என் பிரியமான மகராசி
என் பிரியமான மகராசி ------ நிலவின் வடிவத்தை..... உடலாக கொண்டு ..... நிலவின் ஒளியை உடல்..... நிறமாக கொண்டவள்..... என் பிரியமான மகராசி.......!!! மயிலைப்போல் பாடுவாள்..... குயிலைபோல் ஆடுவாள்.... நடனமாடும் சிகரமவள்.... அவள் வதனத்தை உவமைக்குள் ..... பூட்டிவைக்கமுடியாததால்..... உவமைகளையே ...... மாற்றவைத்துவிட்டாள்.............!!! அவளை கவிதை வடிக்கிறேன்..... வரிகள் வெட்கப்படுகின்றன...... அவளின் வெட்கத்தையும்.... கவிதையின் வெட்கத்தையும்..... இணைக்கும் போது எனக்கும்.... வெட்கம் வருகிறது - அவளை..... வார்த்தைகளால் நினைக்கும் போது .........!!! அவளை தொட்டு பார்க்கும் ......... பாக்கியம் எனக்கு கிடைக்குமோ.... கிடைக்காதோ தெரியாது ...... நிச்சயம் கவிதையால் அவளை..... தொடாமல் இருக்க மாட்டேன்..... அவள் உள்ளம் தொட்ட பாக்கியன்..... நானாவேன்........................!!! கண் சிமிட்டும் போதெல்லாம்...... என் இதயத்தை ஒவ்வொருமுறை...... புகைபடம் எடுத்துவிடுகிறாள்...... ஒவ்வொருமுறையும் தலைமுடி..... கோதும்போது நரம்புகளை...... வருடி கிள்ளி எடுத்து வீசுகிறாள்.....!!! & கவிப்