இடுகைகள்

ஏப்ரல், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை காதலின் தூதுவன் 04

நீ பார்த்தும் பார்க்காத ... போல் என்னை கடந்து ... சென்றாலும் ....!!! உன் காதல் நிறைந்த இதயம் .... என்னிடம் வந்து ஆறுதல் .... சொல்லிவிட்டு செல்கிறது ....!!! & கவிதை காதலின் தூதுவன் காதலருக்கான சிறப்பு கவிதை கவிப்புயல் இனியவன்

கவிதை காதலின் தூதுவன் 01

ஒரு .... தலை காதலர்களே .... காதலில் தோற்றவர்களே .... கவலையே வேண்டாம் .... காதல் கவிதையை .... ரசியுங்கள் .... காதல் நிச்சயம் .... வெற்றிபெறும் .... கவிதை காதலின் தூதுவன் ....!!! & கவிதை காதலின் தூதுவன்  காதலருக்கான சிறப்பு கவிதை  கவிப்புயல் இனியவன்

கவிதை காதலின் தூதுவன் 03

தாமரை முகம் .... நிலா மேனி .... மீன் கண்கள் ... வில் புருவம் ..... அன்ன நடை .... தோகை கூந்தல் .... கொவ்வை உதடு .... வலம்புரி சங்கு .... நூல் இடை .... இத்தனை ... அழகையும் கொண்ட .... என்னவள் .... என்னை காதலித்தால் .... தேவதைகளின் .... அரசியாவாள் ....!!! & கவிதை காதலின் தூதுவன் காதலருக்கான சிறப்பு கவிதை கவிப்புயல் இனியவன்

கவிதை காதலின் தூதுவன் 02

உன்னுடன் பேச .... எத்துனை ஆசையோ .... அதே அளவுக்கு பேசாமல் .... இருக்கவும் .... ஆசைபப்டுகிறேன்...... வித்தியாசமாய் .... நினைத்துவிடாதே .... பேசினால் வார்த்தை அழகு ..... பேசாமல் விட்டால் வரிகள் அழகு ....!!! & கவிதை காதலின் தூதுவன் காதலருக்கான சிறப்பு கவிதை கவிப்புயல் இனியவன்

விடுகதைக்கவிதைகள் 02

பூமியில் மூன்றில் இரண்டு.... பங்கு ..... நான் ......!!! உடலில் மூன்றில் .... இரண்டு பங்கு ..... நான் ....!!! என்னில் மூன்றில் .... இரண்டு பங்கு .....!!! ஆனால் என்னில் .... சூரிய ஒளி படாது .... அப்படிஎன்றால் .... நான் யார் .....? & & & & & விடை ; இளநீர் ^ சிறுவர்களுக்கான கவிதை கவிப்புயல் இனியவன்

விடுகதைக்கவிதைகள்

அவன் ..... இல்லாவிட்டால் .... நான் இல்லை ... நான் இல்லாவிட்டால் .... அவனுமில்லை .... நாங்கள் இரட்டை .... பிறவிகள் இல்லை .... அப்போ நாங்கள் .... யார் ...................? & & & & & விடை ; உடலும் உயிரும் ...!!! ^ சிறுவர்களுக்கான கவிதை கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 30

இன்று.... கிரக தோஸமாம்.... சுவாமியின் கதவு.. மூடப்பட்டிருக்குமாம்... உனக்கு எப்போது... கிரக தோஸம்.... என் இதயத்தில்... உன்னை வைத்து... மூடனும்.....! & எனக்குள் காதல் மழை கே இனியவன்

எனக்குள் காதல் மழை 29

மின் காந்த அலையை... கணிக்கும் அறிவியல்... உன் கண் காந்த அலையை... எப்போது கணிக்குமோ....? எனக்குள் காதல் மழை கே இனியவன்

எனக்குள் காதல் மழை 28

மோனோலிஸா... ஒவியம் எப்படி... வைத்த்தாலும்... எம்மை பார்ப்பது... போல் தான் இருக்கும்... உன் புகைப்ப்டமும்... எங்கு வைத்தாலும்... என்னையே பார்க்கிறாய்....! & எனக்குள் காதல் மழை கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 26

நீ ஒருமுறை ... பாட்டி வடை சுட்ட... கதையில் பாட்டியாக மாறு.... கதையையே மாற்றிவிடுகிறேன்... காக்காவாக வந்து ... உன்னை தூக்கிச்செல்கிறேன்... & எனக்குள் காதல் மழை கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 25

பொம்மை கடைக்குள்.... சென்று விடாதே,,,, இந்தபொம்மைதான்.... வேண்டும் என்று,,, உன்னை கொண்டு.... சென்று விடுவார்கள்.....!!! & எனக்குள் காதல் மழை கவிப்புயல் இனியவன்

வலிக்கும் இதயத்தின் கவிதை 02

ஒரு நாளுக்கு .... ஒரு குறுஞ்செய்தியாகினும் .... அனுப்பி வைத்துவிடு .... உனக்கு அது  குறுஞ்செய்தி.... எனக்கு பெரும் செய்தி ....!!! நீ நேரே வரவேண்டுமென்று .... மனம் ஆசைப்படவில்லை .... உன் நினைவில் வாழ்வே .... ஆசைப்படுகிறேன் ....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

வலிக்கும் இதயத்தின் கவிதை 

நீ ... தந்த ... வலிகளை தாங்கும் .... சக்தி எனக்கில்லை .... நீ தந்த வலிகள் .... என்னவென்று என் .... கவிதைகள் சொல்லும் ....!!! ஒன்று .... மட்டும் செய்துவிடாதே .... நான் தனியே இருந்து .... அழுவதுபோல் நீயும் ... அழுதுவிடாதே - என்னை .... ஆறுதல் படுத்த கவிதை ... எப்போதும் இருக்கும் .... உன்னை ஆறுதல் படுத்த .... என்னை தவிர யாருமில்லை ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

அதிசயக்குழந்தை - இறக்கம் 

அதிசயக்குழந்தை - இறக்கம் ------- அதிசயக்குழந்தை ..... ஏணியில் ஏறுவதும் .... இறங்குவதுமாய் விளையாடிக்  ... கொண்டிருந்தான் ....!!! அந்தவழியால் வந்த நான் .... என்னடா செய்கிறாய் என்று .... கேட்டேன் .....!!! ஏறுவதும் இறங்குவதுமாய் .... இருக்கிறேன் தெரியவில்லையா ...? என்றான் ....? உனக்கு ஏற்றம் பிடிக்குமா .....? இறக்கம் பிடிக்குமா ....? எனக்கு இறக்கம் தான் ... பிடிக்கும் ஆசானே .... ஏன்டா உனக்கு எப்போதும் .... எதிர் மறையாகதான் பிடிக்குமா ...? இல்லை ஆசானே எதிர் மறையின் ... நன்மையை உணரமாட்டேன் .. என்கிறீர்களே ....!!! இறக்கமும் வீழ்ச்சியும் .... தோல்விகள் இல்லை .... வரலாற்றின் மறு பக்கங்கள் .....!!! மலை ஏறுபவன் இறங்கினால்-தான் மலை ஏறியதின் சாதனை ... தெரியவரும் .....! பள்ளத்திலிருந்து நீர் வீழ்ந்தால்-தான் நீரின் மகிமை புரியும் ....! அப்பில் பழம் கீழே விழுந்ததால் ... நியூட்டன் புவியீர்ப்பை கண்டார் .... வானத்து நீர் கீழே விழுந்தால் தான் .... பூமி பசுமை அடைகிறது ....! இயக்கவிதி மேலே தொழிற்பட்டால் .... வெளிப்பாடு கீழேதான் இருக்கும் .....!!! இறக்கமும் வீ

எனக்குள் காதல் மழை 22

அது சரி  கண்ணாடியை பார்த்து,,,  என்ன பேசுகிறாய்,,,,?  என்னோடு தானே,,,  பேசுகிறாய்,,,,  அப்படி என்னதான் ,,,  பேசுகிறாய்,,,,?  எனக்குள் காதல் மழை  கே இனியவன்

எனக்குள் காதல் மழை 20

உன்னிடம் இருக்கும் புன் (நகையை ) என்னிடம் அடகு வை .... நான் உனக்கு வட்டி ... தருகிறேன் ....!!! ^ எனக்குள் காதல் மழை 20 கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 19

நீ தோழியோடு பேசும்போது .... அத்தனை அழகாய் இருகிறாய் ... ஒருமுறை .... என்னோடு பேசிப்பார் ... இன்னும் அழகாய் இருப்பாய் .... காதலோடு யார் பேசினாலும் ... அழகுதான் - நீ இரட்டை அழகு பெறுவாய் ....!!! ^ எனக்குள் காதல் மழை 19 கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 18

எனக்கு ஒரு குறி சோதிடம் சொல் .... உன்னை ஒருத்தி .... காதலிக்கிறாள் ... என்று நீயே சொல் ....!!! அப்போதிலிருந்து .... சோதிடத்தை நம்புகிறேன் ....!!! ^ எனக்குள் காதல் மழை 18 கவிப்புயல் இனியவன்

அதிசயக்குழந்தை - ஆசை

அதிசயக்குழந்தை - ஆசை ---------- உன் ஆசை என்ன என்று கேட்டேன் ... அதிசயக்குழந்தையிடம்.....? ஆசையில்லாமல் இருக்கவே ... ஆசை என்றான் ஒரே வரியில் ....!!! என்னப்பா சொல்கிறாய் ....? ஆமா ஆசானே .....!!! ஆசையே அனைத்து துன்பத்துக்கும் .... மூல காரணி ......!!! நிறைவேறாத ஆசையின் வெளிப்பாடே .... கோபம் ,,,,,,,,,,,,!!! கோபத்தின் வெளிப்பாடே .... கொடூரம் ...........!!! கோபத்தை குறையுங்கள் ..... என்பது தவறு - ஆசையை .... குறையுங்கள் என்பதே சரியானது .....!!! பெண் ஆசை .... நடத்தையை கெடுக்கும் ...... மண் ஆசை ..... நாட்டை கெடுக்கும் ...... பொன் ஆசை ...... பெண்ணையே கெடுக்கும் .......!!! ஆசையை குறைப்பது எளிதல்ல .... ஆசையை வரிசைப்படுத்துங்கள் .... அந்த வரிசையில் இயலுமையை .... பாருங்கள் நிறைவேறக்கூடிய .... அவசியமான ஆசைக்கு ஆசைப்படுங்கள் .....!!! ^ அதிசயக்குழந்தை வசனக்கவிதை கவிப்புயல் இனியவன் தொடர் - 12

எனக்குள் காதல் மழை 17

என்ன கொடுமை .... உன் உதட்டை முத்தமிட ... வாய்ப்பில்லாமல் .... கீழே விழுந்துவிட்டதே .... ஐஸ்கிறீம் .....!!! எல்லாவற்றுக்கும்.... கொடுப்பனவு இருக்கணும்.... உன்னை முத்தமிடுவதற்கு ..... ஐஸ்கிறீம் ..... கொடுத்துவைக்கவில்லை ...!!!   ^ எனக்குள் காதல் மழை 17 கவிப்புயல் இனியவன்   

எனக்குள் காதல் மழை 16

ஒரு கவிஞன் தலையில் இருந்து பாதம் வரை வர்ணித்து .... கவிதை எழுதுவான் .... உன்னை எங்கிருந்து ... ஆரம்பிப்பது ...? திகைத்து நிற்கிறேன் நீ ஒரு அதிசயப்பிறவி ....!!! ^ எனக்குள் காதல் மழை 16 கவிப்புயல் இனியவன்

ஒரு நிமிட உலகம்

மரணத்தில் ஏன் அழுகிறாய்....? ----- குழந்தை பிறந்தது .... பேர் சூட்டும் விழா .... உறவினர் வந்தனர் .... கூடி சாப்பிட்டனர் .... குதூகளித்தனர் .... கலைந்தனர் ....!!! ஆண்டு .... ஒன்று நிறைவு .... பிறந்தநாள் வைபவம் .... கேக் வெட்டினர் .... பாட்டு பாடினர் .... கூடி சாப்பிட்டனர் .... குதூகளித்தனர் .... கலைந்தனர் ....!!! திருமண அழைப்பு .... உறவுகள் குவிந்தன .... ஆசீர் வாதம் வழங்கினர் .... கூடி சாப்பிட்டனர் .... குதூகளித்தனர் .... கலைந்தனர் ....!!! மரண அறிவிப்பு .... உறவுகள் கூடினர் .... ஒப்பாரி வைத்தனர் ... ஓலமிட்டனர் .... சோகத்தில் நின்றனர் ....!!! எல்லா நிகழ்விலும் .... சிரித்த மனிதன் ... மரணத்தில் மட்டும் .... அழுவதேன் .....??? அடுத்து தனது மரணம் ... பயத்தால் அழுகின்றானா ....? இத்தனை காலமும் ... உதவிய ஓருவன் இறந்துவிட்டானே .... ஏக்கத்தால் அழுகின்றானா ....? இத்தனை காலம் அத்துணை .... இன்பத்தை தந்தவன் .... இறந்துவிட்டானே -என்ற ... வருத்தத்தால் அழுகின்றானா ....? மொத்தத்தில் மரணத்தில் அழுகை ... சுயநலத்தின் ஒன்றாய் தான் இருக்கவேண்டும் ...... பிறப்ப

எனக்குள் காதல் மழை 15

நான் ஓடும்போது நெஞ்சை ... பொத்தி ஓடுகிறேன் .... மற்றவர்களுக்கு ...... வேண்டுமென்றால் .... சட்டை பையில் இருக்கும் .... பணம் விழாமல் இருக்க ... என்று ஜோசிக்கட்டும் ....!!! நீ அப்படி நினைத்துவிடாதே ... உனக்கு தெரியும் நெஞ்சில் ... இருப்பது நீ ....!!! ^ எனக்குள் காதல் மழை 15 கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 14

உனக்கும் எனக்கும் ... எத்தனை வேறுபாடுகள் .... அழகால் அறிவால் பணத்தால் ... ஒரே ஒரு ஒற்றுமை .... உன்னிடமும் என்னிடமும் ... காதல் கொண்ட இதயம் ... இருக்கிறது ......!!! ^ எனக்குள் காதல் மழை 14 கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 13

ஒருவரை ஒருவர் .... தெரியாமல் முட்டி .... மன்னிப்பு கேட்டு .... அதை மனதுக்குள் ... சுமந்துகொண்டு ... காதல் நினைவோடு ... வாழ்வதெல்லாம் .... சினிமாவில் தான் .... நடக்கும் ......!!! என்ன அதிசயம் .... நமக்கும் நடக்கிறதே ....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 13 கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 12

உன் கண்கள் ... தானியக்கி நானே .... தொலைக்காட்சி-நீ அசைகின்றபோதேலாம் அசைகிறேன்....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 12 கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 11

கிளியிடம் கொத்தும் பயிற்சி .... எடுக்கப்போகிறேன் ... உன்னை எப்படி ... கொத்திக்கொண்டு ... செல்லலாம் ...? என்பதை அறிந்து கொள்ள....? ^ எனக்குள் காதல் மழை தூறல் 11 கவிப்புயல் இனியவன்

நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 03

காதலை ... உதட்டளவில் சொல்லி ... இதயத்தை காயப்படுத்தும் .... காதலில் விழுந்து விட்டேன் ...!!! இன்னும் ... காதல் சிறையில் நான் ... இன்றே அவளும் ... மாற வேண்டும் ..... அன்றேல் என் இதயம் ... மாறவேண்டும் .... அவள் நினைவுகள் ... முள்ளாய் குத்தினாலும் ... சுகமாய் தான் இருகிறது ...!!! ^ நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 03 கே இனியவன்

நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 02

காதலை .... வழியை நானே .... வலியத்தேடி.... காதலோடு வாழ்ந்தேன் .... காதல் வலியை .... தந்தது ....!!! வலியோடு ... வாழ்ந்தாலும் ... காதலோடு வாழ்கிறேன் ... நினைவுகள் கள்ளி முள்ளாய் குத்தினாலும் .... காதல் இனித்து கொண்டே .... எப்போது இருகிறது ....!!! ^ நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 02 கே இனியவன்

நெஞ்சுக்குள் கள்ளிச்செடி

நினைவுகள் எல்லாம் .... இனிமையில்லை ....! அழகான ரோஜாக்கு கீழ் ... ஆபத்தான முள் ....! முள்ளை கவனிப்பாய் .... யாருமில்லை ரோஜா .... அழகாக இருப்பதால் .....! நெஞ்சுக்குள் ..... கள்ளிச்செடியை வைத்து .... முகத்தில் ரோஜாவுடன் ..... வாழும் காதலர்களே .... அதிகமாக இருக்கிறார்கள் ....!!! ^ நெஞ்சுக்குள் கள்ளிச்செடி கே இனியவன் 

கடல் வழிக்கால்வாய் 05

-------------------------------- கடல் வழிக்கால்வாய் -------------------------------- .........என்னை உணர்பவன் செல்வந்தன்  ....... ^^^^^^^^^^^^^^^^^ நான் உங்கள் நீர் .... பேசுகிறேன் ..... உலகின் தோற்றமும் .... உலக முடிவும் .... நானாக இருக்கிறேன் ....!!! என் உடன் பிறப்புகளே ... நிலம் காற்று நெருப்பு ஆகாயம் ..... என் குழந்தைகளே .... நதி, அருவி,குளம் ,குட்டை ... கிணறு ,ஓடை ,பள்ளம் ....!!! நான் மகிழ்ச்சியாய் இருந்தால் ... பருவ மழை .... கோபமாய் இருந்தால் .... சூறாவளி..... வெறுப்படைந்தால் ... சுனாமி ...................!!! என் சகோதரி நிலம் போல் .... நானும் ஒரு தனி உலகம் .... அவள் மனிதன் ,மிருகம் ... மரங்கள் .பறவை .ஊர்வன ... என்பவற்றை படைத்து ... காக்கிறாள் - நானும் ... நீருலகத்தை படைத்து .... காக்கிறேன் .....................!!! என்னை பற்றி .... கொஞ்சம் சொல்கிறேன் ... அருவிதான் என் கூந்தல் ... ஊற்றுதான் என் ஆத்மா .... நதி என் வாழ்க்கை நெறி .... கடல் என் கருப்பை ..... நீராவி தற்காலிக மரணம் ....!!! நீர் பறவைகளுக்கு - நான் விளையாட்டு மைதானம் .... மனி

உன்னைவிட்டால் எதுவுமில்லை 05

நீங்கள் ... எதையும் ... தானம் செய்யுங்கள் .... இன்னொரு உயிர் வாழ ... வழிவகுக்கும் ....!!! காதலை தானம் ... செய்யாதீர்கள் .... உங்களையும் கொல்லும்... மற்ற உயிரையும் கொள்ளும் ...!!! ^ காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை இது காதலர் கவிதை அல்ல காதல் கவிதை 05 ^ கவிநாட்டியரசர் கே இனியவன்

எனக்குள் காதல் மழை 10

நீ யார் ...? எதை பார்த்தாலும் .... எதை நினைத்தாலும் .... எதை பேசினாலும் .... நீயாக இருக்கும் நீ யார் ...? கோயிலில் கும்பிட்டால் ... விக்கிரகமாக நீ நீ என் கடவுளா ...? மாஜக்காறியா ....? ^ எனக்குள் காதல் மழை தூறல் 10

எனக்குள் காதல் மழை 09

யார் வீட்டு திருமணத்துக்கும் போ ... பெண் தோழியாய் ..... மட்டும் இருந்துவிடாதே .... அந்த திருமணத்தை .... நிறுத்திய குற்றதுக்குள் .... விழுந்துவிடாதே ....!!!  ^ எனக்குள் காதல் மழை தூறல் 09

எனக்குள் காதல் மழை 08

நீ கரும்பு ..... மிக சிறிய எறும்புக்கும் ... மிக பெரிய யானைக்கும் .... பிடிப்பதுபோல் -உன்னை எல்லோருக்கும் பிடிகிறது .... ஒரே ஒரு முறை ... என்னை நீ .... பிடித்துவிடேன் ....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 08

எனக்குள் காதல் மழை 07

வானத்தில் .... நட்சத்திரங்கள் .... கண் சிமிட்டி முகிலை .... காதலிக்கின்றன ....!!! பூக்கள் கண் சிமிட்டி ... தேனீக்களை .... காதலிக்கின்றன ...!!! நான் ... உன்னை காதலிக்க ... கண் சிமிட்ட மாட்டேன்.... என் கண்ணுக்குள் .... நீ குடியிருக்கிறாயே ....!!!  ^ எனக்குள் காதல் மழை தூறல் 07

எனக்குள் காதல் மழை 06

நிலவுக்கு ... போக மாட்டேன் ... நிலவாக நீயே.... இருக்கிறாயே ....!!! பட்டாம் பூச்சிகள் ... அழகில்லை ...... உன்னருகில் அவை .... வரும்போதே .... அழகாகின்றன -நீயோ பட்டாம் பூச்சிகளின் ... இளவரசியாய் ..... இருக்கிறாயே   ....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 06 கவிநாட்டியரசர் கே இனியவன் 

உன்னை விட்டால் எதுவுமில்லை 04

கோயிலில்லா ஊரில் ... குடியிருக்கலாம் .... காதல் இல்லா ஊரில் ... குடியிருக்காதீர்கள்...!!! உப்பில்லா பண்டம் ... குப்பையிலே .... காதல் இல்லா இதயம் .... குழியினிலே .....!!! ^ காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை இது காதலர் கவிதை அல்ல காதல் கவிதை ^ கவிநாட்டியரசர் கே இனியவன்

உன்னை விட்டால் எதுவுமில்லை 03

அதிகாலையில் .... காதலோடு துயிலெழுங்கள்.... அதுவே உன்னத தியானம் ...!!! இரவில் .... காதலோடு உறங்குங்கள் .... அதுவே உன்னத நிம்மதி ....!!! ^ காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை இது காதலர் கவிதை அல்ல காதல் கவிதை ^ கவிநாட்டியரசர் கே இனியவன்

உன்னை விட்டால் எதுவுமில்லை 02

உங்களிடம் .... ஒரு சொத்துமில்லையே ... கவலைபடாதீர்கள் ....!!! உங்களிடம் இருக்கும் .... காதலே சொத்துகளுக்கெல்லாம்... தலையாய சொத்து .... காதல் செய்துபாருங்கள் ..... எல்லாம் உங்கள் வசமாகும் ....!!! ^ காதலே  உன்னைவிட்டால் எதுவுமில்லை  இது காதலர் கவிதை அல்ல  காதல் கவிதை  ^ கவிநாட்டியரசர்  கே இனியவன்

காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை

எங்கும் ... நிறைந்த காதலே .... நீ என்னோடு இருக்கிறாய் .... என்ற தைரியத்தில்தான் .... கவிஞனாக இருக்கிறேன்....!!! நீதிமன்ற கூண்டில் நின்று .... சொல்வதெல்லாம் உண்மை.... உண்மையை தவிர வேறு.... எதுவுமில்லை -என்று ... சொல்வதுபோல் -நானும் ... உறுதிமொழி சொல்கிறேன்....!!! காதலே .... எனக்கு உன்னை விட்டால் .... யாருமில்லை ....!!! ^ காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை இது காதலர் கவிதை அல்ல காதல் கவிதை ^ கவிநாட்டியரசர் கே இனியவன் 

உன்னை விட்டால் எதுவுமில்லை

படம்

எனக்குள் காதல் மழை 05

எந்த.... உடையில் நீ வந்தாலும் .... அழகுதான் .... உன்னை அணியவைத்து ... ஆடைகள் .... தம்மை அழகுபடுத்துகின்றன....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 05

எனக்குள் காதல் மழை 04

உனக்காக ... மாஜவித்தை .... கற்கப்போகிறேன்.... உன் தோளில் ஒருமறை ... உட்கார பட்டாம் பூச்சியாய் .... உன் மோதிரவிரலில் ... நுழைய தங்க மோதிரமாய் .... உருமாறப்போகிறேன்....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 04

எனக்குள் காதல் மழை தூறல் 03

உன்னை நல்ல எண்ணத்தோடு ... நினைக்கும்போது .... கவிதை எழுதுகிறேன் .... கொஞ்சம் .... கெட்ட வார்த்தையால் ... வர்ணிக்கப்போகிறேன்... என் டயரியை வந்து பார் ...!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 03

எனக்குள் காதல் மழை 02

என்னை கவிஞனாக்கியது ... கற்பனைகளல்ல... உன் ஒவ்வொரு .... அசைவுகளும் .... நீ என்னோடு பேசிய .... வார்த்தைகள் ..... உன் தோழியோடு.... பேசிய வார்த்தைகளும் ...!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 02

எனக்குள் காதல் மழை 01

நீ சூரிய உதய நேரம் .... பிறந்திருக்கிறாய் .... உன்னை காணும் .... போதெலாம் சூரியனை .... கண்ட தாமரைபோல் .... என் .... இதயத்துக்குள்ளும் .... மலர்வு ஏற்படுகிறது ....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 01

எனக்குள் காதல் மழை

படம்

ஒரு நிமிட உலகம் 06

ஆறாம் அறிவு  இதுதானா ...? --- ஆறறிவை பெற்ற மனிதன் .... ஆடையால் மானத்தை காக்கிறான் .... ஆடையே போடாத மிருகத்திடம் .... ஆறறிவு மனிதனிடம் இல்லாத .... அற்புத பண்பு இருக்கிறதே -அவை ... கற்பழிப்பில் ஈடுபடுவதில்லை ....!!! மேலாடையாய் தம் தோலை .... மறைத்து மானத்தை காக்கும் .... மிருகங்களின் தோலை மனிதன் .... மேலாடையாய் போடுகிறான் .... இருந்துமென்னபயன்...? மேலான சிந்தனைகள் இல்லையே .... பகுத்தறிவு என்ற ஆறாம் அறிவை ... மனிதனுக்கு பறித்துண்ணத்தான் ... கொடுத்தானோ ....? ^^^ ஒரு நிமிட உலகம் ...............வாழ்வியல் கவிதை **ஆறாம் அறிவு இதுதானா ...? ** + கவி நாட்டியரசர் கே இனியவன் 

ஒரு நிமிட உலகம் 05

ஆடையே மனித குணம் -- விதம் விதமாய் ஆடைகள் .... வண்ண வண்ண நிறங்கள் .... காலத்துக்கேற்ற நாகரீகங்கள் .... ஆடைகள் வண்ணங்களை .... மட்டும் தோற்றுவிப்பதில்லை .... மனித எண்ணங்களையும் .... தோற்றுவிக்கும் ...... "ஆடைகள் உடலை மட்டும் " மறைப்பதில்லை -பிறர் மனதையும் மறைக்க வேண்டும் ....!!! ஆடை பாதி ஆள் பாதி ... என்றாகள் எம் முன்னோடிகள் .... அத்தனை உண்மை பார்த்தீர்களா ..? ஆடை அலங்காரம் ஒருவனின் .... எண்ணத்தை வெளிப்பதும் ... என்பதையே அப்படி சொன்னார்கள் ....!!! ஆடை ஆயுளை கூட்டவேண்டும் .... அறிவை அதிகரிக்க வேண்டும் .... அன்பை பெருக்க வேண்டும் .... கலாச்சாரத்தை வளர்க்கவேண்டும் .... ஒழுக்கத்தை பேணவேண்டும் ....!!! ^^^ ஒரு நிமிட உலகம் ...............வாழ்வியல் கவிதை **ஆடையே மனித குணம் ** + கவிப்புயல் இனியவன் 

கடல் வழிக்கால்வாய் 04

-------------------------------- கடல் வழிக்கால்வாய்  -------------------------------- .........ஒரு மரணம் மறு ஜனனம்  ....... ^^^^^^^^^^^^^^^^^ மழைத்துளி மரணமே .... பயிரின் ஜனனம் .... பயிரின் மரணமே .... வாழ்க்கை ஜனனம் ....!!! பூவின் மரணமே .... காயின் ஜனனம் .... காயின் மரணமே .... கனியின் ஜனனம் ....!!! சூரியனின் மரணமே .... சந்திரனின் ஜனனம் .... சந்திரனின் மரணமே .... பகலின் ஜனனம் ....!!! பழமையின் மரணமே .... நவீனத்தின் ஜனனம் .... நவீனத்தின் மரணமே .... உலக அழிவின் ஜனனம் ....!!! அறியாமையின் மரணமே ..... அகந்தையின் ஜனனம் ... அகந்தையின் மரணமே ..... ஞானத்தின் ஜனனம் .....!!! & கடல் வழிக்கால்வாய்  ஆன்மீக கவிதை  கவிப்புயல் இனியவன்

கடல் வழிக்கால்வாய் 03

கடல் வழிக்கால்வாய்  -------------------------------- .........சிலுவை சுமக்கும் மனிதன்....... ^^^^^^^^^^^^^^^^^ மனிதனின் எல்லா செயல்களும் .... சிலுவையாக மாறுகின்றன .... எல்லா விளைவுகளும் ஆணியாக.... அறையப்படுகின்றன....!!! குடும்பம் என்னும் உறவை .... சிலுவையாய் சுமக்கிறான் .... அன்பு என்னும் ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! கல்வி, பதவி, என்னும் .... சிலுவையை சுமக்கிறான் ..... அதிகாரம் என்னும் ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! உழைப்பு, வருமானம் எனும் ... சிலுவையாய் சுமக்கிறான் .... விரத்தி நோய் என்னும் ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! போட்டி வெற்றி என்னும் .... சிலுவையாய் சுமக்கிறான் .... பகைமை ,பொறாமை ,ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! அத்தனை சுமைகளையும் .... சுமக்கும் மனிதனுக்கு .... விடுதலை ஒன்றே விடுதலை .... ஓடும் புளியம்பழம் போல் .... வாழ்வதே விடுதலை .....!!! & கடல் வழிக்கால்வாய்  ஆன்மீக கவிதை  கவிப்புயல் இனியவன்

ஒரு நிமிட உலகம் 04

தப்புக்கணக்கு  ----- தூரத்தில் இருப்பதிலும் .... மறை பொருளாய் இருப்பதிலும் .... எப்பவுமே மனித மனத்துக்கு ..... ஒரு இச்சையுண்டு....!!! எனக்கு அது விதிவிலக்கல்ல .... நிலாமீது ஒரு காதல் .... விண்மீன்கள் மீது மோகம் .... இரண்டையும் ரசிப்பதற்கு .... கனவு விமானத்தில் ... விண் மண்டலம் சென்றேன் .....!!! நிலவருகே சென்றேன் .... வா என்று அழைகவில்லை ..... அவள் மென்மை அழகில் .... மயங்கினேன் என்னை .... மறந்து கவிதை எழுதினேன் .....!!! மெல்ல சொன்னது நிலா .... அதிகம் என்னில் காதல் .... கொள்ளாதே - எனக்கும் ... இருட்டு உண்டு என்னுள் ... இருளும் உண்டு .......!!! நிலா அருகில் துடித்து .... நடித்துகொண்டிருந்த .... விண் மீன்கள் கண்களை ... சிமிட்டி சிமிட்டி என்னை .... அழைத்துக்கொண்டிருந்தன ..... அருகில் சென்றேன் ..... தள்ளி போய்விடு என்று ... கத்தியது .....!!! திகைத்து நின்றேன் .... நீதானே என்னை கண்ணால்... சிமிட்டி சிமிட்டி வா வா ... என்றாய் இப்போ திட்டுகிறாயே ....? போடா மூடனே .... என் குணவியல்பு அதுவே .... நீ தப்பாக நினைத்தது -என்  தப்பில்லையே ...??? மனித மனம் இப்படித்தான் ... அருகில் உள்ள அழகை ரசிக்காது ...

ஒரு நிமிட உலகம் 03

பிறப்பும் இறப்பும் சமன் --- இறந்த பிணத்தை ..... இறக்கப்போகும் பிணங்கள் .... ஒன்றுகூடி ஓலமிட்டன .....!!! இறந்த பிணம் ...!!! கோபத்தில் பேசத்தொடங்கியது ...... இறக்கபோகிறவர்களே.... வாருங்கள் இறக்கபோவதற்காக....? பிறப்பு இனிமையானது .... இறப்பு கொடுமையானது .... என்ற எண்ணத்தில் ஒலமிடாதீர் .... பிறப்பு இயற்கை தந்த பரிசு .... இறப்பு இயற்கை தந்த கொடை..... புரிந்து கொண்டவனே ஞானி ....!!! எல்லா உயிரும் ஒருநொடி .... தொடக்கம் எல்லா உயிரின் .... அடக்கமும் ஒரு நொடி தான் ..... அந்த ஒருநிமிடத்தில் தான் .... உலகமே இயங்குகிறது ......!!! ^^^ ஒரு நிமிட உலகம்  ...............வாழ்வியல் கவிதை  ** பிறப்பும் இறப்பும் சமன் ** + கவிப்புயல் இனியவன்