இனியவனின் சொல்லாடல் கவிதைகள்

புரட்சி 
-----------

இனி 
ஆயிரம் கவிஞர்கள் தோன்றினாலும் ...
ஆயிரம் ஆயிரம் கவிதைகள் பிறந்தாலும் ....
ஓராயிரம் பாராட்டுகள் கிடைத்தாலும் .....
பல்லாயிரம் ரசிகர்கள் வந்தாலும் ........
................................................................அத்தனை அத்தனை புகழ் வந்தாலும்..... 
................................................................அஃது ஒன்றும் பயனே இல்லை...... 
................................................................உலக விடுதலைக்காய் போராடிய......
................................................................எழுச்சிமிகு புரட்சி கவிஞர்களின் ......
................................................................தீப்பொறி பறக்கும் வரிகளுக்கு முன் ....
................................................................நாமெல்லாம் ஒரு தூசி தூசி தூசி ........!!!
பிரான்சில் அடிமை புரட்சி .....
இங்கிலாந்தில் கைதொழில் புரட்சி ......
இந்தியாவில் சுதந்திர புரட்சி ......
சோவியத் ரசியாவில் தொழில் புரட்சி ....
இலங்கை தீவில் வாழுருமை புரட்சி ........
...............................................................பட்டினியால் பிரான்சிய புரட்சி ......
...............................................................பகுத்தறிவால் இங்கிலாந்து புரட்சி .....
...............................................................அடக்கு முறையால் சுதந்திர புரட்சி ......
...............................................................உழைப்பு சுரண்டலால் தொழில் புரட்சி .....
...............................................................ஒடுக்கு முறையால் வாழுருமை புரட்சி ......!!!


^^^

சொல்லாடல் கவிதைகள் 
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம் 

-----------------------------------------------------------------------------

வறுமை விவசாயி 
------------------------------

பானை வினைபவன் வீட்டில் ....
பானை யுண்டு அரிசியில்லை ....
அரிசியை விளைவிப்பவன் வீட்டில் ....
பானையுமில்லை அரிசியு மில்லை ....
விதைத்து விதைத்து உயிர் காத்தவன் ...
விழி பிதுங்கி கிடக்கிறான் மூலையிலே .....

..........................................உண்பதும் உடுப்பதும் ...வயலிலே .......!!!
..........................................உறங்கி விழிப்பதும்........வயலிலே .......!!!
..........................................குடும்பமே உழைக்குது ...வயலிலே ......!!!
..........................................நஞ்சுடன் வாழ்கிறான் ...வயலிலே .......!!!

வறுமை ஒரு கொடுமை ........
கடுமையாய் உழைத்தும் ....
கடுகளவேணும் குறையவில்லை .....
கடன் பட்ட விவசாயி வீட்டில் .....
................................................................கை கால் மறத்துபோக......
................................................................மெய் உடல் இழைத்து போக .....
................................................................கண்கள் மறைந்து போக .....
................................................................காத்திருக்கிறான் அடுத்த போகம் ....!!!

^^^

சொல்லாடல் கவிதைகள் 
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என்னவளே என் கவிதை 31-40

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05