இடுகைகள்

ஏப்ரல் 6, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன்னை விட்டால் எதுவுமில்லை 04

கோயிலில்லா ஊரில் ... குடியிருக்கலாம் .... காதல் இல்லா ஊரில் ... குடியிருக்காதீர்கள்...!!! உப்பில்லா பண்டம் ... குப்பையிலே .... காதல் இல்லா இதயம் .... குழியினிலே .....!!! ^ காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை இது காதலர் கவிதை அல்ல காதல் கவிதை ^ கவிநாட்டியரசர் கே இனியவன்

உன்னை விட்டால் எதுவுமில்லை 03

அதிகாலையில் .... காதலோடு துயிலெழுங்கள்.... அதுவே உன்னத தியானம் ...!!! இரவில் .... காதலோடு உறங்குங்கள் .... அதுவே உன்னத நிம்மதி ....!!! ^ காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை இது காதலர் கவிதை அல்ல காதல் கவிதை ^ கவிநாட்டியரசர் கே இனியவன்

உன்னை விட்டால் எதுவுமில்லை 02

உங்களிடம் .... ஒரு சொத்துமில்லையே ... கவலைபடாதீர்கள் ....!!! உங்களிடம் இருக்கும் .... காதலே சொத்துகளுக்கெல்லாம்... தலையாய சொத்து .... காதல் செய்துபாருங்கள் ..... எல்லாம் உங்கள் வசமாகும் ....!!! ^ காதலே  உன்னைவிட்டால் எதுவுமில்லை  இது காதலர் கவிதை அல்ல  காதல் கவிதை  ^ கவிநாட்டியரசர்  கே இனியவன்

காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை

எங்கும் ... நிறைந்த காதலே .... நீ என்னோடு இருக்கிறாய் .... என்ற தைரியத்தில்தான் .... கவிஞனாக இருக்கிறேன்....!!! நீதிமன்ற கூண்டில் நின்று .... சொல்வதெல்லாம் உண்மை.... உண்மையை தவிர வேறு.... எதுவுமில்லை -என்று ... சொல்வதுபோல் -நானும் ... உறுதிமொழி சொல்கிறேன்....!!! காதலே .... எனக்கு உன்னை விட்டால் .... யாருமில்லை ....!!! ^ காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை இது காதலர் கவிதை அல்ல காதல் கவிதை ^ கவிநாட்டியரசர் கே இனியவன் 

உன்னை விட்டால் எதுவுமில்லை

படம்

எனக்குள் காதல் மழை 05

எந்த.... உடையில் நீ வந்தாலும் .... அழகுதான் .... உன்னை அணியவைத்து ... ஆடைகள் .... தம்மை அழகுபடுத்துகின்றன....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 05

எனக்குள் காதல் மழை 04

உனக்காக ... மாஜவித்தை .... கற்கப்போகிறேன்.... உன் தோளில் ஒருமறை ... உட்கார பட்டாம் பூச்சியாய் .... உன் மோதிரவிரலில் ... நுழைய தங்க மோதிரமாய் .... உருமாறப்போகிறேன்....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 04

எனக்குள் காதல் மழை தூறல் 03

உன்னை நல்ல எண்ணத்தோடு ... நினைக்கும்போது .... கவிதை எழுதுகிறேன் .... கொஞ்சம் .... கெட்ட வார்த்தையால் ... வர்ணிக்கப்போகிறேன்... என் டயரியை வந்து பார் ...!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 03

எனக்குள் காதல் மழை 02

என்னை கவிஞனாக்கியது ... கற்பனைகளல்ல... உன் ஒவ்வொரு .... அசைவுகளும் .... நீ என்னோடு பேசிய .... வார்த்தைகள் ..... உன் தோழியோடு.... பேசிய வார்த்தைகளும் ...!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 02

எனக்குள் காதல் மழை 01

நீ சூரிய உதய நேரம் .... பிறந்திருக்கிறாய் .... உன்னை காணும் .... போதெலாம் சூரியனை .... கண்ட தாமரைபோல் .... என் .... இதயத்துக்குள்ளும் .... மலர்வு ஏற்படுகிறது ....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 01

எனக்குள் காதல் மழை

படம்