இடுகைகள்

அதிசயக்குழந்தை - ஆசை

அதிசயக்குழந்தை - ஆசை ---------- உன் ஆசை என்ன என்று கேட்டேன் ... அதிசயக்குழந்தையிடம்.....? ஆசையில்லாமல் இருக்கவே ... ஆசை என்றான் ஒரே வரியில் ....!!! என்னப்பா சொல்கிறாய் ....? ஆமா ஆசானே .....!!! ஆசையே அனைத்து துன்பத்துக்கும் .... மூல காரணி ......!!! நிறைவேறாத ஆசையின் வெளிப்பாடே .... கோபம் ,,,,,,,,,,,,!!! கோபத்தின் வெளிப்பாடே .... கொடூரம் ...........!!! கோபத்தை குறையுங்கள் ..... என்பது தவறு - ஆசையை .... குறையுங்கள் என்பதே சரியானது .....!!! பெண் ஆசை .... நடத்தையை கெடுக்கும் ...... மண் ஆசை ..... நாட்டை கெடுக்கும் ...... பொன் ஆசை ...... பெண்ணையே கெடுக்கும் .......!!! ஆசையை குறைப்பது எளிதல்ல .... ஆசையை வரிசைப்படுத்துங்கள் .... அந்த வரிசையில் இயலுமையை .... பாருங்கள் நிறைவேறக்கூடிய .... அவசியமான ஆசைக்கு ஆசைப்படுங்கள் .....!!! ^ அதிசயக்குழந்தை வசனக்கவிதை கவிப்புயல் இனியவன் தொடர் - 12

எனக்குள் காதல் மழை 17

என்ன கொடுமை .... உன் உதட்டை முத்தமிட ... வாய்ப்பில்லாமல் .... கீழே விழுந்துவிட்டதே .... ஐஸ்கிறீம் .....!!! எல்லாவற்றுக்கும்.... கொடுப்பனவு இருக்கணும்.... உன்னை முத்தமிடுவதற்கு ..... ஐஸ்கிறீம் ..... கொடுத்துவைக்கவில்லை ...!!!   ^ எனக்குள் காதல் மழை 17 கவிப்புயல் இனியவன்   

எனக்குள் காதல் மழை 16

ஒரு கவிஞன் தலையில் இருந்து பாதம் வரை வர்ணித்து .... கவிதை எழுதுவான் .... உன்னை எங்கிருந்து ... ஆரம்பிப்பது ...? திகைத்து நிற்கிறேன் நீ ஒரு அதிசயப்பிறவி ....!!! ^ எனக்குள் காதல் மழை 16 கவிப்புயல் இனியவன்

ஒரு நிமிட உலகம்

மரணத்தில் ஏன் அழுகிறாய்....? ----- குழந்தை பிறந்தது .... பேர் சூட்டும் விழா .... உறவினர் வந்தனர் .... கூடி சாப்பிட்டனர் .... குதூகளித்தனர் .... கலைந்தனர் ....!!! ஆண்டு .... ஒன்று நிறைவு .... பிறந்தநாள் வைபவம் .... கேக் வெட்டினர் .... பாட்டு பாடினர் .... கூடி சாப்பிட்டனர் .... குதூகளித்தனர் .... கலைந்தனர் ....!!! திருமண அழைப்பு .... உறவுகள் குவிந்தன .... ஆசீர் வாதம் வழங்கினர் .... கூடி சாப்பிட்டனர் .... குதூகளித்தனர் .... கலைந்தனர் ....!!! மரண அறிவிப்பு .... உறவுகள் கூடினர் .... ஒப்பாரி வைத்தனர் ... ஓலமிட்டனர் .... சோகத்தில் நின்றனர் ....!!! எல்லா நிகழ்விலும் .... சிரித்த மனிதன் ... மரணத்தில் மட்டும் .... அழுவதேன் .....??? அடுத்து தனது மரணம் ... பயத்தால் அழுகின்றானா ....? இத்தனை காலமும் ... உதவிய ஓருவன் இறந்துவிட்டானே .... ஏக்கத்தால் அழுகின்றானா ....? இத்தனை காலம் அத்துணை .... இன்பத்தை தந்தவன் .... இறந்துவிட்டானே -என்ற ... வருத்தத்தால் அழுகின்றானா ....? மொத்தத்தில் மரணத்தில் அழுகை ... சுயநலத்தின் ஒன்றாய் தான் இருக்கவேண்டும் ...... பிறப்ப...

எனக்குள் காதல் மழை 15

நான் ஓடும்போது நெஞ்சை ... பொத்தி ஓடுகிறேன் .... மற்றவர்களுக்கு ...... வேண்டுமென்றால் .... சட்டை பையில் இருக்கும் .... பணம் விழாமல் இருக்க ... என்று ஜோசிக்கட்டும் ....!!! நீ அப்படி நினைத்துவிடாதே ... உனக்கு தெரியும் நெஞ்சில் ... இருப்பது நீ ....!!! ^ எனக்குள் காதல் மழை 15 கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 14

உனக்கும் எனக்கும் ... எத்தனை வேறுபாடுகள் .... அழகால் அறிவால் பணத்தால் ... ஒரே ஒரு ஒற்றுமை .... உன்னிடமும் என்னிடமும் ... காதல் கொண்ட இதயம் ... இருக்கிறது ......!!! ^ எனக்குள் காதல் மழை 14 கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 13

ஒருவரை ஒருவர் .... தெரியாமல் முட்டி .... மன்னிப்பு கேட்டு .... அதை மனதுக்குள் ... சுமந்துகொண்டு ... காதல் நினைவோடு ... வாழ்வதெல்லாம் .... சினிமாவில் தான் .... நடக்கும் ......!!! என்ன அதிசயம் .... நமக்கும் நடக்கிறதே ....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 13 கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 12

உன் கண்கள் ... தானியக்கி நானே .... தொலைக்காட்சி-நீ அசைகின்றபோதேலாம் அசைகிறேன்....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 12 கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 11

கிளியிடம் கொத்தும் பயிற்சி .... எடுக்கப்போகிறேன் ... உன்னை எப்படி ... கொத்திக்கொண்டு ... செல்லலாம் ...? என்பதை அறிந்து கொள்ள....? ^ எனக்குள் காதல் மழை தூறல் 11 கவிப்புயல் இனியவன்

நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 03

காதலை ... உதட்டளவில் சொல்லி ... இதயத்தை காயப்படுத்தும் .... காதலில் விழுந்து விட்டேன் ...!!! இன்னும் ... காதல் சிறையில் நான் ... இன்றே அவளும் ... மாற வேண்டும் ..... அன்றேல் என் இதயம் ... மாறவேண்டும் .... அவள் நினைவுகள் ... முள்ளாய் குத்தினாலும் ... சுகமாய் தான் இருகிறது ...!!! ^ நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 03 கே இனியவன்

நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 02

காதலை .... வழியை நானே .... வலியத்தேடி.... காதலோடு வாழ்ந்தேன் .... காதல் வலியை .... தந்தது ....!!! வலியோடு ... வாழ்ந்தாலும் ... காதலோடு வாழ்கிறேன் ... நினைவுகள் கள்ளி முள்ளாய் குத்தினாலும் .... காதல் இனித்து கொண்டே .... எப்போது இருகிறது ....!!! ^ நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 02 கே இனியவன்

நெஞ்சுக்குள் கள்ளிச்செடி

நினைவுகள் எல்லாம் .... இனிமையில்லை ....! அழகான ரோஜாக்கு கீழ் ... ஆபத்தான முள் ....! முள்ளை கவனிப்பாய் .... யாருமில்லை ரோஜா .... அழகாக இருப்பதால் .....! நெஞ்சுக்குள் ..... கள்ளிச்செடியை வைத்து .... முகத்தில் ரோஜாவுடன் ..... வாழும் காதலர்களே .... அதிகமாக இருக்கிறார்கள் ....!!! ^ நெஞ்சுக்குள் கள்ளிச்செடி கே இனியவன் 

கடல் வழிக்கால்வாய் 05

-------------------------------- கடல் வழிக்கால்வாய் -------------------------------- .........என்னை உணர்பவன் செல்வந்தன்  ....... ^^^^^^^^^^^^^^^^^ நான் உங்கள் நீர் .... பேசுகிறேன் ..... உலகின் தோற்றமும் .... உலக முடிவும் .... நானாக இருக்கிறேன் ....!!! என் உடன் பிறப்புகளே ... நிலம் காற்று நெருப்பு ஆகாயம் ..... என் குழந்தைகளே .... நதி, அருவி,குளம் ,குட்டை ... கிணறு ,ஓடை ,பள்ளம் ....!!! நான் மகிழ்ச்சியாய் இருந்தால் ... பருவ மழை .... கோபமாய் இருந்தால் .... சூறாவளி..... வெறுப்படைந்தால் ... சுனாமி ...................!!! என் சகோதரி நிலம் போல் .... நானும் ஒரு தனி உலகம் .... அவள் மனிதன் ,மிருகம் ... மரங்கள் .பறவை .ஊர்வன ... என்பவற்றை படைத்து ... காக்கிறாள் - நானும் ... நீருலகத்தை படைத்து .... காக்கிறேன் .....................!!! என்னை பற்றி .... கொஞ்சம் சொல்கிறேன் ... அருவிதான் என் கூந்தல் ... ஊற்றுதான் என் ஆத்மா .... நதி என் வாழ்க்கை நெறி .... கடல் என் கருப்பை ..... நீராவி தற்காலிக மரணம் ....!!! நீர் பறவைகளுக்கு - நான் விளையாட்டு மைதானம் .... ...

உன்னைவிட்டால் எதுவுமில்லை 05

நீங்கள் ... எதையும் ... தானம் செய்யுங்கள் .... இன்னொரு உயிர் வாழ ... வழிவகுக்கும் ....!!! காதலை தானம் ... செய்யாதீர்கள் .... உங்களையும் கொல்லும்... மற்ற உயிரையும் கொள்ளும் ...!!! ^ காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை இது காதலர் கவிதை அல்ல காதல் கவிதை 05 ^ கவிநாட்டியரசர் கே இனியவன்

எனக்குள் காதல் மழை 10

நீ யார் ...? எதை பார்த்தாலும் .... எதை நினைத்தாலும் .... எதை பேசினாலும் .... நீயாக இருக்கும் நீ யார் ...? கோயிலில் கும்பிட்டால் ... விக்கிரகமாக நீ நீ என் கடவுளா ...? மாஜக்காறியா ....? ^ எனக்குள் காதல் மழை தூறல் 10