அதிசயக்குழந்தை - முதுமை
அதிசயக்குழந்தை - முதுமை ---------- பக்கத்து வீட்டில் தாத்தா .... பேரனை திட்டியபடி இருந்தார் .... தனது அனுபவத்தையெல்லாம் .... அறிவுரையாக கொட்டி கொண்டிருந்தார் ..... பேரனோ காதில் விழுத்தாமல் .... எங்கேயோ பார்த்துகொண்டிருந்தான் ... கோபமடைந்த தாத்தா அடிக்க கை .... ஓங்கினார்................................................. அப்போது அதிசய குழந்தை ....!!! தாத்தா நிறுத்துங்க... நிறுத்துங்க .... உங்களுக்கு அறிவுரை செய்ய ... நான் பெரும் அறிவானவன் இல்லை ... என்றாலும் கூறதொடங்கினான்.....!!! முதுமையில் எல்லோரும் -தம் .... அனுபவத்தை அறிவாக நினைத்து .... அறிவுரை சொல்கிறார்கள் -தப்பு ... அனுபவம் வேறு அறிவு வேறு .....! உங்களது அனுபவம் மற்றவனுக்கு .... தேவைப்படாது ,பொருத்தமற்றது .... முதுமையில் அதை நீங்கள் பிறர் .... மீது திணிக்கிறீர்கள் தப்பு தாத்தா ...!!! வயது கூடியவர்கள் அறிவாளிகள் .... வயது குறைந்தவர்கள் அறிவற்றவர்கள் .... நாங்களே அனுபவசாலிகள் ... உங்களுக்கு அனுபவம் போதாது .... என்றெல்லாம் முதியோர் நினைப்பது .... தப்பு தாத்தா தப்பு .....!!! முதுமையின் ஒத்தகருத்...