அதிசயக்குழந்தை - பெயர்

அதிசயக்குழந்தை - பெயர் 
---
ஏய் குழந்தாய்....
உன் பெயரென்ன ....?

அதிசயகுழந்தை....!!!

இது ஒரு பெயரா ...?

அப்போ சொல்லுங்கள் ...
ஆசானே..... 
பெயர் என்றால் என்ன ...?

நீ தான் 
வியாக்கியான வித்தகன்- சொல் ...!!!

அஃறிணையில் பிறந்த மனிதனை ...
" உயர்திணை" யாக்குவது ...
தான் பெயர் என்றான் ....!!!

புரியவில்லை என்றேன்....

விளக்கினான் இப்படி .....

நாய் ஓடியது (அஃறிணை)
பறவை பறக்கிறது (அஃறிணை)
கண்ணன் ஓடினான் (உயர்திணை)

இப்போது புரிகிறதா என்றான் ....?

புரிகிறது ஆனால் புரியல்ல ....

மேலும் சொன்னான் .....

மனிதன் பிறக்கும் போதும் ....
இறந்தபின்னும் அஃறிணை....!!!

இதோ என் விளக்கம் ....

குழந்தை அழுகிறது (அஃறிணை)
பிணம் எரிகிறது (அஃறிணை)
கண்ணன் அழுகிறான் ( உயர் திணை )

இப்போ பாருங்கள் ஆசானே ....
அஃறிணை பிறந்த மனிதன் ....
அஃறிணை இறக்கிறான் ....
இந்த இடைப்பட்ட காலத்தில் ....
மனிதனை உயர்திணையாக்கும்....
ஒரு மொழிக்கருவியே - பெயர் ....!!!

என்று மனிதனுக்கு பெயர் ....
சூட்ட படுகிறதோ -அன்றே அவன் ....
உயர் திணையில் அழைக்கப்படுகிறான் ....!!!
மனிதனின் வாழ்க்கை காலத்தை ....
உயர் தினையாக்குவதே -பெயர் ....!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 05

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05