன்றாக நிரம்புகிறது ..... அவர்கள் பார்த்து நமக்கு .... படைத்தால் தான் நம் வயிறு ...... நிரம்ப முடியும் ..........!!! அதுசரி உமக்கும் புத்தனுக்கும் ..... அப்படியென்ன அரசமரத்தில் .... காதல் - எங்கெல்லாம் அரசு முளைக்கிறதோ அங்கெல்லாம் .... இருவரும் அரசை பிடிப்பதுபோல் .... அர

தேனிலும் இனியது காதலே 02

மன்னித்துவிடு .... உன் அனுமதி இல்லாமல் .... உன்னை என் இதயத்தில் .... குடியமர்த்தி விட்டேன் .....!!! எனக்கு உன் அனுமதி .... கேட்டெல்லாம் உன்னோடு .... பேச முடியாது -நான் ... நினைக்கும் போதெல்லாம் .... உன்னோடு பேசவேண்டும் என்பதால் இதயத்துக்குள் .... உன்னோடு வாழ்கிறேன் .....!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை 01

தேனிலும் இனியது காதலே

பட்டாம் பூச்சியின் அழகை ..... ரசித்தேன்......!!! பூத்து குலுங்கும் ... பூவை ரசித்தேன் .... ஆயிரம் கனவுகளை .... இரவில் ரசித்தேன் ..... !!! என்னவளே .... உன்னை ரசிக்கவில்லை சுவாசிக்கிறேன் .... உன்னை நினைப்பதில்லை ... துடிப்பாக வைத்திருக்கிறேன் .....!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை 01

சுகம் தேடும் சுயம்

போதும் என்ற மனமே........? -------- குடியிருக்க குடிசையுண்டு.... கூடிவாழ குடும்பமுண்டு...... தூங்கியெழ திண்ணையுண்டு.... அதிகாரம் செய்ய உறவுகளுண்டு.... இதற்கு மேல் என்னவேண்டும் ...? பாசத்தை காட்ட பெற்றோர்.... வேசத்தை காட்ட பதவி .... மோகத்தை காட்ட மனைவி .... பாவத்தை போக்க கோயில்.... இதற்கு மேல் என்னவேண்டும் ...? கொள்ளிவைக்க ஆண்குழந்தை கொஞ்சி விளையாட பெண்குழந்தை ... தட்டிக்கேட்க உடன்பிறப்புகள் ....... கொட்டி கொடுக்க மாமன் சொத்து .... இதற்கு மேல் என்னவேண்டும் ...? குடித்து கும்மாலம் போட நண்பன்  .... ஊர்கதை பேச ஆலமரத்தடி...... பஞ்சாயத்து தீர்ப்பு சொல்ல தலைவர்.... பகட்டாக திரிய ஒரு வாகனம் .... இதற்கு மேல் என்னவேண்டும் ...? இத்தனை சிற்றின்பத்தை விரும்புபவன் ..... எப்போது புரிவான் எப்படி புரிவான் ...? இவை சுகம் தேடும் சுயங்கள் மட்டுமென்று .... என்றுமே வற்றாத பேரின்பத்தை ......? & சுகம் தேடும் சுயம் யதார்த்த கவிதை கவிபுயல் இனியவன்

காதல் தோல்வி கவிதைகள் 05

என் கவிதையை .... பார்ப்பவர்கள் எல்லோரும் ... உனக்கு காதல் தோல்வியா .... என்கிறார்கள் ....? இந்த கேள்விக்கு மட்டும் .... நீ பதில் சொல் .....!!! என்னை பிடிக்கவில்லை ... சொல்லியிருந்தால் .... விலகியிருப்பேன் .... பிடித்திருக்கு என்றால் .... காதலித்திருப்பேன் ..... மௌனமாய் இருந்து ... நடுரோட்டில் விட்டுவிட்டாயே ....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

காதல் தோல்வி கவிதைகள் 04

மூச்சை நிறுத்தினால்....  மட்டுமே மரணம் இல்லை...  நீ பேச்சை நிறுத்தினாலும்...  மரணம் தான்......!  ஒரு  மரதில் ஆயிரம்...  பூக்கள் மலரும்....  மரத்துக்கு வலியில்லை...  காம்பின் வலியை...  உணர்வார் யாருமில்லை...  உன்னை இழந்த வலி...  உனக்கே புரியவில்லை...!  இதயத்தில்...  இருந்து வெளியேறிய நீ  இதயத்தை நிறுத்திவிட்டு...  போயிருக்கலாம்....!  ^ காதல் தோல்வி கவிதைகள்  ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன்  மறந்தால் மரினித்து விடுவேன்  ------------ கவிப்புயல் இனியவன்

காதல் தோல்வி கவிதைகள் 03

தனிமையில் ... இருக்கும் போது கூட .... உன்னோடு தான் ... பேசிக்கொண்டிருப்பேன் ...!!! இதுவரை இன்பத்தில் ... இருந்த இதயம் ... இப்போ துன்பத்துக்கு ... பயிற்சி எடுக்கிறது ....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன் 

காதல் தோல்வி கவிதைகள் 02

ஜோடியாக நடந்து .... திரிந்த செருப்பில் ஒன்று .... அறுந்துவிட்டால் .... மற்ற செருப்பு நிலை....? என்னை பிரிந்த நீயும் சந்தோசமாய் இல்லை ... உன்னை பிரிந்த நானும் .... சந்தோசமாய் இல்லை ...!!! இருட்டறைக்குள் ... ஒரு சின்ன வெளிச்சம் .... பெரும் வெளிச்சம் .... உன் சின்ன திருப்பம் ... பெரு வெளிச்சமாகும் .....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

காதல் தோல்வி கவிதைகள்

உன்னை மறப்பதும் .... இறப்பதும் ஒன்றே ...!!! தோப்பில் இருந்த ... மரங்கள் வெட்டப்பட்டு ... தனிமரம் நிற்பதுபோல் .... உன்னை இழந்து தனியே .... நிற்கிறேன் .....!!! காதலில் தோற்ற .... ஒவ்வொரு இதயம்  தீயில் கருகிய இதயம் ... மீண்டும் துடிக்க விரும்பாது .....!!! ^ காதல் தோல்வி கவிதைகள்  ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன்  மறந்தால் மரினித்து விடுவேன்  ------------ கவிப்புயல் இனியவன் 

காதல் சோகக்கவிதைகள் 05

பகலில் செயல்களால் ... காயப்படுத்துகிறாய் ..... இரவில் கனவுகளால் .... காயப்படுத்துகிறாய் ....!!! காயப்படுபவர்களுக்கு .... எத்தனையோ உதவி ... கிடைக்கும் இந்த காலத்தில் .... உன்னால் காயப்படும் .... இதயத்துக்கு என்ன உதவி .... தரப்போகிறாய் ....? & காதல் சோகக்கவிதைகள் 05 கவிப்புயல் இனியவன்

காதல் சோகக்கவிதைகள் 04

என் இதயத்தை ... ஒருமுறை எட்டிப்பார் .... உன் காதலுக்காக .... பிச்சை பாத்திரம் .... ஏந்திகொண்டிருகிறது ....!!! நீ இதயகதவை ... திறக்கும் வரை .... காத்திருப்பேன் .... ஆயுள் காலம் வரை ...............!!! & காதல் சோகக்கவிதைகள் 04 கவிப்புயல் இனியவன்

காதல் சோகக்கவிதைகள் 03

பிரிந்து வாழவே ... காதலித்த காதலர் .... நாம் ............................!!! பரவாயில்லை ... உன்னை ........ சுமக்கமுடியவில்லை ..... உன் வலிகளை.... சுமந்துகொண்டிருக்கிறேன்....!!! & காதல் சோகக்கவிதைகள் 03 கவிப்புயல் இனியவன்

காதல் சோகக்கவிதைகள் 02

நீ என்னை தூக்கியெறிந்து .... காதலை கொன்றுவிட்டாய் ... என் இதயம் ஒரு ஓரத்தில் ... அழுதுகொண்டிருகிறது ...!!! கவலை படாதே .... உன் இதயம் பத்திரமாக .... என்னுள் இருக்கிறது .... அதை அழவிடமாட்டேன்....!!! & காதல் சோகக்கவிதைகள் 02 கவிப்புயல் இனியவன்    

காதல் சோகக்கவிதைகள் 01

காதலியே .... நீ ..... விட்டு போனபின்னும் .... காதல் ...... என்னோடு இருக்கிறது ...!!! எல்லாவற்றையும்.... இழந்துவிடேன் .... என்று சொல்லமாட்டேன் .... உன் நினைவுகள் .... என்றும் இழக்கமாட்டேன் ...!!! & காதல் சோகக்கவிதைகள்  கவிப்புயல் இனியவன்

காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை 06

காதலியை காதல்..... செய்ய முன் காதலை .... காதல் செய்யுங்கள் .... காதல் என்றும் தோற்காது ....!!! காதலோடு வாழ்பவன் .... இன்பத்தோடு வாழ்கிறான் ... துன்பத்திலும் இன்பம் ... காண்பான் .... காதலியோடு வாழ்வதற்கு .... இன்ப துன்பம் உண்டு ...!!! ^ காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை இது காதலர் கவிதை அல்ல காதல் கவிதை 06 ^ கவிநாட்டியரசர் கே இனியவன்