தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்05- 10

ஊரோடு ஒற்றுமையாய் வாழ்...
ஊன் இல்லாதோருக்கு கொடுத்துதவு.....
ஊனம் என்பது உடலில் இல்லை .....
ஊத்தை கொண்ட உள்ளம் இருப்பதே ....
ஊர்போற்ற வாழ்ந்து காட்டு ....!!!

ஊரூராய் நல்லவை செயப்பழக்கு.....
ஊட்டி வளர்த்த உறவுகளை மறவாதே .....
ஊதாரியாய் செலவு செய்யாதே .....
ஊர்வனவற்றை சித்திரைவதை செய்யாதே ....
ஊகத்தில் பேசிப்பழகாதே ......!!!

ஊக்கத்துக்கு எப்போது ஊக்கம் கொடு ....
ஊதியத்தை இயன்றவரை பெற்றுவிடு ....
ஊழியம் செய்வதை உயர்வாய் நினை ....
ஊழி அழியும்வரை உயர்வாய் வாழ்வாய் ....
ஊர்ச்சிதம் ஆகும் உன் பிறப்பின் உன்னதம் ....!!!

ஊர் கண் விழிக்கமுன் துயில் எழு ....
ஊற்றுபோல் பெருக்கிவிடு அறிவை .....
ஊர் உலகம் தேடிவரும் உன்னடியில் ....
ஊன்றிவிடு உன் உழைப்பை உலகத்துக்கு ....
ஊன்று கோளாய் இரு இளையோருக்கு ....!!!
----
எழுந்திரு மனிதா ....
எழுச்சி மிகு வெற்றி காத்திருக்கிறது ....
என்றும் இனிமையாய் வாழ்வதற்கு .....
எழுந்திரு அதிகாலை - விரைந்திடு ....
எட்டு திசையும் பரப்பிடு பணியை ....!!!

எவன் பிறருக்காய் வாழ்கிறானோ .....
எவன் பிறர் துன்பம் துடைகிறானோ.....
எவனல்ல அவன் - இறைவன் .....!
எல்லோர் இதயத்திலும் இருக்கும் 
எல்லையற்றவன் அவன் ....!!!

எங்கே செல்கிறோம் சரியாக தீர்மானி ....
எப்போது செல்கிறோம் உறுதியாக முடிவெடு ...
எதற்கு செல்கிறோம் நிதானமாக இருந்திடு ....
எந்த தடைவரினும் அனைத்தையும் உடைத்தெறி .....
எல்லாம் சிறப்பாக நிச்சயம் அமைந்திடும் ....!!!

எதிரியென்று ஒருவனை நினைத்துவிடாதே ....
எடுப்பார் கைபிள்ளைபோல் வாழ்ந்துவிடாதே .....
எல்லாம் எனக்கே என்று ஆசைபடாதே .....
எடுத்த காரியத்தை இடையில் நிறுத்தி விடாதே .....
எல்லாம் வல்ல இறைவன் இருப்பதை மறந்துவிடாதே .......!!!

-----

ஏன் என்று கேள்வி கேள் ....
ஏளனமாக இருந்துவிடாதே ....
ஏராளமான பிரச்சனைக்கு காரணம் ....
ஏன் நமக்கு இந்த வில்லங்கம் என்று ....
ஏளனமாக இருந்தமையே .....!!!

ஏகாதிபத்தியம் பல தோன்றியதால் ....
ஏழைகளின் வாழ்க்கை இறங்கிசெல்ல....
ஏற்றமானவர் வாழ்கை ஏறிசெல்கிறது ....
ஏற்றத்தாழ்வை தோற்றுவித்தது ...
ஏகாதிபத்திய பொருளாதாரம் ......!!!

ஏணிபோல் படிப்படியாக வாழ்கையில் ....
ஏறிசென்று வாழ்க்கை உச்சத்தையடை.....
ஏகலைவன் போல் குருபக்தி கொண்டிரு ....
ஏகன் அடியே போற்றியேன்று சரணடை ...
ஏழேழு ஜென்மத்துக்கு இன்பமடைவாய் .....!!!

ஏர் பூட்டிய விவசாயியே ஏகன் ....
ஏடு தொடக்கிய ஆசானும்  ஏகன் .....
ஏமாற்றுபவனை காட்டிலும் ....
ஏமாறுபவனே புத்தி அற்றவன் .....
ஏமாறாதே அத்துடன் ஏமாற்றாதே .....!!!

-----
ஐம் பொறியை அடக்கி ....
ஐயங்களை தெளிவுபடுத்தி ....
ஐம்பூதத்தை வசப்படுத்தி .....
ஐந்து வகை நிலத்தை ஆழும் ...
ஐயன்- நீ - விழிப்போடு வாழ் மனிதா ....!!!

ஐயங்களை தூக்கி எறிந்து விடு ....
ஐக்கியத்தோடு வாழ்ந்து பழகு ....
ஐயக்காட்சிக்கு இடமளிக்காதே .....
ஐயமின்றிஇனிமையாய் பேசிப்பழகு .....
ஐயங்கரன் என்றும் துணையிருப்பான் ......!!!

ஐசுவரியத்தை  நேர்மையாய் உழை ....
ஐக்கிய உணர்வோடு எப்போது வாழ் .....
ஐயிரண்டு கைவிரலால் கடினமாய் போராடு ....
ஐயிரண்டு கால்விரலால் இலக்கில் பயணம் செய் .....
ஐம்முகன் ஆசி என்று உனக்கு இருக்கும் ....!!!

ஐயா என்று பணிபோடு முதியோரை அழை ....
ஐயர் (தேவர் ) ஆசீர்வாதம் உனக்கு வரும் ....!
ஐம்புல அறிவோடு அகிலத்தை நேசி .....
ஐவாய் (சிங்கம் ) போல் அரசனாய் வாழ்வாய் ...!
ஐயனே என் அன்பனே என்றும் இன்பமாய் இரு ...!!!

-----

ஒளி கொண்ட இதயங்களே .....
ஒன்றுபட்டு வாழ்வோம் வாருங்கள் ....
ஒற்றுமைதான் உலகத்தின் தேவை ....
ஒன்றே குலம் ஒருவனே தேவன் ......!!!

ஒடுக்கு முறைகள் நிலைப்பதில்லை .....
ஒன்று கூடியே துடைத்தெறிந்தோம் .....
ஒற்றர் கூட்டம் ஒற்றுமையை கெடுக்கும் ....
ஒரு அணியில் வாழ்வோம் வாரீர் .....!!!

ஒழுக்கமாக வாழ்ந்தால் உலகை .....
ஒரு குடையின் கீழ் கொண்டு வரலாம் .....
ஒற்றுமையின்றியும் ஒழுகமின்றியும் வாழ்ந்தால் ....
ஒற்றர்களின் நோக்கமே நிறைவேறும் .....!!!

ஒளிவட்டம் போல் இதயத்தை மாற்று .....
ஒளிவு மறைவின்றி பேசிப்பழகு .....
ஒளி கொண்ட அறிவை பெருக்கிடு .....
ஒடுக்கு முறைக்கு ஒடுக்கு முறைசெய்....!!!

----
ஓகோ என்று வாழ ஆசைப்படாதே .....
ஓர்மம் மட்டும்கொண்டும் வாழ்ந்திடாதே ....
ஓடம்போல் தத்தளிக்கும் முடிவெடுக்காதே .....
ஓடு ஓடு இலக்கு அடையும் வரை ஓடு .....!!!

ஓட்டுக்காக அரசியல் நடத்தாதீர் .....
ஓரங்கட்டி மக்களை ஒத்துக்காதீர் ....
ஓரம்போய் மக்களை விற்காதீர் .....
ஓலமிட்டு மக்களை மயக்காதீர் .....!!!

ஓவியம் போல் மனதை அழகாக்கு....
ஓசையின் சொற்களை இனிமையாக்கு ....
ஓலை போல் விழுந்தாலும் பயன் கொடு .....
ஓய்வெறாலும் அளவோடு பயன்படுத்து .......!!!

ஓர் அறிவு தாவரம் முதல் அன்பு செய் ....
ஓராயிரம் உதவிசெய். பெருமைகொள்ளாதே....
ஓதல் மூலம் உலகை விழிப்படைய செய் ...
ஓரினமே உண்டு அதுவே மனித இனம் ....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என்னவளே என் கவிதை 31-40

கவிப்புயல் காதல் சோக கவிதை 11-20

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10