சுகம் தேடும் சுயம்
போதும் என்ற மனமே........?
--------
குடியிருக்க குடிசையுண்டு....
கூடிவாழ குடும்பமுண்டு......
தூங்கியெழ திண்ணையுண்டு....
அதிகாரம் செய்ய உறவுகளுண்டு....
இதற்கு மேல் என்னவேண்டும் ...?
பாசத்தை காட்ட பெற்றோர்....
வேசத்தை காட்ட பதவி ....
மோகத்தை காட்ட மனைவி ....
பாவத்தை போக்க கோயில்....
இதற்கு மேல் என்னவேண்டும் ...?
கொள்ளிவைக்க ஆண்குழந்தை
கொஞ்சி விளையாட பெண்குழந்தை ...
தட்டிக்கேட்க உடன்பிறப்புகள் .......
கொட்டி கொடுக்க மாமன் சொத்து ....
இதற்கு மேல் என்னவேண்டும் ...?
குடித்து கும்மாலம் போட நண்பன் ....
ஊர்கதை பேச ஆலமரத்தடி......
பஞ்சாயத்து தீர்ப்பு சொல்ல தலைவர்....
பகட்டாக திரிய ஒரு வாகனம் ....
இதற்கு மேல் என்னவேண்டும் ...?
இத்தனை சிற்றின்பத்தை விரும்புபவன் .....
எப்போது புரிவான் எப்படி புரிவான் ...?
இவை சுகம் தேடும் சுயங்கள் மட்டுமென்று ....
என்றுமே வற்றாத பேரின்பத்தை ......?
&
சுகம் தேடும் சுயம்
யதார்த்த கவிதை
கவிபுயல் இனியவன்
--------
குடியிருக்க குடிசையுண்டு....
கூடிவாழ குடும்பமுண்டு......
தூங்கியெழ திண்ணையுண்டு....
அதிகாரம் செய்ய உறவுகளுண்டு....
இதற்கு மேல் என்னவேண்டும் ...?
பாசத்தை காட்ட பெற்றோர்....
வேசத்தை காட்ட பதவி ....
மோகத்தை காட்ட மனைவி ....
பாவத்தை போக்க கோயில்....
இதற்கு மேல் என்னவேண்டும் ...?
கொள்ளிவைக்க ஆண்குழந்தை
கொஞ்சி விளையாட பெண்குழந்தை ...
தட்டிக்கேட்க உடன்பிறப்புகள் .......
கொட்டி கொடுக்க மாமன் சொத்து ....
இதற்கு மேல் என்னவேண்டும் ...?
குடித்து கும்மாலம் போட நண்பன் ....
ஊர்கதை பேச ஆலமரத்தடி......
பஞ்சாயத்து தீர்ப்பு சொல்ல தலைவர்....
பகட்டாக திரிய ஒரு வாகனம் ....
இதற்கு மேல் என்னவேண்டும் ...?
இத்தனை சிற்றின்பத்தை விரும்புபவன் .....
எப்போது புரிவான் எப்படி புரிவான் ...?
இவை சுகம் தேடும் சுயங்கள் மட்டுமென்று ....
என்றுமே வற்றாத பேரின்பத்தை ......?
&
சுகம் தேடும் சுயம்
யதார்த்த கவிதை
கவிபுயல் இனியவன்
கருத்துகள்
கருத்துரையிடுக