உண்மையின் மறு பக்கம் பார்க்கிறேன் 04

இருள்தான் எனக்குப்பிடிக்கும்
+++உண்மையின் மறுபக்கம் பார்க்கிறேன் - 04

+++
வெளிச்சத்தை கண்டு ....
மயங்கி நின்றது வெளி மனசு ....!!!

சூரியன் மலரில் விழும் ...
அழகோ அழகு .....!!!
மதிய சூரிய ஒளி அழகு ....
அந்தி வானத்தில் வானவில் ...
அழகு இன்னுமொரு அழகு ....!!!

இரவு நேர சந்திர ஒளி அழகு....
விட்டு விட்டு மின்னும் விண் அழகு ...
இத்தனை அழகும் ஒளியே ...
அழகு - மயங்கியது வெளி மனசு ...!!!

உள் மனசு உரத்து சொன்னது ....
வெளி மனசே நான் சொல்வதை ...
சற்று கேள் நான் கூறுவதே ...
உண்மை நிச்சய உண்மை ....!!!

இருளே
அழகு அதற்கு நிகர் ......
உலகில் எதுவுமில்லை ....
இருளுக்கு ஏற்றத்தாழ்வு ....
தெரியாது - சமத்துவத்தை ...
இருளால் தான்சொல்லமுடியும் ....
இருளுக்குள் மனிதன் நின்றாலும் ....
மரம் நின்றாலும் ஒன்துதான் ....!!!

உலகின்
எல்லா உயிர் தோற்றமும் ....
இருளில்தான் ஆரம்மமாகும் ....
இருளில்தான் முடிகிறது ....
கருவறையும் இருட்டுதான் ....
கல்லறையும் இருட்டுத்தான் ....
விதையை சுற்றி இருக்கும் ....
ஓடு இருட்டை வழங்குவதால் ..
விதை விருட்சமாகிறது ....!!!

இருள் இருப்பதாலேயே ...
வெளிச்சம் வாழ்க்கை பெறுகிறது .....
இருள் உள்ள இடத்துக்குதான் ....
வெளிச்சத்துக்கு வேலை உண்டு ....
வாழ்க்கை பெரும் ஒன்று ...
அழகாக இருக்கும் ஆனால் ....
நிலையாக இருக்காது ....
வெளிச்சத்தின் அழகும் அதுவே ....!!!

^
^
^
உண்மையின் மறு பக்கம் பார்க்கிறேன்
பார்க்கின்றபோதேலாம் உங்களோடு ...
பகிர்ந்து கொள்வேன் ....!!!
தொடர் கவிதை 04
^
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என்னவளே என் கவிதை 31-40

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05