கவிப்புயல் காதல் சோக கவிதை 11-20

கண் சிமிட்டும் தூரத்தில் அம்மா.....
கை பிடித்தபடி அருகில் தங்கை......
குழுமியிருக்கும் ஆயிரம் உறவுகள்.....
ஆனாலும் இதயம் முழுதும் வலி.....
உன்னை தேடும் இதயத்தில் வலி ....!!!

ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்......
ஆயிரம் மின் அரட்டை நொடியில்......
ஓசை கேட்காத பல நூறு குரல்கள்......
பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்......
இருந்தும் எதையும் மனம் விரும்பவில்லை ...
உன்னிடம் வரும் ஒரு வார்த்தைக்காய் ....
உன்னையே தேடும் இதயத்தில் வலி ....!!!

அழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்.....
முடியாமல் தவிக்கிறேன் விரும்பாதா....
திருமண நிச்சயத்தை தவிக்கிறேன் உயிரே ....
யாருக்கு புரியும் என் "காதல் வலி '' ......
இதயத்தை இழந்தவர்களை தவிர ...???

+
கே இனியவன்
காதல் சோக கவிதை

----
என் 
இதயத்துக்குள் ....
உன்னை தெய்வமாக ....
பூஜிக்கிறேன் ....!!!

நீ 
என்னை கல்லறையில் .....
சடலமாக வைதிருகிறாயோ...?
அதுகூட எனக்கு ...
சந்தோசம் தான் 
அப்படியென்றாலும் ...
என் நினைவு 
உனக்கு இருகிறதே ...!!!

---
என் 
கவிதையை கிழிப்பதும் ...
இதயத்தை கிழிப்பதும் ...
ஒன்றுதான் அன்பே ....!!!

உனக்கு ....
என் கவிதைகள் ....
ரசிப்பதற்காக இருக்கும் ...
எனக்கோ ஒவ்வொரு வரியும் ....
உன்னோடு வாழ்ந்து கொண்டும் ....
உனக்காக இறந்துகொண்டும் ....
இருக்கும் வாழ்க்கை வரிகள் ....!!!

+
கே இனியவன் 
காதல் சோக கவிதை

----
நினைவுகளை ....
வியர்வையாகும் - நீ
கனவுகளை கண்ணீர் ....
ஆக்குகிறாய் ....!!!

நான் விண் சென்றபின் ....
நீ மண்ணில் வாழ்வதும் ....
நீ விண் சென்றபின் .....
நான் மண்ணில் வாழ்வதும் ...
என்றுமே நிகழ போவதில்லை ....!!!

+
கே இனியவன் 
காதல் சோக கவிதை

---

அன்று நீ சொன்ன ....
ஒரே ஒரு ....
வார்த்தைதான் ....
நான் இன்றுவரை ....
மூச்சோடு இருக்க ...
காரணம் ....!!!

இன்று 
நீ சொல்ல இருக்கும் 
ஒரே ஒரு ....
வார்த்தைதான் ....
என் மூச்சு நிற்கவும் ...
காரணம் மறந்துவிடாதே ....!!!

+
கே இனியவன் 
காதல் சோக கவிதை

---
உன் வரவுக்காய் .....
நீ வரும் தெருவில் ...
கால் வலிக்க ......
காத்திருக்கிறேன் ....
கண்டும் காணாமல் ....
போகிறாய் ....!!!

போகட்டும் விடு....
என்கிறது இதயம் ....!
கண்கள் தன்னை ....
அழுகின்றன ......
அதற்கு நம்பிக்கை ....
நம்பிக்கை ஊட்டுகிறது ....
இதயம்....! 
கலங்காதே சிந்திப்பாள் ....!!!

+
கே இனியவன் 
காதல் சோக கவிதை

---
உன்னைப்போல் ....
பிறக்கவேண்டும் ...
இதயத்தை கல்லாக ...
மாற்றி வைக்கும் ....
உன்னத பிறப்பாக ....
பிறக்கவேண்டும் ...!!!

அடிமேல் அடியடித்தால் ...
கருங்கல்லும் குழியும் ....
நீ என்ன விதிவிலக்கா ...?
நீயும் மாறுவாய் ....!!!

+
கே இனியவன் 
காதல் சோக கவிதை

----
கேட்டுக்கொண்டிருக்காதே...
வாய் திறந்து பதில் சொல் ..
காதலிக்கிறேன் என்று சொல் ...!!!

பதிலை சொல்லிவிட்டு ...
இருக்காதே - காதலித்துக்கொள் ...!!!

காதலித்துக்கொண்டு இருக்காதே ...
பிரியமாட்டேன்என்று சொல் ..!!!

பிரியமாட்டேன் என்று மட்டும் ...
சொல்லாதே ...!!!
இணைந்து வாழ்வோம்
என்று சொல் ...!!!

இணைந்து வாழ்வோம்
என்று மட்டும் ...
சொல்லாதே ..!!!
இணைந்தே மரிப்போம்
என்றும் சொல் ..!!!

----
என்னையும் கிள்ளி எறிந்தாய்

அழகாக பூத்த மரத்தில் .... 
இரக்கமற்று பூவை பறித்து ... 
காதல் சொன்னபோது .... 
சற்றே சிந்திருக்க வேண்டும் ....!!! 

இன்பத்தை தந்து 
துன்பத்தை தருவாய் .... 
என்னையும் கிள்ளி எறிவாய்...!!! 

இப்போதுதான் புரிந்தேன் ... 
நம் இன்பத்துக்காக பிறர் ... 
இன்பத்தை பறிக்ககூடாது ....

----
காலம் பிரித்து விட்டது
------------
இத்தனை இரக்கமுள்ள ... 
என்னவள் இரக்கமற்று ... 
இருக்கிறாள் -அவளில் .. 
காதலும் நிறைந்திருக்கிறது ... 
காலம் தான் பிரித்திருக்கிறது ...!!! 

காதலுக்கு 
முக்கியம் கொடுத்தால் .... 
போதாது காதலியின் ... 
காரணத்துக்கும் முக்கியம் .... 
கொடுக்கிறேன் .... 
காதலியை இழந்து விட்டேன் .... 
காதலை இழக்க மாட்டேன் ...!!!

----
நானிருதென்ன பயன்
-------------
நான் வெறும் .... 
சுவாச தொகுதிதான் .. 
நீ காற்றாக இல்லையெனின் .... 
நானிருந்தென்ன பயன் ....? 

நான் வெறும் .... 
கண் தொகுதிதான் .... 
நீ பார்வையாக இல்லையெனின் ... 
நானிருந்தென்ன பயன் .....? 

நான் வெறும் .... 
மூளை தொகுதி தான் .... 
நீ நினைவாக இல்லையெனின் ... 
நானிருந்தென்ன பயன் ....?

----
காதல் வேண்டாம்....
காதல் வேண்டாம் ....
நீ இல்லாவிட்டால் ....
காதல் வேண்டாம் ....!!!

நீ வேண்டும் நீயேவேண்டும் ...
உன்னில் காதல் இல்லையெனில் ....
நீ வேண்டாம் காதலும் வேண்டாம் ...!!!

என்னை சுற்றி இருந்த ..
இருளை நீக்கியவள் -நீ
அணையப்போகிறேன்....
அன்று அடம்பிடிக்கிறாய்...
நானோ கவிதை என்ற...
சுவரால் பாதுகாக்கிறேன்...
நீ வாயால் ஊதி..
அணைக்கப்போகிறேன்...
என்கிறாய் -நான் என்ன ...
செய்யமுடியும் ...???
-----
நீ கவலை படாதே ....
எனக்கு கவலை வாழ்கை ....
உனக்கும் சேர்த்து 
கவலைப்படுகிறேன்....
இன்பத்துக்கு மட்டுமல்ல ....
காதல் .....!!!

நம் இருவரின் காதல் ....
முகத்தால் வந்திருந்தால்....
முகத்தை சுழித்துவிட்டு ....
போயிருப்பேன் -அகத்தால்....
வந்து தொலைந்து ....
விட்டதே ....!!!

&
.............காதல் சோக கவிதை.................
..............கவி நாட்டியரசர்..................
.........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்..............

தனித்திருந்தேன் 
உன் நினைவுகளோடு ... 
விழித்திருந்தேன் ..... 
உன் கனவுகளோடு .. 
காத்திருக்கிறேன் .... 
உன் வலிகளோடு ..... 
புரிந்திருக்கிறேன் ..... 
காதல் புரியாத புதிர் .....!!!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என்னவளே என் கவிதை 31-40

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05