இடுகைகள்

கனவாய் கலைந்த காதல் 06

பூவழகன் ..... திகைத்து நின்றான் .... தானோ அன்றாடம் சாப்பாடுக்கு .... திண்டாடும் வறுமை இளவரசன் .... அவளோ காரில் வரும் வசதி ... கொண்ட பண  இளவரசி ..... இது நமக்கு சரிவராது ..... ஒதுங்கினான் - பூவழகன்....!!! வகுப்பறைக்கு வந்தாள் இளவரசி ..... எல்லோரும் அவளை சூழ்ந்தனர் ...... தங்கள் பெயரை சொல்லி அறிமுகம் .... எல்லோருக்கும் கை கொடுத்து .... பழகும் திறந்த மனம் - பரந்த மனசு .... பூவழகனோ ஆவலுடன் இருந்தும் .... பேசவில்லை ....!!! பூவழகன் இதயமோ அவள் .... மீது சுற்றி திரிய - கூச்சமும் .... பொறாமையும் மனம் முழுதும் ... ஏக்கத்துடன் காத்திருக்க இருக்க .... நாளும் முடிவுக்கு நெருங்குகிறது ...!!! எப்போது என்னோடு பேசுவாள் ...? என்ன பேசப்போகிறாள் ....? பூவழகனின் தவறான ஏக்கம் .... புதிய மாணவியுடன் ... பூவழகன் தான் பேசவேண்டும் .... தெரிந்தும் அவள் பேசட்டும் முதலில் ... என்று ஆணழகன் என்ற நினைப்பில் ... காத்திருந்தான் பூவழகன் ......!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல் 06 வசனக்கவிதை....!!! ^^^ கவிப்புயல் இனியவன்

கனவாய் கலைந்த காதல் 05

காலை நேரம் .... பட்டாம் பூச்சிகளும் ... வண்டுகளும் அலையாய் ... வருவதுபோல் பெண் .... பிள்ளைகளும் ஆண் ..... வந்தவண்ணமே .... பாடசாலையில் ....!!! கனவோடு காத்திருக்கும் ... இரவு முழுதும் தூக்கத்தை ... கெடுத்த அந்த பட்டாம் பூச்சி .... சில மணித்தியாலத்தில் .... வந்து விடுவாள் .....!!! காதல்  இது தான் ..... முகம் தெரியாது .... பெயர் தெரியாது .... குணம் தெரியாது .... ஆனால் அவளை .... பார்க்கவேண்டும் ... என்று மனம் துடிக்கும் ....! காத்திருந்த அந்த நேரம் ... வந்தது காரில் இருந்து .... இறங்கினால் பூவரசனின் .... கனவு தேவதை ....!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல்  வசனக்கவிதை....!!! ^^^ கவிப்புயல் இனியவன்

கனவாய் கலைந்த காதல் 04

புதிய  சினேகிதி நாளை .... வரப்போகிறாள் .... எப்படி இருப்பாளோ ...? எந்தளவு படித்தாளோ...? வெளியூர் என்பதால் .... அழகாகவும் இருப்பாள்.... சுமாரான என்னோடு ... பேசுவாளா .....? இத்தனை  மனவோட்டத்துடன் .... பூவழகனின் இரவு .... விடியாமல் இருண்டு ... துடித்துகொண்டிருந்தது ...!!! பொழுது விடிந்தது .... தன்னுடன் இருக்கும் ஆடையை ... இயன்றவரை அழகு படுத்தி .... பழைய துவிசக்கர வண்டியில் .... பாடசாலை நோக்கி சென்றான்  ... பூவழகன்........!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல்  வசனக்கவிதை....!!! ^^^ கவிப்புயல் இனியவன்

கனவாய் கலைந்த காதல் 03

பூவழகன் .... பரீட்சை முடிவுகள் ... அந்தளவுக்கு சிறப்பில்லை .... இதனால் இவனை எல்லோரும் .... விவேகம் அற்றவன் என்றே.... கருதினர் - அது கூட உண்மை ....!!! பூவழகனின்.... ஒரு சிறப்பு இருப்பதை ... அழகாக பாவிப்பது .... இல்லாதவற்றை நினைத்து .... ஏங்குவதில்லை ...... தினமும் அழகாக உடுத்து .... வருவான் ஆனால் அவை .... புதியதல்ல .....!!! இந்த காலத்தில் தான் .... பூவழகன் படிக்க சென்ற .... பாடசாலைக்கு வெளிமாவட்ட .... பெண் ஒருத்தி புதிய மாணவியாய் .... வரப்போகிறாள் அந்த செய்தியுடன்..... இந்த நாள் பாடசாலை நாளும் .... முடிவுக்கு வந்தது ....!!!  ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல்  வசனக்கவிதை....!!! ^^^ கவிப்புயல் இனியவன்

கனவாய் கலைந்த காதல் 02

பூவழகன் .... ஒரு கிராமிய இளைஞன் .... நவ நாகரீகம்  தெரியாதவன் .... அதிகம் பேசாதவன் ..... பெரும் படிப்பு என்றுமில்லை .... படிப்பு இல்லையென்றுமில்லை .... ஆனால் வறுமை என்றால் .... நன்கு தெரிந்தவன் ....!!! கிராம புறத்தில் சாதாரண .... படிப்பை முடித்து நகர்புறம் ..... உயர் கல்விக்காய் போகிறான் ..... நகர புறத்தில் இருபால் பாடசாலை ..... பொதுவாகவே பெண்கள் என்றால் .... பூவழகனுக்கு ஒருவித பயம் ..... பாடசாலையோ கலவன் ..... புதிய முகங்கள் நகர்புற பெண்கள் .... பூவழகனை காட்டிலும் உசார் ....!!! முதல் நாள் பாடசாலை வாழ்க்கை ..... கிராம புறத்திலிருந்து நகர்புறம் ..... இடம்மாறிய பதட்டம் ,பயம் .... பூவழகனை சுற்றி நண்பர்கள் .... குசலம் விசாரிப்பதில் மும்மரம் .... பயத்தோடும் அசட்டை துணிவோடும் ... அன்றைய நாள் முடிவுக்கு வந்தது ....!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல்  வசனக்கவிதை....!!! ^^^ கவிப்புயல் இனியவன்

கனவாய் கலைந்த காதல்

எல்லோர் பருவத்திலும் ... வந்த காதல் இவனுக்கும் .... வந்து தொலைந்தது .... யார் இவன் .....? காதலுக்காய் காதல் ... செய்தான் காதோடு .... வாழ்ந்தான் இப்போ .... காதலி இல்லாமல் .... காதலோடு வாழ்கிறான் ....!!! காதல் இளவரசன் .... என்பதா ..?  காதல் தோல்வி .... தேவதாஸ் என்பதா ...? இரண்டுக்கும் .... இடைபட்டவன் தான் ... இந்த கவிதை தொடரின் ... நாயகன் - கதாநாயகன் ... " பூவழகன் " தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் ....!!! ^ கனவாய் கலைந்து போன காதல்  கவிப்புயல் இனியவன்  வசனக்கவிதை