இடுகைகள்

ஒரு நிமிட உலகம் 06

ஆறாம் அறிவு  இதுதானா ...? --- ஆறறிவை பெற்ற மனிதன் .... ஆடையால் மானத்தை காக்கிறான் .... ஆடையே போடாத மிருகத்திடம் .... ஆறறிவு மனிதனிடம் இல்லாத .... அற்புத பண்பு இருக்கிறதே -அவை ... கற்பழிப்பில் ஈடுபடுவதில்லை ....!!! மேலாடையாய் தம் தோலை .... மறைத்து மானத்தை காக்கும் .... மிருகங்களின் தோலை மனிதன் .... மேலாடையாய் போடுகிறான் .... இருந்துமென்னபயன்...? மேலான சிந்தனைகள் இல்லையே .... பகுத்தறிவு என்ற ஆறாம் அறிவை ... மனிதனுக்கு பறித்துண்ணத்தான் ... கொடுத்தானோ ....? ^^^ ஒரு நிமிட உலகம் ...............வாழ்வியல் கவிதை **ஆறாம் அறிவு இதுதானா ...? ** + கவி நாட்டியரசர் கே இனியவன் 

ஒரு நிமிட உலகம் 05

ஆடையே மனித குணம் -- விதம் விதமாய் ஆடைகள் .... வண்ண வண்ண நிறங்கள் .... காலத்துக்கேற்ற நாகரீகங்கள் .... ஆடைகள் வண்ணங்களை .... மட்டும் தோற்றுவிப்பதில்லை .... மனித எண்ணங்களையும் .... தோற்றுவிக்கும் ...... "ஆடைகள் உடலை மட்டும் " மறைப்பதில்லை -பிறர் மனதையும் மறைக்க வேண்டும் ....!!! ஆடை பாதி ஆள் பாதி ... என்றாகள் எம் முன்னோடிகள் .... அத்தனை உண்மை பார்த்தீர்களா ..? ஆடை அலங்காரம் ஒருவனின் .... எண்ணத்தை வெளிப்பதும் ... என்பதையே அப்படி சொன்னார்கள் ....!!! ஆடை ஆயுளை கூட்டவேண்டும் .... அறிவை அதிகரிக்க வேண்டும் .... அன்பை பெருக்க வேண்டும் .... கலாச்சாரத்தை வளர்க்கவேண்டும் .... ஒழுக்கத்தை பேணவேண்டும் ....!!! ^^^ ஒரு நிமிட உலகம் ...............வாழ்வியல் கவிதை **ஆடையே மனித குணம் ** + கவிப்புயல் இனியவன் 

கடல் வழிக்கால்வாய் 04

-------------------------------- கடல் வழிக்கால்வாய்  -------------------------------- .........ஒரு மரணம் மறு ஜனனம்  ....... ^^^^^^^^^^^^^^^^^ மழைத்துளி மரணமே .... பயிரின் ஜனனம் .... பயிரின் மரணமே .... வாழ்க்கை ஜனனம் ....!!! பூவின் மரணமே .... காயின் ஜனனம் .... காயின் மரணமே .... கனியின் ஜனனம் ....!!! சூரியனின் மரணமே .... சந்திரனின் ஜனனம் .... சந்திரனின் மரணமே .... பகலின் ஜனனம் ....!!! பழமையின் மரணமே .... நவீனத்தின் ஜனனம் .... நவீனத்தின் மரணமே .... உலக அழிவின் ஜனனம் ....!!! அறியாமையின் மரணமே ..... அகந்தையின் ஜனனம் ... அகந்தையின் மரணமே ..... ஞானத்தின் ஜனனம் .....!!! & கடல் வழிக்கால்வாய்  ஆன்மீக கவிதை  கவிப்புயல் இனியவன்

கடல் வழிக்கால்வாய் 03

கடல் வழிக்கால்வாய்  -------------------------------- .........சிலுவை சுமக்கும் மனிதன்....... ^^^^^^^^^^^^^^^^^ மனிதனின் எல்லா செயல்களும் .... சிலுவையாக மாறுகின்றன .... எல்லா விளைவுகளும் ஆணியாக.... அறையப்படுகின்றன....!!! குடும்பம் என்னும் உறவை .... சிலுவையாய் சுமக்கிறான் .... அன்பு என்னும் ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! கல்வி, பதவி, என்னும் .... சிலுவையை சுமக்கிறான் ..... அதிகாரம் என்னும் ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! உழைப்பு, வருமானம் எனும் ... சிலுவையாய் சுமக்கிறான் .... விரத்தி நோய் என்னும் ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! போட்டி வெற்றி என்னும் .... சிலுவையாய் சுமக்கிறான் .... பகைமை ,பொறாமை ,ஆணியால் ..... அறையப்படுகிறான்.....!!! அத்தனை சுமைகளையும் .... சுமக்கும் மனிதனுக்கு .... விடுதலை ஒன்றே விடுதலை .... ஓடும் புளியம்பழம் போல் .... வாழ்வதே விடுதலை .....!!! & கடல் வழிக்கால்வாய்  ஆன்மீக கவிதை  கவிப்புயல் இனியவன்

ஒரு நிமிட உலகம் 04

தப்புக்கணக்கு  ----- தூரத்தில் இருப்பதிலும் .... மறை பொருளாய் இருப்பதிலும் .... எப்பவுமே மனித மனத்துக்கு ..... ஒரு இச்சையுண்டு....!!! எனக்கு அது விதிவிலக்கல்ல .... நிலாமீது ஒரு காதல் .... விண்மீன்கள் மீது மோகம் .... இரண்டையும் ரசிப்பதற்கு .... கனவு விமானத்தில் ... விண் மண்டலம் சென்றேன் .....!!! நிலவருகே சென்றேன் .... வா என்று அழைகவில்லை ..... அவள் மென்மை அழகில் .... மயங்கினேன் என்னை .... மறந்து கவிதை எழுதினேன் .....!!! மெல்ல சொன்னது நிலா .... அதிகம் என்னில் காதல் .... கொள்ளாதே - எனக்கும் ... இருட்டு உண்டு என்னுள் ... இருளும் உண்டு .......!!! நிலா அருகில் துடித்து .... நடித்துகொண்டிருந்த .... விண் மீன்கள் கண்களை ... சிமிட்டி சிமிட்டி என்னை .... அழைத்துக்கொண்டிருந்தன ..... அருகில் சென்றேன் ..... தள்ளி போய்விடு என்று ... கத்தியது .....!!! திகைத்து நின்றேன் .... நீதானே என்னை கண்ணால்... சிமிட்டி சிமிட்டி வா வா ... என்றாய் இப்போ திட்டுகிறாயே ....? போடா மூடனே .... என் குணவியல்பு அதுவே .... நீ தப்பாக நினைத்தது -என்  தப்பில்லையே ...??? மனித மனம் இப்படித்தான் ... அருகில் உள்ள அழகை ரசிக...

ஒரு நிமிட உலகம் 03

பிறப்பும் இறப்பும் சமன் --- இறந்த பிணத்தை ..... இறக்கப்போகும் பிணங்கள் .... ஒன்றுகூடி ஓலமிட்டன .....!!! இறந்த பிணம் ...!!! கோபத்தில் பேசத்தொடங்கியது ...... இறக்கபோகிறவர்களே.... வாருங்கள் இறக்கபோவதற்காக....? பிறப்பு இனிமையானது .... இறப்பு கொடுமையானது .... என்ற எண்ணத்தில் ஒலமிடாதீர் .... பிறப்பு இயற்கை தந்த பரிசு .... இறப்பு இயற்கை தந்த கொடை..... புரிந்து கொண்டவனே ஞானி ....!!! எல்லா உயிரும் ஒருநொடி .... தொடக்கம் எல்லா உயிரின் .... அடக்கமும் ஒரு நொடி தான் ..... அந்த ஒருநிமிடத்தில் தான் .... உலகமே இயங்குகிறது ......!!! ^^^ ஒரு நிமிட உலகம்  ...............வாழ்வியல் கவிதை  ** பிறப்பும் இறப்பும் சமன் ** + கவிப்புயல் இனியவன்

ஒரு நிமிட உலகம் 02

காட்டு மரமும் வீட்டு மரமும் ----- வேகமாக வெட்டப்பட்டு .... வருகின்றன காட்டு மரங்கள் ... விறக்குக்காக அல்ல .... கோடரிக்கு பிடிகளாக .... கூடி போராடமுடியாத .... காட்டு மரங்கள் முடிவுக்கு .... வீட்டு மரங்களுடன் .... கலப்பு திருமணம் செய்வதற்கு ....!!! காட்டு மரங்கள் கொஞ்சம் .... வீரம் நிறைந்தவை வலிமையானவை  ... அவை வளர்க்கப்படும் வளரும் சூழலே .... கொடிய மிருகங்கள் ஊர்வன மத்தியில் ... வாழும் சூழலே அவற்றின் குணத்துக்கு ... காரணமாக இருக்குமோ ....? வீட்டு மரங்கள் மிகவும் .... மென்மையானவை வீரமும் ... வலிமையையும் குறைந்தவை .... மனிதர்கள் மத்தியில் வளர்வது .... காரணமாக இருக்குமோ ....? காட்டு மரம் வீட்டு மரத்தை .... பார்க்க வந்தது வீட்டு மரங்கள் ... பயத்தால் நடுங்கின மௌனமாகின .... நாங்கள் உங்களோடு கலப்பு ... திருமணம் செய்ய விரும்புகிறோம் ... எங்களை காப்பாற்ற வேறு வழியில்லை ....!!! வீட்டு மரங்கள் கடுமையாக .... எதிர்த்தன உங்களை மணந்தால் ... நாங்களும் இறக்க நேரிடும் ... முடியாது முடியவே முடியாது ..... காட்டு  மரம் கவலை படவில்லை .... மனிதர்கள் மத்தியில் வளரு...

ஒரு நிமிட உலகம்

கூடு திறந்தால் காடு ----- அந்த மரண வீட்டில் .... அப்படி ஒரு சனக்கூட்டம் .... ஆராவாரமான மரணவீடு .... ஓலமிடுபவர்கள் ஒப்பாரி ... சொல்பவர்கள் நிறைந்து ... காணப்பட்டனர் ..... மூன்று நாட்களாக ... கண்ணீர் விழா ....!!! சடலம் இருக்கும் பெட்டி ... அலங்காரத்தால் ஜொலிக்கிறது .... குளிரூட்ட பட்ட ஊர்தியில் ... சடலம் வைக்கப்படுகிறது .... மந்திரி வந்து அஞ்சலி செலுத்த .... வீதியெங்கும் வாகன நெரிசல் .... வீதி எங்கும் நிறுத்தி நிறுத்தி ... பறை சத்தம் காதை கிழித்தது ....!!! சடலம் போகும் பாதையில் .... விபத்தில் இறந்த எருமைமாட்டு ... சடலத்தை நாய்களும் காகங்களும் .... குதறி எடுத்தபடி இருந்தன ... இறந்தபின்னும் மற்றவைக்கு ... உதவும் அந்த எருமையின் இறப்பு ....!!! இறப்புக்கு முன்னரே .... மனிதனும் மிருகமும் .... இறந்துவிட்டால் எல்லாமே ... சடலம் தானே .....! எல்லா உயிரினத்தின் வாழ்வும் ... அடுத்த ஒரு நிமிடம் கூட .... உத்தரவாதம் இல்லை ....!!! ^^^ ஒரு நிமிட உலகம் ...............வாழ்வியல் கவிதை **கூடு திறந்தால் காடு ** + கவிப்புயல் இனியவன்

கடல் வழிக்கால்வாய் 02

-------------------------------- கடல் வழிக்கால்வாய் -------------------------------- .........இறைவனோடு ஒரு தொடர்பாடல்....... ^^^^^^^^^ என் விஞ்ஞான அறிவை .... பயன்படுத்தி இறைவனோடு ... பேசுவதற்கு  தொலைபேசியை ... கண்டு பிடித்தேன் - பலமுறை ... முயற்சித்தேன் மறுமுனையில் ... யாருமில்லை ......!!! நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒரு தொடர்பில் இருக்கிறார் ... சற்று நேரத்தின் பின் தொடர்பு ... கொள்ளவும் என்று கூட .... மறுமுனையில் இருந்து வரவில்லை .... இணைப்பு துண்டிக்கப்படவில்லை ....!!! என்ன ஆச்சரியம் .... ஒருநாள் மறுமுனையில் இறைவன் ..... யார் பேசுகிறீர்கள் என்று கேட்டேன் ... நீதான் பேசுகிறாய் என்றார் இறைவன் .... எத்தனை உண்மையான வசனம் அது ....!!! இறைவா தயவு செய்து ... இணைப்பை துண்டித்துவிடாதே.... உன்னிடம் நிறைய கேள்வி இருக்கு .... நீ துண்டிக்கும் வரையும் நான் ... துண்டிக்கபடமாட்டேன் என்றார் ... இறைவன் ......!!! எத்தனை உண்மையான வசனம் அது ....!!! உன் படைப்பில் ஏன் இத்தனை .... வேறுபாடுகள் - அறிவாளி ... அறிவிலி - உயர்ந்தவன் தாழ்ந்தவன் ... படித்தவன் படிக்காதவன் ....

கடல் வழிக்கால்வாய்

-------------------------------- கடல் வழிக்கால்வாய் -------------------------------- .........இயற்கையோடு ஓட்டபந்தையம் ....... ^^^^^^^^^^^^^^^^^ எனக்கும் இயற்கைக்கும் .... ஓட்டப்பந்தையம் ...... எல்லை கோட்டை தொடுவதில் .... கடும் போட்டி ......!!! போட்டியின் தொடக்கமே .... இயற்கை முன்னணி பெற்றது .... சற்று என்னை திரும்பி பார்த்து .... உன்னை படைத்த என்னோடு .... உனக்கு போட்டியா ...? தோல்வியை ஒப்புக்கொள் ... நான் விலகி விடுகிறேன் .....!!! நான் விடவில்லை .... என் முழு முயற்சியையும் ..... பயன்படுத்தி இயற்கையை .... சற்று முந்திக்கொண்டேன் ..... நானும் சளைத்தவனில்லை .... திரும்பி பார்த்து சொன்னேன் .... படைத்தது நீயாக இருக்கலாம் .... உனக்கு படைக்கத்தான்தெரியும் .... முயற்சிக்க தெரியாது .....!!! இன்னும் நீ ஒன்பது கோள்...! உன்னால் பெரிதாகவும் முடியல்ல .... சிறிதாகவும் முடியல்ல .வேகத்தை ... கூட நீ இன்னும் மாற்றல்ல என்றேன்... இயற்கை மௌனமானது ....!!! திடீரென எங்களின் பின்னான் .... பலத்த காற்று வீச இயற்கை .... வேகமாக முன்னேறியது -நான்...? பஞ்சல்ல -மனிதன் -காற்றோடு ....

உண்மையின் மறு பக்கம் பார்க்கிறேன் 04

இருள்தான் எனக்குப்பிடிக்கும் +++உண்மையின் மறுபக்கம் பார்க்கிறேன் - 04 +++ வெளிச்சத்தை கண்டு .... மயங்கி நின்றது வெளி மனசு ....!!! சூரியன் மலரில் விழும் ... அழகோ அழகு .....!!! மதிய சூரிய ஒளி அழகு .... அந்தி வானத்தில் வானவில் ... அழகு இன்னுமொரு அழகு ....!!! இரவு நேர சந்திர ஒளி அழகு.... விட்டு விட்டு மின்னும் விண் அழகு ... இத்தனை அழகும் ஒளியே ... அழகு - மயங்கியது வெளி மனசு ...!!! உள் மனசு உரத்து சொன்னது .... வெளி மனசே நான் சொல்வதை ... சற்று கேள் நான் கூறுவதே ... உண்மை நிச்சய உண்மை ....!!! இருளே அழகு அதற்கு நிகர் ...... உலகில் எதுவுமில்லை .... இருளுக்கு ஏற்றத்தாழ்வு .... தெரியாது - சமத்துவத்தை ... இருளால் தான்சொல்லமுடியும் .... இருளுக்குள் மனிதன் நின்றாலும் .... மரம் நின்றாலும் ஒன்துதான் ....!!! உலகின் எல்லா உயிர் தோற்றமும் .... இருளில்தான் ஆரம்மமாகும் .... இருளில்தான் முடிகிறது .... கருவறையும் இருட்டுதான் .... கல்லறையும் இருட்டுத்தான் .... விதையை சுற்றி இருக்கும் .... ஓடு இருட்டை வழங்குவதால் .. விதை விருட்சமாகிறது ....!!! இருள் இருப்பதாலேயே ... ...

உண்மையின் மறுபக்கம் பார்க்கிறேன் - 03

உண்மை அநாதையானது ....!!! .......................உண்மையின் மறுபக்கம் பார்க்கிறேன் - 03 ^^^ குற்றவாளி கூண்டில் ..... குற்றம் சாட்டப்பட்டு ஒருவன் ..... கூண்டில் நிற்கிறான் .... சட்டவாதிகள் குற்றத்தின் மேல் .... குற்றம் சாட்டி குற்றமற்றவனை ..... குற்றவாளியாக்க முயற்சித்தனர் ....!!! பார்வையாளராக இருந்த .... உண்மைக்கு கோபம் வரவே ..... சட்டென்று எழுந்து - இவை ... அனைத்தும் பொய் . எனக்கு .... எல்லா உண்மையும் தெரியும் .... என்று உரத்த குரலில் சொன்னது .....!!! அதிர்ச்சியடைந்த நீதிபதி .... மன்றத்தின் அமைதியை கெடுதீர் ... குற்றம் சுமத்தி -உண்மையை ... மன்றத்திலிருந்து வெளியேற்றினார் ....!!! உண்மை .... வேலையில்லாமல் அலைந்தது .... பட்டதாரியாகவும் இருந்தது ...... சிறு வேலையென்றாலும் கிடைக்டும்.... தோட்ட முதலாளியிடம் வேலை கேட்டது .... என்ன படிதிருகிறாய் நீ ....? பட்டதாரி என்றது -உண்மை .... உனக்கு வேலை கிடையாது போ .... எதற்கு என்று வினாவியது உண்மை ...? இங்கே  படிக்காதவர்களே வேலை செய்கிறார்கள் .... நீ அவர்களையும் கெடுத்துவிடுவாய் ...... தொழிற்சங்கம் அமைப்பாய் -போராடுவாய்.... சம்பளம் கூட்டி கேட்பாய் ...

உண்மையின் மறு பக்கம் பார்க்கிறேன் 02

அறிவின் மறு பக்கம் சிக்கலானது ....!!! உண்மையின் மறு பக்கம் பார்கிறேன்-02 ----------------- உண்மையிடம்     கேட்டேன்  ஒரு கேள்வி ...? அறிவு எது ..? ஞானம் எது ..? உண்மை சொன்னது ..... அறிவுக்கும் ஞானத்துக்கும் ... எப்போதும் முரண் தொடர்தான் ..... அறிவு வளர வளர .... அறிவை தேட தேட ..... ஞானம் காணாமல் பொய் விடும் .... அறிவு தான் அத்தனை மன .... குழப்பத்துக்கும் காரணம் .....!!! அறிவுக்குள் நீங்கள் .... மூழ்கும் போதெலாம் ஆசை .... அதிகரித்துகொண்டே போகும் .... துன்பத்தையும் கோபத்தையும் ... துயரத்தையும் பெருக்கிக்கொண்டே .... செல்லும் .....!!! அறிவை பெருக்க பெருக்க .... உலக பற்றுதல் கூடிகொண்டே .... போகும் அறிவிலிருந்து தூர .... விலகும் காலம் எப்போது .... உன்னில் ஆரம்பிக்கிறதோ .... அப்போதுதான் நீ ஞானத்தில் .... அக்கறை செலுத்துவாய் .....!!! அறிவினால் எப்போதும் நீ ... ஒன்றை பற்றிப்பிடிப்பாய் .... அந்த பற்று உன்னை கொஞ்சம் ... கொஞ்சமாய் விழுங்கிகொண்டே ... இருக்கும் மீள் முடியாவிட்டால் .... கடும் துன்பத்துக்குள் விழுந்து ... விடுகிறாய் .......!!! அறிவு நிறைந்தால் தான் .... பெருமை என்று நினைப...