காதல் நினைவுகளும் காதல் டயறியும் 01-10

என்னவளின் டயறி 
---
கண்களால் காதல் தந்து ....
நினைவுகளை மனதில் சுமந்து ....
வலிகளால்  வரிகளை வடித்து ....
என்னவளின் காதல் டயறி ....
கண்டெடுத்தேன் கணப்பொழுதில் ....
என் மீதுகொண்ட கவலைகளை ....
தன் காகிதத்தில் பதிந்திருக்கிறாள்....
காகிதங்கள் கூட ஈரமாய் இருக்கிறது ....
அவைகூட அழுதிருக்கிறது ....!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம்( 01)
----
என்னவளே ....
உன்னை கண்ட நாள் முதல் ....
என் டயரியில் உன்வரிகளே....
எத்தனை அதிசயங்கள் நிகழ்ந்தாலும் ....
உன் சின்ன அசைவுகள் கூட ....
எனக்கு உலகதிசயமாய் ......
பதிந்து வைத்திருக்கிறேன் ....
டயரியை உனக்காக தொலைகிறேன் ....
எடுத்து வாசித்துக்கொள் ....!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
உன்னவன் பக்கம்( 02)

----
உயிரற்ற காகித்தத்தில் ....
உயிர் கொண்டு எழுதினேன் ....
உதயனே உயிரானவனே ......!!!
காகிதம் கூட உயிர் பெற்று ....
உன்னையே எழுத சொல்கிறது ....!!!
என் கையெழுத்தை தவிர ....
அத்தனையும் உன் நாமமே ....
கவலைகளை கண்ணீரால் ...
வரிகளாய் எழுதுகிறேன் .....!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம்( 02)

----
என் பெயரை தவிர ....
மற்றைய வரிகள் எல்லாம் ....
கண்ணீரால் அழிந்துள்ளன .....
டயறியின் மூன்றாம் பக்கம் ...!!!
என் பெயருக்கு இறுதியிலும் ....
காய்ந்த கண்ணீர்துளியின் ....
தடயங்களும் இருக்கிறது ....
காதலுக்கு முற்றுப்புள்ளியாய்....!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 03

----
உயிரானவனே ....
என்னை மன்னித்துவிடு ....
உனக்கு வலிகளை மட்டுமே ....
தந்திருக்கிறேன் - நீயோ 
உன் வலிகைளை எனக்கு ....
வலியை தராமல் வரியாக்கினாய் ....
அதையே கவிதை என்கிறாய் ....!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 04

----
ஆரம்பத்தில் காதல் கடிதம் ....
எழுதினேன் காதல் பிறந்தது ....
இறுதியில் காதல் டயறி ....
எழுதுகிறேன் -காதல் 
முடிவுக்கு வருகிறது .....!!
என்னவனே மன்னித்துகொள் ...
காதலுக்கு எல்லையில்லை ...
காதலிக்கு தடைகள் உண்டு ...
மன்னவா உனக்கு புரியும் இது ...!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 05

-----
என்னவளின் டயறியிலிருந்து ...06
----
உயிருள்ள உடல் ...
உயிரற்று கடதாசியானது ....
உயிரற்ற கடதாசி ....
உயிரானது காதல் டயறியால் .....
என்னவனே என் டயறியை...
பார்க்கும்போது உனக்கு ....
புரியும் வெறும் கடதாசியில்லை ....
என் வலிக்கும் இதயத்தின் ....
வரிகள் என்று புரிவாய் ...!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 06

-----
உன்னோடு 
இருந்த காலத்தை விட ....
என் டயறியோடு இருந்த ...
காலமே அதிகம் ....
உன்னிடம் பெற்ற இன்பத்தை ....
உன்னிடம் பெற்ற துன்பத்தை ....
கல் வெட்டாக பதிந்துள்ளேன் ....
காதல் நமக்கு பிடித்துள்ளது ...
உறவுகளுக்கு பிடிக்கவில்லையே ...!!!

+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 07

----
என்னவளின் டயறியிலிருந்து ...08
---
உன்னை கண்டபோதும் ....
உன்னை காணாதபோதும்....
வீட்டார் திட்டும்போதும் ...
நீ கோபப்படும் போதும் ....
நீ கெஞ்சும் போதும் ...
நீ கொஞ்சும்போதும் ...
ஏதோ நானும் கவிதை ...
எழுதுவதுபோல் டயறியில்...
கிறுக்குவேன் ......!!!

+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 08

--*--
என்னவளின் டயறியிலிருந்து ...09
---
உன்னை 
எப்படி காதலித்தேன் .....
வருந்துகிறேன் ...
வீட்டாரால் எப்படி ...
துன்பபடுகிறேன் ....
என்பதையெல்லாம் ....
ஒருநாள் என் காதல் ....
டயறி சொல்லும் .....
அப்போது உணர்வாய் ....
என்னவனே நான் உன்னை ...
காதலித்ததால் பட்ட துன்பம் ...!!!

+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 09

---
என்னவளின் டயறியிலிருந்து ...10
----
என்னவனே இனியவனே ....
டயறியின் அடுத்த பக்கத்தை ....
பார்க்கமுதல் -எனக்காய் ...
ஒன்று செய்வாயா ...?
உன்னை நான் பிரியும் காலம் ...
வந்தால் உனக்கான வாழ்கையை ....
நீ தேடிகொள்வாய் என்று ஒரு ....
சத்தியம் தருவாயா ....?

+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 10

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என்னவளே என் கவிதை 31-40

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

கவிப்புயல் காதல் சோக கவிதை 11-20