இடுகைகள்

செப்டம்பர் 6, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் பிரியமான மகராசி 05

உன்னை வர்ணித்து .... எழுத நான் உன் மீது .... காதல் மோகம் .... கொண்டவனல்ல ...... காதல் மீது காதல் ...... கொண்டவன் ....... நீ -என் காதலின் ...... கருவி மட்டுமே ..........!!! உன் இதழ்களை வர்ணித்து ..... எழுதிய கவிதைகள் எல்லாம் .... சிறப்பு கவிதை ...... சிறப்பிதழ் கவிதை ..... பக்கத்தில் சிறப்பாய் வருகிறது ......!!! நீ சேலை உடுத்து வந்தால் .... அன்றைய கவிதை தலைப்பு .... கவிதையாகிறது ..... பாவாடை தாவணியில் வந்தால் ..... பார்வையில் அதிகம் பெற்ற ..... கவிதை பகுதிக்குள் வருகிறது ....!!! & கவிப்புயல் இனியவன் என் பிரியமான மகராசி 05

என் பிரியமான மகராசி 04

மனை கதவை திறந்து .....  வைத்திருக்கிறேன் .....  எப்போது வருவாய் என்று .....  நீயோ மனக்கதவை ....  பூட்டி வைத்திருக்கிறாயே....?  உன்னை நினைத்து கவிதை .....  எழுத சற்று கண்ணை மூடினேன் .....  அந்த நொடிக்குள் ஆயிரம் .....  பட்டாம் பூச்சியாய் வருகிறாய் .....  அருவியாய் வருகிறது கவிதை .....!!!  நீ என்.....  இதயத்தை கண்ணாடியாய் ......  பார்க்கிறாயா .....?  வருவதும் செல்வதும் புரியவில்லை .....!!!  &  கவிப்புயல் இனியவன்  என் பிரியமான மகராசி 04

என் பிரியமான மகராசி 03

வீணையின் நரம்புகள் ..... அசைந்தால் இசை ..... உன் கூந்தலின் முடிகள் .... அசைந்தால் எனக்கு இசை .....!!! இதயத்தில்- நீ இரு-தாங்கி கொள்வேன் ....... நீயோ ....... குருதி இருக்கிறாய் ..... உடல் முழுதும் ஓடினால்..... எப்படி தாங்குவேன் ......? யானைக்கு இரண்டு .... தந்தம் தான் மவுசு ...... உன் முத்து பற்கள்...... ஒவ்வொன்றும் தந்தத்தின் ..... மவுசு ...........!!! & கவிப்புயல் இனியவன் என் பிரியமான மகராசி 03

என் பிரியமான மகராசி 02

போதும் உன் கண் ..... எறிகணை வீச்சு ..... இதயத்தை தவிர ..... உடல் முழுதும் ...... கருகி விட்டேன் .....!!! நான் ...... கடவுளின் படைப்பு ...... நீ கடவுளாகவே ....... படைக்க பட்டவள் ...... அழகு தேவதைகளின் .... வதனக்கடவுள் .........!!! பூ என்றால் மரத்தில் ..... இருந்து பூக்க வேண்டும் ...... நீயோ பூவிலிருந்து பூத்தவள்...... பூமகள் ..........!!! என்னை புதைத்த இடத்தில் ...... புல் தான் முளைக்கும் ..... உன்னை புதைக்கும் இடத்தில் ..... பூக்கள் மலரும் ........ அப்படியொரு அதிசயபிறவி ......!!! & கவிப்புயல் இனியவன் என் பிரியமான மகராசி 02