ஒரு நிமிட உலகம் 02
காட்டு மரமும் வீட்டு மரமும் ----- வேகமாக வெட்டப்பட்டு .... வருகின்றன காட்டு மரங்கள் ... விறக்குக்காக அல்ல .... கோடரிக்கு பிடிகளாக .... கூடி போராடமுடியாத .... காட்டு மரங்கள் முடிவுக்கு .... வீட்டு மரங்களுடன் .... கலப்பு திருமணம் செய்வதற்கு ....!!! காட்டு மரங்கள் கொஞ்சம் .... வீரம் நிறைந்தவை வலிமையானவை ... அவை வளர்க்கப்படும் வளரும் சூழலே .... கொடிய மிருகங்கள் ஊர்வன மத்தியில் ... வாழும் சூழலே அவற்றின் குணத்துக்கு ... காரணமாக இருக்குமோ ....? வீட்டு மரங்கள் மிகவும் .... மென்மையானவை வீரமும் ... வலிமையையும் குறைந்தவை .... மனிதர்கள் மத்தியில் வளர்வது .... காரணமாக இருக்குமோ ....? காட்டு மரம் வீட்டு மரத்தை .... பார்க்க வந்தது வீட்டு மரங்கள் ... பயத்தால் நடுங்கின மௌனமாகின .... நாங்கள் உங்களோடு கலப்பு ... திருமணம் செய்ய விரும்புகிறோம் ... எங்களை காப்பாற்ற வேறு வழியில்லை ....!!! வீட்டு மரங்கள் கடுமையாக .... எதிர்த்தன உங்களை மணந்தால் ... நாங்களும் இறக்க நேரிடும் ... முடியாது முடியவே முடியாது ..... காட்டு மரம் கவலை படவில்லை .... மனிதர்கள் மத்தியில் வளரு...