இடுகைகள்

பிப்ரவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னவனே என் கள்வனே 07

உன் வரவுக்காக ஏங்கி..... கண் வழியே பாதை...... அமைத்து  தெருவையே....... அமைத்து விட்டேன்.........!!! நீயோ...... வருவதாய் இல்லை......... என் தூரபார்வையில்..... கோளாறு வந்தால் - நீ தான் அதற்கு காரணம்.... வைத்தியரிடம் முறையிடுவேன்....!!! ^^^ என்னவனே என் கள்வனே 07 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே 06

எத்தனை காலம்..... உன் நினைவுகளை..... சுமந்து கொண்டு வாழ்வது,.....? அதற்குஎல்லை இல்லையா...? வருகிறாய் பார்கிறாய்...... பேச துடிக்கிறாய்...... போசாமல் போய் விடுகிறாய்..... மது கோப்பைக்குள்........ விழுந்த புழுவாய் துடிகிறேன்.... என்னவனே என் மன்னவனே.....!!! ^^^ என்னவனே என் கள்வனே 06 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே 05

என் ....... குயில் குரலால்..... உன்னை அழைத்து...... கழுகு கண்ணால் ..... உன்னை கொன்று..... துடிக்க விடனும் என்று .... மனம் ஆசைபடுகிறது......!!! பாவம் - நீ நடைபிணமாய் ........... வாழ்ந்துவிடுவாய்...... என்பதற்காக உன்னை.... விட்டு விடுகிறேன்........ என்னவனே...........................!!! ^^^ என்னவனே என் கள்வனே 05 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே 04

உன் முகம் பார்க்க..... ஏங்கி ஏங்கி ஓரகண்ணால்... கண்ணீர் வர வழைத்தவனே..... உனக்கு அது சிறு துளி..... எனக்கு அது இதயத்தின்..... மொத்த வலி...................!!! வேறு வழியில்லாமல்..... இமைகளை மூடுகிறேன்....... என் ஏக்கத்தை புரிந்து..... கனவிலேனும் வருவாயா...? ^^^ என்னவனே என் கள்வனே 04 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன் 

என்னவனே என் கள்வனே 03

மழை பெய்யும் போது..... இரு கரத்தை குவித்து...... உள்ளங்கையில் மழை..... துளியை ஏந்தும்போது.... இதயத்தில் ஒரு இன்பம்.... தோன்றுமே அதேபோல்..... உன்னை யாரென்று..... தெரியாமல் இருந்த நொடியில்..... நீ என்னை திடீரென பார்த்த..... கணப்பொழுது........!!! என்னவனே என்னை..... புதைத்துவிட்டேன் உன்னில்....!!! ^^^ என்னவனே என் கள்வனே 03 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே 02

இலைகள் அற்ற மரகிளையில்....... ஒரு வண்ணாத்தி பூச்சியை..... கற்பனை செய்து பார்...... எத்தனை அழகோ அழகு..... அப்படிதானடா - நீ வெறுமை கொண்ட என்..... இதயத்தில் வந்தமர்ந்து...... என்னை பரவசப்படுத்துகிறாய்......!!! ^^^ என்னவனே என் கள்வனே 02 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே 01

என்னை சுற்றி ஈசல் பறக்கிறது......... மெல்லியதாய்மின்னல்...... சின்னதாய் ஒரு இடி...... மழை வரப்போகிறது....... என்னவனே உன்னில்..... இருந்து காதல் மழை..... பொழியப்போகிறது....... வனாந்தரமாய் இருந்த..... இதயத்தை சோலையாக்க..... வந்துவிடடா..............!!! ^^^ என்னவனே என் கள்வனே 01 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்