இடுகைகள்

உண்மையின் மறுபக்கம் பார்க்கிறேன் - 03

உண்மை அநாதையானது ....!!! .......................உண்மையின் மறுபக்கம் பார்க்கிறேன் - 03 ^^^ குற்றவாளி கூண்டில் ..... குற்றம் சாட்டப்பட்டு ஒருவன் ..... கூண்டில் நிற்கிறான் .... சட்டவாதிகள் குற்றத்தின் மேல் .... குற்றம் சாட்டி குற்றமற்றவனை ..... குற்றவாளியாக்க முயற்சித்தனர் ....!!! பார்வையாளராக இருந்த .... உண்மைக்கு கோபம் வரவே ..... சட்டென்று எழுந்து - இவை ... அனைத்தும் பொய் . எனக்கு .... எல்லா உண்மையும் தெரியும் .... என்று உரத்த குரலில் சொன்னது .....!!! அதிர்ச்சியடைந்த நீதிபதி .... மன்றத்தின் அமைதியை கெடுதீர் ... குற்றம் சுமத்தி -உண்மையை ... மன்றத்திலிருந்து வெளியேற்றினார் ....!!! உண்மை .... வேலையில்லாமல் அலைந்தது .... பட்டதாரியாகவும் இருந்தது ...... சிறு வேலையென்றாலும் கிடைக்டும்.... தோட்ட முதலாளியிடம் வேலை கேட்டது .... என்ன படிதிருகிறாய் நீ ....? பட்டதாரி என்றது -உண்மை .... உனக்கு வேலை கிடையாது போ .... எதற்கு என்று வினாவியது உண்மை ...? இங்கே  படிக்காதவர்களே வேலை செய்கிறார்கள் .... நீ அவர்களையும் கெடுத்துவிடுவாய் ...... தொழிற்சங்கம் அமைப்பாய் -போராடுவாய்.... சம்பளம் கூட்டி கேட்பாய் ...

உண்மையின் மறு பக்கம் பார்க்கிறேன் 02

அறிவின் மறு பக்கம் சிக்கலானது ....!!! உண்மையின் மறு பக்கம் பார்கிறேன்-02 ----------------- உண்மையிடம்     கேட்டேன்  ஒரு கேள்வி ...? அறிவு எது ..? ஞானம் எது ..? உண்மை சொன்னது ..... அறிவுக்கும் ஞானத்துக்கும் ... எப்போதும் முரண் தொடர்தான் ..... அறிவு வளர வளர .... அறிவை தேட தேட ..... ஞானம் காணாமல் பொய் விடும் .... அறிவு தான் அத்தனை மன .... குழப்பத்துக்கும் காரணம் .....!!! அறிவுக்குள் நீங்கள் .... மூழ்கும் போதெலாம் ஆசை .... அதிகரித்துகொண்டே போகும் .... துன்பத்தையும் கோபத்தையும் ... துயரத்தையும் பெருக்கிக்கொண்டே .... செல்லும் .....!!! அறிவை பெருக்க பெருக்க .... உலக பற்றுதல் கூடிகொண்டே .... போகும் அறிவிலிருந்து தூர .... விலகும் காலம் எப்போது .... உன்னில் ஆரம்பிக்கிறதோ .... அப்போதுதான் நீ ஞானத்தில் .... அக்கறை செலுத்துவாய் .....!!! அறிவினால் எப்போதும் நீ ... ஒன்றை பற்றிப்பிடிப்பாய் .... அந்த பற்று உன்னை கொஞ்சம் ... கொஞ்சமாய் விழுங்கிகொண்டே ... இருக்கும் மீள் முடியாவிட்டால் .... கடும் துன்பத்துக்குள் விழுந்து ... விடுகிறாய் .......!!! அறிவு நிறைந்தால் தான் .... பெருமை என்று நினைப...

உண்மையின் மறு பக்கம் பார்க்கிறேன்

உண்மையிடம்     கேட்டேன்  ஒரு கேள்வி ...? நல்லது எது கெட்டது எது ...? உண்மை சொன்னது ..... வீட்டுக்குள்ளே  செல்லும் போது செருப்பை .... கழற்றி வைக்கிறோம் .... செருப்பு ஒதுக்கப்படுகிறது .... கொழுத்தும் வெய்யிலில் .... பதைத்து துடிக்கும் போது .... செருப்பு சொர்கமாகிறது ....!!! நறுமணம் வீசும் போது ... மனம் சுவைக்கிறது ... துர்நாற்றம் வீசும்போது ... மனம் சுழிக்கிறது ...... காற்றே இல்லாத அறைக்குள் ..... அடைக்கப்பட்டு அடுத்து மூச்சு .... விட்டால் உயிர்பிழைக்கும் ... நிலையில் துர்நாற்ற காற்று .... சொர்க்கமாக மாறுகிறது ....!!! நாக்கு வறண்டு உடல் சோர்ந்து .... ஒரு துளி தண்ணீருக்கு மனம் ... ஏங்கி கொண்டிருக்கும்போது .... தெருவோர குட்டை தண்ணீர் ... அமிர்தமாகிறது ......!!! இப்போது சொல் .... நல்லது எது கெட்டது எது ...? உங்கள் தேவைக்கு அதிகமாக .... கிடைக்கும்போது தான் நீங்கள் .... நல்லது கெட்டது என்று .... பாகுபடுத்துகிறீர்கள் ....!!! தேவைக்கு குறைவாக இருக்கும் ... காலத்தில் எதுவுமே கெட்டதில்லை... உண்மை  மறுபக்கத்தை சொன்னது ...!!!

அதிசயக்குழந்தை - முதுமை

அதிசயக்குழந்தை - முதுமை ---------- பக்கத்து வீட்டில் தாத்தா .... பேரனை திட்டியபடி இருந்தார் .... தனது அனுபவத்தையெல்லாம் .... அறிவுரையாக கொட்டி கொண்டிருந்தார் ..... பேரனோ காதில் விழுத்தாமல் .... எங்கேயோ பார்த்துகொண்டிருந்தான் ... கோபமடைந்த தாத்தா அடிக்க கை .... ஓங்கினார்................................................. அப்போது அதிசய குழந்தை ....!!! தாத்தா நிறுத்துங்க...  நிறுத்துங்க .... உங்களுக்கு அறிவுரை செய்ய ... நான் பெரும் அறிவானவன் இல்லை ... என்றாலும் கூறதொடங்கினான்.....!!! முதுமையில் எல்லோரும் -தம் .... அனுபவத்தை அறிவாக நினைத்து .... அறிவுரை சொல்கிறார்கள் -தப்பு ... அனுபவம் வேறு அறிவு வேறு .....! உங்களது அனுபவம் மற்றவனுக்கு .... தேவைப்படாது ,பொருத்தமற்றது .... முதுமையில் அதை நீங்கள் பிறர் .... மீது திணிக்கிறீர்கள் தப்பு தாத்தா ...!!! வயது கூடியவர்கள் அறிவாளிகள் .... வயது குறைந்தவர்கள் அறிவற்றவர்கள் .... நாங்களே அனுபவசாலிகள் ... உங்களுக்கு அனுபவம் போதாது .... என்றெல்லாம் முதியோர் நினைப்பது .... தப்பு தாத்தா தப்பு .....!!! முதுமையின் ஒத்தகருத்...

அதிசயக்குழந்தை -வறுமை

அதிசயக்குழந்தை -வறுமை  ******* வீதியில்  நின்ற வறிய வயோதிபர்.... வீதியில் வந்த பணக்காரனை ....  உதவி கேட்டார் - அவர் பணம் .... கொடுக்கவில்லை - கோபமடைந்த ... வயோதிபர் வாய்க்கு வந்தபடி .... திட்டினார் ....!!! இதை  அவதானித்த அதிசய குழந்தை ..... வயோதிபரிடம் என்ன தாத்தா ... என்று ஆரம்பித்ததும் .... அவர் மேலும் திட்டினார் .........!!! பணம்  படைத்தவர்கள் தீயவர்கள் ..... கயவர்கள் கள்வர் இரக்கம்... அற்றவர்கள் நயவஞ்சகர்கள் .... திட்டிக்கொண்டே போனார் .... நிலை குலைந்த தாத்தாவுடன் .... பேசி பயனில்லை என்றறிந்த .... அதிசயக்குழந்தை விலகியது .....!!! என்ன குழந்தாய் அதிகம் ... ஜோசிக்கிறாய் என்று கேட்டேன்....? ஆசானே ..... வறுமை என்பது ஒரு நோய் ..... நோய்க்கு நாம் மருந்தெடுத்து .... மாற்றுகிறோமோ அதுபோல் ... வறுமையையும் நாம் மாற்றலாம் .... வறுமையோடு வாழ்பவன் நோயோடு .... இறந்து விடக்கூடாது என்கிறேன் ....!!! வறுமைக்கு காரணம் பணம் .... படைத்தவர்கள் மோசமானவர்கள் ... என்ற மன விரக்தியும் தாமும் .... பணம் படித்தால் அவ்வாறே மாறி .... விடுவோம் என்ற மனப்பயமுமே .... ஒருவன் மீது வறுமை தொடரகா...

அதிசயக்குழந்தை - எண்ணம்

அதிசயக்குழந்தை - எண்ணம் ------------ எண்ணும் எழுத்தும் .... கண்ணெனத்தகும் ....!!! அதிசய குழந்தை  வாய்க்குள் உச்சரித்து ... கொண்டிருந்தான் ...!!! என்னடா  புது பழமொழியோ ...? இல்லை ஆசானே .... எதுவுமே புதியது இல்லை .... எல்லாமே முன்னோர் சொன்ன .... பொதுமை மொழிகள் .... அதிலிருந்தே இனிமேல் ... எல்லோரும் எடுக்க வேண்டும் .... இது எனது இது நான் சொன்னது .... என்று யாரும் உரிமை .... கொண்டாடுவதில் பயனில்லை ...!!! எண்ணமே ஒருவனின் உருவம் .... எண்ணமே ஒருவனின் வாழ்க்கை.... எண்ணமே ஒருவனின்முடிவும் .... அடுத்து சொன்னான் குழந்தை ...... சொர்க்கமும் நகரமும் .... ஒருவனுடைய எண்ணமே ..... துயில் எழும்பும் போது .... நல்ல சிந்தனையுடன் எழுபவன் .... அன்று முழுதும் சொர்க்கத்தில் .... வாழ்கிறான் ......!!! நேற்றைய பகையை ... முன்னைய இழப்பை .... பொறாமையை துயில் .... எழும்போது நினைப்பவன் அன்று முழுதும் நரகத்தில் .... வாழ்கிறான் ......!!! குப்பத்தில் இருப்பவனை ... கோபுரத்துக்கும் ,கோபுரத்தில் ... இருப்பவனை குப்பத்துக்கும் .... மாற்றுவது தலையெழுத்தல்ல .... அவரவர் எண்ணமே எண்ணமே....!!! ^ அதிசயக்குழந்தை  வசனக்க...

அதிசயக்குழந்தை -எழுத்து

அதிசயக்குழந்தை -எழுத்து  ---------------- அழகான வர்ணம் பூசிய ..... ஒரு வீட்டின் வெளிப்புற .... சுவரில் அதியக்குழந்தை.... கிறுக்கி விளையாடி.... கொண்டிருந்தான்.......!!! டேய்  சுவரை அசிங்க படுத்தாதே.... என்று கொஞ்சம் கோபத்தோடு ... ஆசான் என்ற போர்வையில் .... அவனை அதட்டினேன் ....!!! சிரித்த படியே ..... சொன்னான் - ஆசானே .... நீங்கள் தானே சுவர் இருந்தால் ..... சித்திரம் வரையலாம் என்றீர்கள் .... நான் அதைதானே செய்கிறேன் ...!!! குழந்தாய் ... அந்த சுவர் என்றது .... உடம்பை குறிக்குமடா.... ஆரோக்கியம் இருந்தாலே .... சாதிக்கலாம் என்பதாகும் .....!!! ஆசானே .... உடம்பும் ஒரு கலவைதானே .... அது இருக்கட்டும் ஆசானே .... உணர்வுகளின் ஓசை மொழி .... ஓசையின் பரிமாணம் பாஷை.... பாசையின் அலங்காக வடிவம் .... எழுத்து - எழுத்தின் " கரு" கிறுக்கல் ... அதேயே செய்தேன் ஆசானே .... கிறுக்கியது தவறு இல்லை .... உங்களுக்கு புதிய சுவர் ... என்பதுதானே கவலை .... மெல்ல சிரித்தபடி நகர்ந்தான்...!!! ^ அதிசயக்குழந்தை  வசனக்கவிதை  கவிப்புயல் இனியவன் தொடர் - 08

அதிசயக்குழந்தை - வீடு

அதிசயக்குழந்தை - வீடு  ------ எப்போதுமே .... தெருகில் நிற்கிறாயே .... உனக்கு வீடே இல்லையா ...? குழந்தாய் ...? எனக்கு சிறையில் ... இருப்பது பிடிக்காது ... என்றான் சட்டென்று ...!!! வீட்டையேன் ... சிறை என்கிறாய் ...? அது பாதுகாப்பான ... இடமல்லவா ....? இருள் மழை காற்று ... மின்னல் வெயில் .... எல்லாவற்றிலும் இருந்து .... பாதுகாக்கிறதே..... அது எப்படி சிறை ....? ஆசானே .... வாழ்நாள் முழுதும் ... இருள் மழை காற்று ... மின்னல் வெயில் .... எல்லாவற்றிலும் பேராடி ... வாழும் மிருகத்துக்கு ... எங்கே வீடு ....? குழந்தாய் .... அவை இவற்றிலிருந்து .... வாழ்வதற்கான திறனில் ... படைக்கப்பட்டுள்ளன .... அவற்றுக்கு வீடு ...... தேவையில்லை ...!!! அப்போ பலவீனமாக .... படைக்கப்பட்ட மனிதனுக்கே ... வீடு தேவைப்படுகிறது .... அப்படிதானே ஆசானே ...? பலவீனமாய் படைக்கபட்ட ... மனிதனே இயற்கையை .... அழித்தும் வாழ்கிறான் .... எல்லா விடயத்திலும் ... இருந்து வெளியில் வாருங்கள் .... ஆசானே சுதந்திரமாய் .... வாழ்வோம் .....!!! ^ அதிசயக்குழந்தை  வசனக்கவிதை  கவிப்புயல் இனியவன் தொடர் - 07