கனவாய் கலைந்த காதல் 09

பூவழகன் வகுப்பறையில் ....
அவன்தான் வகுப்பு தலைவன் .....
பூவழகி வகுப்பறையில் ....
அவள் தான் வகுப்பு தலைவி ....
வகுப்பறை போட்டிகள் ....
வழமைபோல் இவர்களுக்கும் ...
அடிக்கடி சண்டை ஏற்படும் ....!!!

காலாண்டு பரீட்சை வந்தது .....
ஒவ்வொருவரும் தமது ஹீரோ ...
தன்மையை காட்டவேண்டும் ....
பரீட்சை புள்ளியே இதன் கருவி ....
பதட்டத்தோடு மண்டபத்தில் ....
பூவழகன் இருந்தான்......
ஏதோ உதவி கேட்பதுபோல் ....
அருகில் வந்தாள் பூவழகி .....!!!

நிச்சயம் பூவழகா நீதான் ....
முதல் மாணவனாய் வருவாய் ....
அங்கும் இங்கும் பார்த்துவிட்டு ...
யாரும் பார்க்காத போது மெல்ல ...
கையில் கிள்ளிவிட்டு போனாள் ....!
அந்த உற்சாகம்சொன்னதுபோல் ....
பூவழகன் முதல் மாணவனானான் ....
பூவழகி அவள் வகுப்பில் முதல் நிலை ....!!!

தவணை விடுமுறை நாள் வந்தது .....
அன்று பூவழகன் எதிர் பாராத ஒரு ....
நிகழ்வு நடந்தது ......
பூவழகன் சகவகுப்பு நெருங்கிய ....
நண்பன் " வினோத் " பூவழகா ....
எனக்கு ஒரு உதவி செய்யணும் ....
உன்னால் மட்டும்தான் இது ....
முடியும் என்று கூறிய படி ....
மௌனமானான் பூவழகனின்....
பதிலுக்காய் .......??????????

^^^
தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்த காதல்  09
வசனக்கவிதை....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என்னவளே என் கவிதை 31-40

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05