ஒரு நிமிட உலகம்

கூடு திறந்தால் காடு
-----
அந்த மரண வீட்டில் ....
அப்படி ஒரு சனக்கூட்டம் ....
ஆராவாரமான மரணவீடு ....
ஓலமிடுபவர்கள் ஒப்பாரி ...
சொல்பவர்கள் நிறைந்து ...
காணப்பட்டனர் .....
மூன்று நாட்களாக ...
கண்ணீர் விழா ....!!!

சடலம் இருக்கும் பெட்டி ...
அலங்காரத்தால் ஜொலிக்கிறது ....
குளிரூட்ட பட்ட ஊர்தியில் ...
சடலம் வைக்கப்படுகிறது ....
மந்திரி வந்து அஞ்சலி செலுத்த ....
வீதியெங்கும் வாகன நெரிசல் ....
வீதி எங்கும் நிறுத்தி நிறுத்தி ...
பறை சத்தம் காதை கிழித்தது ....!!!

சடலம் போகும் பாதையில் ....
விபத்தில் இறந்த எருமைமாட்டு ...
சடலத்தை நாய்களும் காகங்களும் ....
குதறி எடுத்தபடி இருந்தன ...
இறந்தபின்னும் மற்றவைக்கு ...
உதவும் அந்த எருமையின் இறப்பு ....!!!

இறப்புக்கு முன்னரே ....
மனிதனும் மிருகமும் ....
இறந்துவிட்டால் எல்லாமே ...
சடலம் தானே .....!
எல்லா உயிரினத்தின் வாழ்வும் ...
அடுத்த ஒரு நிமிடம் கூட ....
உத்தரவாதம் இல்லை ....!!!

^^^
ஒரு நிமிட உலகம்
...............வாழ்வியல் கவிதை
**கூடு திறந்தால் காடு **
+
கவிப்புயல் இனியவன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என்னவளே என் கவிதை 31-40

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05