நண்பா கடந்த காலத்தை

நண்பா கடந்த காலத்தை
-----------------------------------------
வாடா
நண்பா கடந்த காலத்தை
நகைச்சுவையுடன் பேசுவோம் ...!!!

சின்ன வயதில் சிறு பொந்தில்
கிளிதேடி கட்டெறும்பிடம்
கடிவாங்கியத்தை
போசுவோம் வாடா ...!!!

கள்ள மாங்காய் பிடுங்க
போய் -தோட்டக்காரன்
வந்தவுடன் தலைதெறிக்க
நான் ஓட -மரத்தில் நின்று
அழுததை....
பேசுவோம் வாடா ...!!!

கிட்டி புள் விளையாடுகையில்
பாட்டியின் தலையில் பட
திட்டிய வார்த்தைகளை
இன்று பேசிப்பார்ப்போம்
வாடா நண்பா வாடா ....!!!

ஓடி விளையாடுகையில்
உன் காற்சட்டை உன்னை
அறியாது கழண்டுவிழ
வெட்கத்தோடு காற்சட்டையை
விட்டு கண்ணை பொத்தினாயே
வாடா நண்பா நகைசுவையாக
பேசுவோம் வாடா ....!!!

&
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05

உபகிரகங்கள்