க ண்ணில் காந்த சக்தியுடன் .... க டமையை மூச்சாய் கொண்டு.... க திரவன் முக மலர்வுடன் ஆசியுடன் ... க ண்ணியத்துடன் பணிகளை தொடர்வோம் ....!!! க ட்டளை செய்துவிட்டு நீ மட்டும் .... க டப்பாட்டில் இருந்து விலக்கிவிடாதே ..... க ண்டதே காட்சி கொண்டதே கோலமாகிவிடதே .... க ண்ணால் கண்டதும் கேட்டதும் பொய் .....!!! க ரும்புபோல் பேச்சில் இனிமையும் ....... க திரவன் போல் மனதில் ஒளிமையும் ......... க ற்பூரம் போல்சிந்தனையில் விரைவும் ....... க ல்வியும் உடையவனே மாமனிதன் .......!!! க ம்பீரம் என்பது உடல் அல்ல ,செயல் ..... க ண்ணியம் என்பது பேச்சல்ல ,நடத்தை .... க ருணை என்பது உதவியல்ல ,அன்பு ...... க டவுள் இருப்பது வெளியே இல்லை ,உள்ளே ......!!! ---- கா ற்றை போல் பலமாய் இரு .... கா ற்றை போல் மறைமுகமாய் இரு .... கா ற்றை அசுத்தபடுத்தாதே ..... கா ற்று போனால் பேச்சு போகிடும் ....!!! கா டு களை அழிக்காதீர் .... கா டு மிருகங்களின் வீடு ...... கா டு களை போணுவோம் ..... கா டு சமூகத்தில் பொதுச்சொத்து .......!! கா க்கை போல் ஒன்று கூடி வாழ்வோம் .... கா க்கை போல் கற்புடன் வாழ்வோம...