இடுகைகள்

காதல் தோல்வி கவிதைகள் 05

என் கவிதையை .... பார்ப்பவர்கள் எல்லோரும் ... உனக்கு காதல் தோல்வியா .... என்கிறார்கள் ....? இந்த கேள்விக்கு மட்டும் .... நீ பதில் சொல் .....!!! என்னை பிடிக்கவில்லை ... சொல்லியிருந்தால் .... விலகியிருப்பேன் .... பிடித்திருக்கு என்றால் .... காதலித்திருப்பேன் ..... மௌனமாய் இருந்து ... நடுரோட்டில் விட்டுவிட்டாயே ....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

காதல் தோல்வி கவிதைகள் 04

மூச்சை நிறுத்தினால்....  மட்டுமே மரணம் இல்லை...  நீ பேச்சை நிறுத்தினாலும்...  மரணம் தான்......!  ஒரு  மரதில் ஆயிரம்...  பூக்கள் மலரும்....  மரத்துக்கு வலியில்லை...  காம்பின் வலியை...  உணர்வார் யாருமில்லை...  உன்னை இழந்த வலி...  உனக்கே புரியவில்லை...!  இதயத்தில்...  இருந்து வெளியேறிய நீ  இதயத்தை நிறுத்திவிட்டு...  போயிருக்கலாம்....!  ^ காதல் தோல்வி கவிதைகள்  ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன்  மறந்தால் மரினித்து விடுவேன்  ------------ கவிப்புயல் இனியவன்

காதல் தோல்வி கவிதைகள் 03

தனிமையில் ... இருக்கும் போது கூட .... உன்னோடு தான் ... பேசிக்கொண்டிருப்பேன் ...!!! இதுவரை இன்பத்தில் ... இருந்த இதயம் ... இப்போ துன்பத்துக்கு ... பயிற்சி எடுக்கிறது ....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன் 

காதல் தோல்வி கவிதைகள் 02

ஜோடியாக நடந்து .... திரிந்த செருப்பில் ஒன்று .... அறுந்துவிட்டால் .... மற்ற செருப்பு நிலை....? என்னை பிரிந்த நீயும் சந்தோசமாய் இல்லை ... உன்னை பிரிந்த நானும் .... சந்தோசமாய் இல்லை ...!!! இருட்டறைக்குள் ... ஒரு சின்ன வெளிச்சம் .... பெரும் வெளிச்சம் .... உன் சின்ன திருப்பம் ... பெரு வெளிச்சமாகும் .....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

காதல் தோல்வி கவிதைகள்

உன்னை மறப்பதும் .... இறப்பதும் ஒன்றே ...!!! தோப்பில் இருந்த ... மரங்கள் வெட்டப்பட்டு ... தனிமரம் நிற்பதுபோல் .... உன்னை இழந்து தனியே .... நிற்கிறேன் .....!!! காதலில் தோற்ற .... ஒவ்வொரு இதயம்  தீயில் கருகிய இதயம் ... மீண்டும் துடிக்க விரும்பாது .....!!! ^ காதல் தோல்வி கவிதைகள்  ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன்  மறந்தால் மரினித்து விடுவேன்  ------------ கவிப்புயல் இனியவன் 

காதல் சோகக்கவிதைகள் 05

பகலில் செயல்களால் ... காயப்படுத்துகிறாய் ..... இரவில் கனவுகளால் .... காயப்படுத்துகிறாய் ....!!! காயப்படுபவர்களுக்கு .... எத்தனையோ உதவி ... கிடைக்கும் இந்த காலத்தில் .... உன்னால் காயப்படும் .... இதயத்துக்கு என்ன உதவி .... தரப்போகிறாய் ....? & காதல் சோகக்கவிதைகள் 05 கவிப்புயல் இனியவன்

காதல் சோகக்கவிதைகள் 04

என் இதயத்தை ... ஒருமுறை எட்டிப்பார் .... உன் காதலுக்காக .... பிச்சை பாத்திரம் .... ஏந்திகொண்டிருகிறது ....!!! நீ இதயகதவை ... திறக்கும் வரை .... காத்திருப்பேன் .... ஆயுள் காலம் வரை ...............!!! & காதல் சோகக்கவிதைகள் 04 கவிப்புயல் இனியவன்

காதல் சோகக்கவிதைகள் 03

பிரிந்து வாழவே ... காதலித்த காதலர் .... நாம் ............................!!! பரவாயில்லை ... உன்னை ........ சுமக்கமுடியவில்லை ..... உன் வலிகளை.... சுமந்துகொண்டிருக்கிறேன்....!!! & காதல் சோகக்கவிதைகள் 03 கவிப்புயல் இனியவன்

காதல் சோகக்கவிதைகள் 02

நீ என்னை தூக்கியெறிந்து .... காதலை கொன்றுவிட்டாய் ... என் இதயம் ஒரு ஓரத்தில் ... அழுதுகொண்டிருகிறது ...!!! கவலை படாதே .... உன் இதயம் பத்திரமாக .... என்னுள் இருக்கிறது .... அதை அழவிடமாட்டேன்....!!! & காதல் சோகக்கவிதைகள் 02 கவிப்புயல் இனியவன்    

காதல் சோகக்கவிதைகள் 01

காதலியே .... நீ ..... விட்டு போனபின்னும் .... காதல் ...... என்னோடு இருக்கிறது ...!!! எல்லாவற்றையும்.... இழந்துவிடேன் .... என்று சொல்லமாட்டேன் .... உன் நினைவுகள் .... என்றும் இழக்கமாட்டேன் ...!!! & காதல் சோகக்கவிதைகள்  கவிப்புயல் இனியவன்

காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை 06

காதலியை காதல்..... செய்ய முன் காதலை .... காதல் செய்யுங்கள் .... காதல் என்றும் தோற்காது ....!!! காதலோடு வாழ்பவன் .... இன்பத்தோடு வாழ்கிறான் ... துன்பத்திலும் இன்பம் ... காண்பான் .... காதலியோடு வாழ்வதற்கு .... இன்ப துன்பம் உண்டு ...!!! ^ காதலே உன்னைவிட்டால் எதுவுமில்லை இது காதலர் கவிதை அல்ல காதல் கவிதை 06 ^ கவிநாட்டியரசர் கே இனியவன்

கவிதை காதலின் தூதுவன் 04

நீ பார்த்தும் பார்க்காத ... போல் என்னை கடந்து ... சென்றாலும் ....!!! உன் காதல் நிறைந்த இதயம் .... என்னிடம் வந்து ஆறுதல் .... சொல்லிவிட்டு செல்கிறது ....!!! & கவிதை காதலின் தூதுவன் காதலருக்கான சிறப்பு கவிதை கவிப்புயல் இனியவன்

கவிதை காதலின் தூதுவன் 01

ஒரு .... தலை காதலர்களே .... காதலில் தோற்றவர்களே .... கவலையே வேண்டாம் .... காதல் கவிதையை .... ரசியுங்கள் .... காதல் நிச்சயம் .... வெற்றிபெறும் .... கவிதை காதலின் தூதுவன் ....!!! & கவிதை காதலின் தூதுவன்  காதலருக்கான சிறப்பு கவிதை  கவிப்புயல் இனியவன்

கவிதை காதலின் தூதுவன் 03

தாமரை முகம் .... நிலா மேனி .... மீன் கண்கள் ... வில் புருவம் ..... அன்ன நடை .... தோகை கூந்தல் .... கொவ்வை உதடு .... வலம்புரி சங்கு .... நூல் இடை .... இத்தனை ... அழகையும் கொண்ட .... என்னவள் .... என்னை காதலித்தால் .... தேவதைகளின் .... அரசியாவாள் ....!!! & கவிதை காதலின் தூதுவன் காதலருக்கான சிறப்பு கவிதை கவிப்புயல் இனியவன்

கவிதை காதலின் தூதுவன் 02

உன்னுடன் பேச .... எத்துனை ஆசையோ .... அதே அளவுக்கு பேசாமல் .... இருக்கவும் .... ஆசைபப்டுகிறேன்...... வித்தியாசமாய் .... நினைத்துவிடாதே .... பேசினால் வார்த்தை அழகு ..... பேசாமல் விட்டால் வரிகள் அழகு ....!!! & கவிதை காதலின் தூதுவன் காதலருக்கான சிறப்பு கவிதை கவிப்புயல் இனியவன்