இடுகைகள்

என்னவனே என் கள்வனே 09

என் ...................... இதய ஊஞ்சலை...... ஆடவைத்துவிட்டு அதில்.... ஏறமாட்டேன் என்று  ஏன் ...... அடம்பிடிகிறாய்........? எத்தனை காலம் தான்..... வெறும் ஊஞ்சலாடும்.....? சுற்றும் பம்பரத்துக்கு கூட..... ஓய்வுண்டு என் இதயத்தை...... பம்பரமாய் சுற்றிவிட்டு....... பார்த்து கொண்டே இருகிறாய்........!!! ^^^ என்னவனே என் கள்வனே 09 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே 08

ஆகாய எரிகல்...... கண்ணில் விழுந்தால்..... அடுத்த நாள் அதே நேரம்.... வரைக்கும் கண்ணில்..... இருந்து வலிதருமாம்.....!!! ஆகாய எரிகல்லாய்..... வந்துவிடு என்னவனே...... அப்போதாவது கண்ணுக்குள்..... இருந்துகொண்டிருப்பாயே.....!!! பாறையில் இருந்து கூழாங்கல்..... உடைப்பதுபோல் உன் கல் நெஞ்சு..... இதயத்தை உடைக்கிறேன்......!!! ^^^ என்னவனே என் கள்வனே 08 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

தோல்வியை ரசி வெற்றியை ருசி

முயற்சி மனிதனின்..... மூலவேர் -அதை....... விருட்ஷமாக்குவது........ பயிற்சி.......................!!! பயிற்சி போதாதெனின்...... தோல்வியென்னும்............ கிளை தோன்றும்.................. முயற்சி  தோற்பதில்லை.......!!! வெற்றியின் போது........ ஓரக்கண்ணில் வருவது........ ஆனந்த கண்ணீரல்ல.......... தோல்வி தந்த வெள்ளை நிற....... இரத்தம்...................!!! & தோல்வியை ரசி வெற்றியை ருசி கவிப்புயல் இனியவன்

ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 02

நட்புக்கு வசந்த காலம்...... மழைக்காலம் தானே...... வேண்டுமென்றே நனைவதும்...... சேற்றுக்குள் உருளுவதும்...... வீட்டுக்கு வந்து அடிவாங்குவதும்..... மழைகாலம் வசந்த காலந்தானே.....!!! வடிந்தோடும் வெள்ளதில்....... பாய்ந்தோடும் காகித கப்பல்...... அப்போதுதான் படித்த குறிப்பு...... சற்றும் தாமதிக்காமல்....... கிழித்து விடும் காகித கப்பல்....... அடுத்த நாள் இருவருக்கும்..... கிழிந்த கால்சட்டைமேல்..... விழும் செமபூசை..........................!!! வாற்பேத்தையை மீன் குஞ்சென..... ஓடியோடி பிடித்து வீட்டுக்கு..... கொண்டுவருவதும் வந்த கையோடு...... அம்மா பறித்தெறிவதும்.......... கடுப்போடு கத்தி பிரழுவதும்...... இன்றுவரை நினைவில் இருக்கும்.... வசந்த காலம்...............................!!! & ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 02 கவிப்புயல் இனியவன்

ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு

படம்
ஆறுவயதில் அயல் வீட்டில் - நீ பாதிவயிறு உன் வீட்டில் நிரம்பும்.... பாதி வயிறு என் வீட்டில் நிரம்பும்...... பாதி தூக்கம் உன் வீட்டில் - நான் மீதி தூக்கம் என் வீட்டில் - நீ .........!!! அப்பப்போ சண்டை....... தடியெடுத்து அடிகும் மனதைரியம்..... எனக்கும் இல்லை உனக்கும் இல்லை..... ஒரு பிடி மண்ணால் சண்டையோடும்.... மாவீரர் நாம்...........................!!! சற்று நேரம் கூட ஆகாது......... வீட்டில் கிடைத்த இனிப்போடு....... ஓடிவருவேன் உன் வீட்டுக்கு.......... பாதி கடித்த இனிப்பை....... உன்னிடம் தர பறந்து போகும்..... சண்டையின் பகை...................... நட்பென்பது எப்போதும் இனிமை.....!!! & ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே 07

உன் வரவுக்காக ஏங்கி..... கண் வழியே பாதை...... அமைத்து  தெருவையே....... அமைத்து விட்டேன்.........!!! நீயோ...... வருவதாய் இல்லை......... என் தூரபார்வையில்..... கோளாறு வந்தால் - நீ தான் அதற்கு காரணம்.... வைத்தியரிடம் முறையிடுவேன்....!!! ^^^ என்னவனே என் கள்வனே 07 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே 06

எத்தனை காலம்..... உன் நினைவுகளை..... சுமந்து கொண்டு வாழ்வது,.....? அதற்குஎல்லை இல்லையா...? வருகிறாய் பார்கிறாய்...... பேச துடிக்கிறாய்...... போசாமல் போய் விடுகிறாய்..... மது கோப்பைக்குள்........ விழுந்த புழுவாய் துடிகிறேன்.... என்னவனே என் மன்னவனே.....!!! ^^^ என்னவனே என் கள்வனே 06 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே 05

என் ....... குயில் குரலால்..... உன்னை அழைத்து...... கழுகு கண்ணால் ..... உன்னை கொன்று..... துடிக்க விடனும் என்று .... மனம் ஆசைபடுகிறது......!!! பாவம் - நீ நடைபிணமாய் ........... வாழ்ந்துவிடுவாய்...... என்பதற்காக உன்னை.... விட்டு விடுகிறேன்........ என்னவனே...........................!!! ^^^ என்னவனே என் கள்வனே 05 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே 04

உன் முகம் பார்க்க..... ஏங்கி ஏங்கி ஓரகண்ணால்... கண்ணீர் வர வழைத்தவனே..... உனக்கு அது சிறு துளி..... எனக்கு அது இதயத்தின்..... மொத்த வலி...................!!! வேறு வழியில்லாமல்..... இமைகளை மூடுகிறேன்....... என் ஏக்கத்தை புரிந்து..... கனவிலேனும் வருவாயா...? ^^^ என்னவனே என் கள்வனே 04 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன் 

என்னவனே என் கள்வனே 03

மழை பெய்யும் போது..... இரு கரத்தை குவித்து...... உள்ளங்கையில் மழை..... துளியை ஏந்தும்போது.... இதயத்தில் ஒரு இன்பம்.... தோன்றுமே அதேபோல்..... உன்னை யாரென்று..... தெரியாமல் இருந்த நொடியில்..... நீ என்னை திடீரென பார்த்த..... கணப்பொழுது........!!! என்னவனே என்னை..... புதைத்துவிட்டேன் உன்னில்....!!! ^^^ என்னவனே என் கள்வனே 03 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே 02

இலைகள் அற்ற மரகிளையில்....... ஒரு வண்ணாத்தி பூச்சியை..... கற்பனை செய்து பார்...... எத்தனை அழகோ அழகு..... அப்படிதானடா - நீ வெறுமை கொண்ட என்..... இதயத்தில் வந்தமர்ந்து...... என்னை பரவசப்படுத்துகிறாய்......!!! ^^^ என்னவனே என் கள்வனே 02 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே 01

என்னை சுற்றி ஈசல் பறக்கிறது......... மெல்லியதாய்மின்னல்...... சின்னதாய் ஒரு இடி...... மழை வரப்போகிறது....... என்னவனே உன்னில்..... இருந்து காதல் மழை..... பொழியப்போகிறது....... வனாந்தரமாய் இருந்த..... இதயத்தை சோலையாக்க..... வந்துவிடடா..............!!! ^^^ என்னவனே என் கள்வனே 01 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

வலிக்கும் இதயத்தின் கவிதை 183

அன்புள்ள காதலே .....!!! உன்னை வெறுக்கத்தான் ... துடிக்கிறேன் - நெருப்பின் ..... மேல் விழுந்த நெய் போல் ... கொழுந்து விட்டு எரிகிறது ... உன் நினைவுகள் ...!!! காதலிக்க முன் கற்று கொள்ளுங்கள் ... காதல் நிலையானது ... காதலி நிகழ்தகவானது ...!!! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 183

வலிக்கும் இதயத்தின் கவிதை 182

எனக்காக கவிதை எழுது.... என்று அடம் பிடிகிறாய்..... எழுதிய கவிதையில் நீ இல்லாத ஒரு கவிதையை.... சொல் பார்க்கலாம்........? போராட்டம் தான் காதல்...... எனக்கு உன்னை பார்க்காத.... பொழுதெல்லாம் போர்க்களம்.... ஆகுறது மனசு.........!!! உன்னை சந்திக்கும்..... நேரமெல்லாம் உன் அருகில் .... இருக்கவே தோன்றுகிறது...... காதலில் தவிர்ப்பும் அழகு......!!! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 182

வலிக்கும் இதயத்தின் கவிதை 181

என் ........ காதலின் வலிமை ...... உனக்கு புரியவில்லை ..... என்றோ என் காதலை ..... நினைத்து பார்ப்பாய் ...... அப்போது புரியும் என்னை ..... இழந்ததால் வலி ...........!!! உன்னை காணும் .... போது வேண்டுமென்றே..... இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன் ..... உள்ளே இதயம் நொறுங்கும் .... சத்தம் யாருக்கு புரியும் .....? & கவிப்புயல் இனியவன்  வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 181