உண்மையின் மறு பக்கம் பார்க்கிறேன்

உண்மையிடம்    
கேட்டேன்  ஒரு கேள்வி ...?
நல்லது எது கெட்டது எது ...?

உண்மை சொன்னது .....

வீட்டுக்குள்ளே 
செல்லும் போது செருப்பை ....
கழற்றி வைக்கிறோம் ....
செருப்பு ஒதுக்கப்படுகிறது ....

கொழுத்தும் வெய்யிலில் ....
பதைத்து துடிக்கும் போது ....
செருப்பு சொர்கமாகிறது ....!!!

நறுமணம் வீசும் போது ...
மனம் சுவைக்கிறது ...
துர்நாற்றம் வீசும்போது ...
மனம் சுழிக்கிறது ......

காற்றே இல்லாத அறைக்குள் .....
அடைக்கப்பட்டு அடுத்து மூச்சு ....
விட்டால் உயிர்பிழைக்கும் ...
நிலையில் துர்நாற்ற காற்று ....
சொர்க்கமாக மாறுகிறது ....!!!

நாக்கு வறண்டு உடல் சோர்ந்து ....
ஒரு துளி தண்ணீருக்கு மனம் ...
ஏங்கி கொண்டிருக்கும்போது ....
தெருவோர குட்டை தண்ணீர் ...
அமிர்தமாகிறது ......!!!

இப்போது சொல் ....
நல்லது எது கெட்டது எது ...?
உங்கள் தேவைக்கு அதிகமாக ....
கிடைக்கும்போது தான் நீங்கள் ....
நல்லது கெட்டது என்று ....
பாகுபடுத்துகிறீர்கள் ....!!!

தேவைக்கு குறைவாக இருக்கும் ...
காலத்தில் எதுவுமே கெட்டதில்லை...
உண்மை  மறுபக்கத்தை சொன்னது ...!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என்னவளே என் கவிதை 31-40

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05