இடுகைகள்

ஏப்ரல் 17, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கையில் உதவியவை .....!!!

வாழ்க்கையில் உதவியவை .....!!! ----- ஏழையாக வாழ்ந்திருக்கிறேன்...... கோழையாக வாழவில்லை..... தந்தையின் உபதேசம் அது.......! மன்னித்து பழகியிருக்கிறேன்..... மண்டியிட்டு வாழவில்லை...... தாயின் வளர்ப்பு அது.............! திட்டு வாங்கியிருக்கிறென்........ முட்டாளாக வாழவில்லை...... அண்ணனின் உபதேசம் அது.....! தலை குனிந்து வாழ்ந்திருகிறேன்..... தலை குனியும்படி வாழவில்லை...... உற்றர் உறவினர்களின் தூண்டுதல்......! தலை நிமிர்ந்து வாழ்கிறேன்..... தலை கனத்தோடு வாழவில்லை.... இறைவனின் அருள் கிருபை அது.....! ^ தொடர் கவிதை தொகுப்பு கவிப்புயல் இனியவன் என் இதயம் பேசுகிறது 02

என் இதயம் பேசுகிறது

என் இதயம் பேசுகிறது 01 ---------------------------------- வாழ்வியல் சிறக்க ..... வாழ்க்கை சிறக்க வேண்டும்.....! வார்த்தை சிறக்க...... வரிகள் சிறக்க வேண்டும்.......! வாழ்த்துக்கள் சிறக்க..... வாய்மை சிறக்க வேண்டும்......! வாழ்க வளமுடன் என வாழ்த்தி...... வாழ்வோம் வையம் போற்ற.....! ^ தொடர் கவிதை தொகுப்பு கவிப்புயல் இனியவன் என் இதயம் பேசுகிறது