வலிக்கும் இதயத்தின் கவிதை 11-20

காதலில் 
உதட்டால் இன்பம் தந்து ...
இதயத்தில் வலிதருவதே ...
வழமை ....!!!

நீ ஏனடி ...
இதயத்தில் இன்பம் தந்து 
உதட்டால் வலிகளை
தந்துகொண்டிருக்கிறாய் ...!!!

----------

என் இதயத்தை ...
எங்கு என்றாலும் வீசி விடு ...
என் கவிதையை வீசி விடாதே ...!!!
கவிதை எனக்கு பேச்சு அல்ல 
அது என் மூச்சு ....!!!

காதல் 
கண்ணில் ஆரம்பிக்கும்....
அது மாயையாய் மாறலாம் ...
கவிதை உணர்வால் வரும் ...
என்றும் என்னோடு இணைந்து ...
கொண்டே இருக்கும் ...!!!

--------
உன்னை காதலித்து ...
உறவை பெற்று ...
கொள்வதற்காக ....
எத்தனை உறவை ...
தொலைத்து விட்டேன் ....!!!

இப்போ 
உன் உறவும் இல்லை....
எந்த உறவும் இல்லை ... 
வலிக்குது இதயம் மட்டும் ...
அல்ல என் உயிரும் தான் ...!!!

------------
உனக்கு 
எங்கே புரியப்போகிறது ...?
வலியின் வலி ...?
பிறப்பின் போது தாய் ...
உன் வலியை சுமர்ந்தார் ...!!!

காதல் 
இறப்பின் போது ....
உன் வலியை நான் ..
சுமக்கிறேன் ....!!!
-----------
நீ 
நினைக்கும் போதும் ...
விரும்பும் போதும் ...
என்னை பார்த்து சிரிப்பதும் 
பேசுவதும் ....!!!

நீ 
விரும்பாதபோது ...
விலகி நிற்பதும் ...
உன்னால் எப்படி ...
முடிகிறது ...?
என்னிடம் இருப்பது 
ஒரு இதயம் தான் ....!!!
-----------
என்னவோ ...
புரியவில்லை ...?
எனக்கு பிடிக்காததை 
உனக்கு பிடிக்கிறது ...!!!
எனக்கு பிடித்தவை ..
உனக்கு பிடிக்குதில்லை ...!!!

ஏனடி ..
என்னை மட்டும் உனக்கு 
பிடித்திருக்கிறது ,...?
இதுவும் ஒருவகை ..
காதலோ ....?
-------------
நீதான் நினைகிறாய் ....
உன்னை விட்டு நான் ...
தூரத்தில் இருக்கிறேன் ...
விலகி இருக்கிறேன் ...
பாசமில்லாமல் இருக்கிறேன் ...
என்கிறாய் ....!!!

உனக்கு புரியுமா ...?
நான் இங்கு பார்க்கும் 
பார்வைகள் அனைத்திலும் ..
நீயே இருகிறாய் ...
தெரிகிறாய் ....
பேசுகிறாய் ......!!!
-------------
நீ 
தூக்கி எறிந்த இதயம் ...
தவமிருகிறது -மீண்டும் 
நீ வருவாய் என்று ....!!!

எந்த தவத்துக்கும் 
பலன் இருக்கும் ...
உன் மௌனத்துக்கும் 
பலன் இருக்கும் ....!!!
--------------
ஊற்று எடுக்கும் கிணற்றுக்கு ...
எப்படி ஊற்று நிற்காதோ ...
உன் நினைவுகளின் ஊற்றுக்கும் ...
எல்லை இல்லை அன்பே ....!!!

என்னை 
நீ எப்போது நினைகிறாய் ...?
என்று கேட்காதே - என்னை 
கொல்லும் சொல்லாக இருக்கும் ...
உன்னை ( என்னை) நினைகிறாயா ..?
என்று கேள் -என்னை நினைத்து ..
பலநாட்கள் ஆகிவிட்டது ....!!!
-----------
இந்த 
ஜென்மத்தில் எனக்கு 
காதல் வேண்டாம் ....!!!
போதும் நீ தந்த வலியும்...
பிரிவும் ....!!!

வேண்டும் எனக்கு காதல் 
மறு ஜென்மம் இருந்தால் ...
நீ என் காதலாக இருந்தால் ...
நீ வலியை தந்தாலும் ....
நீ என் காதலாக வேண்டும் ...!!!

+
இதயம் வலிக்கும் கவிதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என்னவளே என் கவிதை 31-40

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05