கிரகங்களுடைய ஆதிபத்தியம் கொண்டுள்ள ஸ்தான பலங்கள்

கிரகங்களுடைய ஆதிபத்தியம் கொண்டுள்ள ஸ்தான பலங்கள்

கிரகங்களை சுப கிரகங்கள் அசுப கிரகங்கள் என்று பிரித்திருந்தாலும் அதனுடைய ஸ்தான பலம் வைத்தே ஜாதகத்தினுடைய பலம் நிர்ணயிக்கவேண்டும். 

ஒன்று, ஐந்து மற்றும் ஒன்பதாம் ஸ்தான கிரகங்கள் எப்பொழுதும் சுப கிரகங்களாக கருதப்படவேண்டும். 

சுபாவ அசுப கிரகங்கள் ஒன்று, நான்கு மற்றும் பத்தாம் ஸ்தானங்களுக்கு அதிபதிகளாக வரும்பொழுது சுப கிரகங்களாக மாறுகின்றன. 

மூன்று, ஆறு மற்றும் பதினொன்றாம் ஸ்தான அதிபதிகள் அசுப கிரகங்களாக கருதப்படுகின்றன. 

சுபாவ சுப கிரகங்கள் நான்கு, ஏழு மற்றும் பதினொன்றாறாம் ஸ்தான அதிபதிகளாக வரும்பொழுது கேந்திராதிபத்திய தோஷத்தினால் அசுப கிரகங்களாக மாறுகின்றன. 

இரண்டு, எட்டு மற்றும் பன்னிரண்டாம் ஸ்தான அதிபதிகள் சுப தன்மையும் அசுப தன்மையும் இல்லாத சம கிரகங்களாகும். 

சூரியனும், சந்திரனும் தவிர மற்ற ஐந்து கிரகங்கள் எல்லாம் ஒவ்வொன்றும் இரண்டு ஸ்தானங்களுக்கு அதிபதிகளாகிறார்கள். 

சில ஜோதிடர்கள் எட்டாம் ஸ்தான அதிபதியை எப்பொழுதும் அசுப கிரகமாகவே கணக்கிடுகிறார்கள். ஆனாலும் ஆதாரபூர்வமான ஜோதிட நூல்கள் எட்டாம் ஸ்தான அதிபதியை அதனுடைய மற்றைய ஸ்தான ஆதிபத்தியம் வைத்தே கணக்கிடவேண்டும் என்று கூறுகிறது. 


அனுகப்பட்ட முறை : புதன் இயற்கை சுப கிரகம். சேர்க்கையால் புதன் தன்மை நிர்னயம்.


கிரகங்கள்ஆதிபத்தியம்சுபாவ நிலை
சந்திரன்10, பாவ கிரகம்
சூரியன்11, பாவ கிரகம்
புதன்9, 12, சுப கிரகம்
சுக்கிரன்1, 8, சுப கிரகம்
செவ்வாய்2, 7, சுப கிரகம்
வியாழன்3, 6, பாவ கிரகம்
சனி4, 5, சுப கிரகம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05