கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05

பிறந்தநாள் கவிதை 
---------
பிறந்து விட்டாய் இந்த 
பூமியை புரிந்து கொள்ள 
பிறந்து விட்டாய் ....!!!

இயந்திரமய உலகம்…….!
எதையும் விந்தையாக செய்யும் 
அதிசய உலகம் ....!!!
விளங்கியும் விளங்காத 
மானிடம்……!
விளங்க முடியாத பாசம் ...
மயங்கி விடாதே ....
நொந்துபோய் வெந்து 
வீழ்ந்து விடாதே ....!!!

தூய சிந்தனைவேண்டும்.
சிந்தித்ததை சீரியதாய் 
செய்ய வேண்டும் ....
உனக்காக எனக்காக 
வாழவேண்டாம் ........
நமக்காக வாழ கற்று கொள்....!!!

வருடங்கள் வருவதும் 
அவை நம்மை கடப்பதும் 
விந்தையில்லையே 
அதற்காக கொண்டாட்டம் 
தேவையில்லையே ....!!!

கடந்த 
வருடத்தில் என்ன ..?
செய்தாய் திரும்பி பார் ...!!!
இந்த 
வருடத்தில் என்ன செய்ய ..?
போகிறாய் .. எண்ணிப்பார் 
பிறந்த நாளில் ஒரு சபதம் எடு 
இருக்கும் தீய குணத்தை 
அழித்துவிடு ....!!!

பிறப்புகளில் உயர் பிறப்பு 
மானிட பிறப்பு ....
இப்பிறப்பில் நீ எல்லாம் 
பெறவும் ....
பெற்றவற்றை உலகிக்கு 
பகிரவும் வாழ்த்துகிறேன் 
மகிழ்கிறேன் உன் பிறந்த 
தினத்தை நினைத்து .....!!!

வாழ்க வளமுடன் 
மிளிர்க தமிழுடன் ....!!!

-----
நண்பனுக்கு பிறந்த நாள் ...!!!
-------------------------------------------

குணத்தின் குன்றா விளக்கு 
குறையை எடுத்து காட்டுவதில் 
குன்றா மணி விளக்கு ....!!!
என் நண்பனுக்கு இன்று 
பிறந்தநாள் பெருவிழா ....!!!

மற்றவர்களுக்கும் அவன் 
ஒரு மனிதன் எனக்கு அவன் 
நடமாடும் தெய்வம் 
துன்பத்தை துடைப்பவன் 
இல்லை -துன்பமே வராமல் 
தடுப்பவன் ....!!!
இன்று அவனின் பிறந்தநாள் 
மணி மகுடம் ....!!!

என் நண்பனுக்கு என்ன 
கொடுப்பேன் - எதை கொடுப்பேன் 
என்னிடம் உள்ள தீய பழக்கத்தை
அவனுக்காக விட்டு விடுவேன் 
அவனிடம் உள்ள நல்ல பழக்கத்தை
அவனிடம் கேட்காமல் 
எடுத்து விடுவேன் .....!!!

இறைவா எனக்கு வரம் 
கொடு -இந்த ஜென்மத்தில் 
மட்டுமல்ல அடுத்த ஜென்மமும்
இவன்தான் என் நண்பன் ...
இந்த ஜென்மத்தில் அவன் 
பிறந்தநாளில் என் வயது கூட 
வேண்டும் -அவன் வயது குறைய 
வேண்டும் ....!!!

மற்றவர்களுக்கு அவனின் 
பிறந்தநாள் இன்று ..
எனக்கு ஆண்டவன் அவதரித்த 
நாள் இன்று .......!!! 
இதற்கு மேல் என்னடா உனக்கு 
வாழ்த்து .....!!!

-----
நண்பா என் பிறந்தநாள் வாழ்த்துகள்...!!!

-------------

தாயை போல் அன்பை தருபவனே ....
தந்தையைப்போல் புத்திமதி சொல்பவனே ....
அண்ணனை போல் ஆபத்தில் உதவுபவனே ....
தம்பியை போல் குறும்பு செய்பவனே ....
மொத்தத்தில் என் குடும்பமாய் இருப்பவனே ....
என் உயிர் நண்பா உனக்கு என் பிறந்தநாள் ...
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் ....!!!

இனம் தெரியாது என் குணம் தெரியாது ....
வசதி தெரியாது என் வாழ்கை தெரியாது .....
குலம் தெரியாது என் கோத்திரம் தெரியாது ....
தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று அன்பு ....
ஆபத்தில் உதவும் பண்பு தோள் கொடுக்கும் ....
துணிவு இதுதாண்டா நட்பென்னும் ஜாதி ....
நண்பா உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் ....!!!

----
ஆருயிர் நண்பா பிறந்தநாள் வாழ்த்துகள் 
-----------

அ-ன்பனே .....
ஆ-ருயிர் நண்பனே .....
இ-னியவனுக்கு இனியவனே ....
ஈ-டில்லா அன்பு உடையவனே ...
உ-னக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ....!!!

ஊ-ர்போற்றும் பண்பாளனே .....
எ-ன்னுயிர் தோழனே .....
ஏ-ற்றத்திலும் இறக்கத்திலும் 
ஐ-க்கியத்தோடு வாழ்பவனே ....
ஒ-ன்றுனரே உனக்கு வாழ்த்துகள் ....!!!

ஓர் கோப்பையில் உண்டோம் ....
ஓர் உடையை மாற்றி அணிந்தோம் ....
ஓர் உயிர் ஈருடலாய் வாழ்ந்தோம் ....
ஓராயிரம் ஆண்டு வாழ்வாய் நண்பா ....
வாழ்த்துகிறேன் நண்பா வாழ்க வழமுடன் ....!!!

----
நண்பனுக்கு( SMS )பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
-----------


நான் வாழ நீ வாழும் நண்பா ...
உனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .... 
இந்த நாளே மீண்டும் நான் பிறந்தநாள்


|||||||||||||||||||||||

நண்பா 
உன்னை வாழ்த்துவதில் ....
மட்டற்ற மகிழ்ச்சி உன் பிறப்பே ....
எனக்கோ உயர்ச்சி ....!!!

|||||||||||||||||||||||

பிறப்பின் புனித்ததை தாய் தந்தார் ....
உறவின் புனித்தத்தை நீ தந்ததாய் ....
வாழ்த்துகிறேன் உனை பெற்றெடுத்த தாயை ....
பிறந்தநாள் வாழ்த்துகள் .....!!!

|||||||||||||||||||||||

என் இதய அரசனுக்கு எனது 
இதயம் கனிந்த பிறந்தநாள் 
வாழ்த்துக்கள்...!!! 
என் பிறப்பால் பெற்ற பலன் 
உன்நட்பு கிடைத்ததே ....!!!

|||||||||||||||||||||||||

இன்று உனக்கு
பிறந்த நாள் இல்லை..,
இந்த பூமிக்கு நட்பின் ...
வலிமையை சொல்லும் நாள் ...!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என்னவளே என் கவிதை 31-40

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10